தமிழ்மொழி, ஏட்டுச்சுவடிப் பரிமாணத்தைக் கடந்து அச்சுநிலை அடைந்து வளர்ந்து வந்துள்ள வரலாற்றை மிகச் சுருக்கமாகத் தெரிந்து கொள்ளப் பெரிதும் பயன்படத்தக்கது என்கிற கோணத்தில் ‘தமிழ்ப் பதிப்புலகம் (1800 \2009 ) சிறப்பு மலரை’ வரவேற்கத்தக்க ஒரு சீரிய முயற்சி என்று எடுத்த எடுப்பில் சொல்லிவிட முடியும். இருநூறு ஆண்டுக்காலப் பதிப்பு வரலாற்றுக்குப் பின்புலமாய்த் தமிழர் சமூகவரலாறு, பண்பாட்டு வரலாறு, மொழி, இலக்கியவரலாறு எனக் கனத்த அடித்தளம் மாறிக்கொண்டே வரும் இயங்கியல் தன்மை ஆகியவற்றை ‘அச்சாக்க வரலாறு’ என்கிற ஒற்றைப் பரிமாணத்தில் அடக்கிவிட முடியாது. ஆயின் விரிவான பார்வைத் தளங்களைத் திறந்து விடுவதற்கு முன்னோடியான முயற்சிகள் நமக்குத் தேவை. இத்தேவையை உளங்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இம்மலர் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், பொதுநிலைப்படிப்பாளர்கள் எல்லாருக்குமே பயன்படத்தக்கதாய் இருப்பதை எவரும் பாராட்டவே செய்வர்.
இனி அச்சிடுவதற்கு ஒன்றுமில்லை என்று சொல்லிவிட முடியாதபடி, தொன்மைய இடைக்காலத்திய ஓலைச்சுவடிகள் இன்னும் எவ்வளவோ இருக்கக்கூடும். அச்சுக்கு வராமல் அழிந்தனவும் சிதைந்தனவும் உண்டு. அவ்வாறே சிதைக்கப்பட்டனவும் மறைக்கப்பட்டனவும் கைவிட ப்பட்டனவும் ஏராளமாக இருக்கலாம். அச்சுக்கு வந்தும் இன்றுவரை கண்ணில் படாதனவும் கைக்கு வராதனவும் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. தமிழ்நாட்டளவில் மட்டு மின்றி இந்திய அளவுகடந்து, தொல் தமிழ் ஏட்டு, அச்சுச்சுவடிகள் அயல் நாட்டு நூலகங்கலும், அருங் காட்சியகங்கலும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இப்படிப்பட்ட சிந்தனைகளை எல்லாம் கிளறிவிடுகின்ற நன்முயற்சியைப் ‘புத்தகம் பேசுது இதழ்’ முன்னெடுத்திருக்கிறது இம்மலர் வழியாக.
ஆய்வு நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய செயற்பாட்டுத் தன்மையோடு ‘புத்தகம் பேசுது’ இதழ் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டு இருநூறு ஆண்டுக்காலப்பதிப்பு வரலாற்றை மிகுந்த அக்கறையோடு வெயிட்டிருக்கிறது.
இத்துறையிலான தனிமனித, நிறுவன முயற்சிகள் அவ்வப்போது வெப்பட்டு வருவது கணக்கில் எடுத்துக்கொள்ளத்தக்கவை எனினும் தமிழ்ப்பதிப்புப் பணிகள் குறித்து இம்மலர் வெப்படுத்தும் கோண ங்களும் குறிப்புகளும் விரிவான அவதானிப்புக்கும் ஆய்வுக்கும் வழி கோலுவதை விதந்து சொல்லலாம் பொருத்தமானதே. ஒருவகையில் இம்மலர் தமிழ்ப்பதிப்பு வரலாறு குறித்த தகுதியான கையேடாக அமைகிறது என்று நான் சொல்வேன்.
ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரனார், உ.வே. சாமிநாதனார், வ.உ. சிதம்பரனார், வையாபுரியார், மு. அருணாச்சலனார், என இப்படிப்பட்ட நிறுவன நிலையத் தனிமனிதர்கள் ஆற்றிய தமிழ்ப் பதிப்புப் பணிகள் இம்மலரில் சுருக்கமான அளவில் இடம் பெற்றிருக்கின்றன. இத்தகைய ஒவட்டம் பெற்ற பதிப்புச் செம்மல்கன் தனிப்பட்ட பண்பாட்டு, விருப்பு, வெறுப்புகள், கருத்து நிலைகள் பதிப்புப் பணி கனூடாக அங்கங்குப் பதிவாகி இருப்பதையும் கட்டுரையாளர்கள், சுட்டத் தவறவில்லை. முந்தைய பதிப்பாசிரியர்கள் பெயர்களைக் குறிப்பதும் குறிக்காமல் விடுவதுமாகிய பதிப்பாசிரியப் பண்பாட்டுத் தகவுகளும் இம்மலரில் பதிவாகி இருக்கின்றன.
கல்விசார் நிறுவனங்களும், சமயம் சார் நிறுவனங்களும், தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் பாரிய பங்கப்பைச் செய்திருக்கின்றன. பொதுநோக்கும், தனிநோக்கும் தனித்தும் உறவு ஊடாட்டத்தோடு பின்னிப் பிணைந்தும், இந்நிறுவனங்கள் தமிழின் பழஞ்செல்வங்களைப் பாதுகாப்பதிலும் புதுச்செல்வங்களை உருவாக்குவதிலும் தத்தமது கோட்பாடுகளுக்கு ஏற்பச் செயல்பட்டு வந்திருக்கின்றன என்பதைச் சில கட்டுரைகள் எடுத்துக் காட்டுகின்றன.
அரசியல், சமுதாய இயக்கங்களாக முதன்மை நிலையில் கருத்தக்க தேசிய இயக்கம், திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம் என்பன தமிழை எவ்வாறெல்லாம் அச்சுவடிவில் கையாண்டிருக்கின்றன என்பதை நூல்கள் வடிவத்தில் நாம் கண்டிருக்கிறோம். ஆயின் சாரமாக இவ்வியக்கங்கன் பதிப்பு வரலாற்றை இம்மலரில் காணும்போது ஒப்பீட்டுப் பார்வைக்குச் சட்டென்று உதவ வல்லதாக இதனைக் கருதமுடியும்.
பொதுக்கட்டுரைகள் என்கிற பகுதியில் அயலகத் தமிழர்கன் பொதுநிலைக் கட்டுரைகளும் அயலகங்கல் தமிழ்ப் பதிப்பு வரலாறு குறித்த சிறப்பித்துச் சொல்லத்தக்க கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. ‘ஈழத் தமிழ்ப் பதிப்புலகம்: பிரச்சனைகளும் செல்நெறியும்’ என்ற தலைப்பிலான ந. இரவீந்தரனின் செறிவான கட்டுரையும் அவர் தந்துள்ள பின் இணைப்பும் பெரிதும் பயன்படத்தக்கன. இக்கட்டுரையோடு ‘நூற்றொகைப் பதிப்புகள்’ என்னும் விவரக்குறிப்புகளும் அட்டவணைகளும் கொண்டது. குமரேசனின் கட்டுரை.
இப்பொதுக்கட்டுரைப் பிரிவிலேயே கிறித்தவ, வைணவ, பௌத்த, இஸ்லாமியப் பதிப்புகள் குறித்த அளவுகடவாத சிறந்த கட்டுரைகள் அமைந்துள்ளன. இப்பகுதியில் வீ. அரசு எழுதியுள்ள “பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அச்சுப் பண்பாடும் புத்தக உருவாக்கமும்’’ என்கிற கட்டுரை பதிப்புக் கலையைப் புத்தொச் செயல்பாடாகக் கோடிட்டுக் காட்டுவதன்றியும். கட்டறுத்த மானுட உரிமைக் கருத்து இயல்கன் தேட்டத்தை வெப்படுத்துவதாகவும் உள்ளது.
பல்கலைக் கழகங்கன் பதிப்புப் பணிகள் பேசப்படும் பகுதியிலேயே மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் தஞ்சை சரசுவதி மகால், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் போன்ற அமைப்புகன் முயற்சிகளும் வெப்பாடுகளும் கட்டுரைகளாகியிருக்கின்றன. பல அரிய செய்திகளையும், ஆய்வுப் பார்வையையும் உள்ளடக்கிய இக்கட்டுரைகள் வரிசையில் சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை பற்றி வ. செயதேவன் எழுதியுள்ள நீண்ட கட்டுரை நின்று பயன் சுரக்கிறது. சென்னைப் பல்கலையின் சிறப்புக்குத் தனி அடையாளமாக அகராதியியல் துறையில் முன்னோடி முயற்சியான அதன் தமிழ்ப் பேரகராதித் தொகுதிகளை அவர் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.
இச்சிறப்புடைய மலரில், நாளைய தமிழ்வானை அலங்கரிக்கப் போகும் நம்பிக்கை நட்சத்திரங்களான இளைய ஆய்வாளர்கள் உரிய இடத்தைப் பற்றிருக்கிறார்கள்.
பா. இளமாறன், கோ. கணேசன், அ. சதீசு, இரா. வெங்கடேசன், ஜ. சிவகுமார் என நீளும் பட்டியலைப் பக்குவம் அடைந்துவரும் ஆய்வு இளைஞர்களிடமிருந்து பதச்சோற்றுப் பாகமாக எடுத்துக்காட்டலாம்.
‘புதிய புத்தகம் பேசுது’, இதழ் இப்படி ‘மலர்’ வடிவம் கொண்டிருக்கிறது: கோத்தும்பிகள் மொய்க்கவும் பயன் துய்க்கவும் வாய்ப்புண்னென்று அழைப்பு விடுக்க அவசியம் இல்லை என்று நான் கருதுகிறேன்.