அரவிந்த் பாரதி எழுதிய “வென் தி கேட் குளோஸ்டு" When the gate closed நாவல் அமேசான் போன்ற சமூக வியாபாரத்தளங்களில் குறிப்பிட்ட இடத்தைப் பெற்றிருப்பதால் பலரின் கவனத்திற்குச் சென்றிருக்கிறது.

arvind bharathi novelஇன்றைக்கு நாவல் உலகம் மற்றும் திரைப்பட உலகங்களில் கல்லூரி சார்ந்த வாழ்க்கையை எழுதுவது வியாபார ரீதியாக வெற்றிகரமானதாக இருக்கிறது.

பல மொழிகளில் இதுதான் கடைவிரிக்கப்படுகிறது. இந்திய அளவில் கூட. சேட்டன் பகத் உட்பட பல எழுத்தாளர்கள் இதில் வெற்றிகரமாக இருக்கிறார்கள் கல்லூரி வாழ்க்கையை எழுதுவதில் மற்றும் புத்தகங்களை வெளியிடுதல் பலருக்கு உவப்பாக இருந்தாலும் அதில் சமூக ரீதியான விஷயங்களைக் கொண்டு வருவது என்பது சிலருக்கு மட்டும் கைகூடுகிறது

ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர் அரவிந்த் பாரதி இந்த வகையில் ஆங்கிலத்தில் எழுதி வெளிவந்திருக்கும் நாவல், கல்லூரிக் களத்தைக் கொண்டது. கல்லூரி இளைஞர்களின் மனப்போக்கையும் அவர்களின் வாழ்வியலையும், உணர்வுகளையும் சொல்லும் நாவலாகும்.

இந்த நாவலில் வருகிற கதாநாயகனின் சொந்த ஊர் கோவையாக இருந்தாலும் வெளியூரில் சென்று படிக்க ஆசைப்படுகிறான் ஆனால் பெற்றோர் அங்கேயே படிக்க வற்புறுத்துகிறார்கள் அவர்களுடைய வார்த்தைகள் எல்லாம் அவனுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. அந்தக் கல்லூரி வாழ்க்கையை அவன் எப்படி மேற்கொண்டான் என்பது நாவலில் பெரும்பாலும் இருக்கிறது

அந்த அனுபவங்களை, விமானத்துக்காகச் சென்னை விமான நிலையத்தில் காத்திருக்கிற போது எண்ணிப் பார்ப்பதும் அது பற்றி எழுதியதை படித்துப் பார்ப்பதும் என்று நிகழ்கிறது

கல்லூரி விடுதி நாட்கள் முதல் கண்டதும் காதல், கல்லூரி நண்பர்கள் உலகம் என்று இந்த நாவல் அமைந்திருக்கிறது. இதில் வருகிற கதாநாயகன் வினித் இரண்டு பேர்களால் தன் வாழ்க்கையின் ஒரு பகுதியைச் செம்மையாக்கிக் கொள்கிறான். அதில் ஒரு பெண் வருகிறாள். அவனுடன் பழகுகிறாள். ஆனால் அவள் மீது வைக்கப்படுகிற வீணான குற்றச்சாட்டுகளால் கல்லூரியில் இருந்து வெளியேறினாள். இன்னொருவர் நண்பர் வாகன விபத்தில் இறந்து போகிறார். இவர்கள் இருவரும் அந்த இளைஞரை எப்படி வாழ்வியல் அனுபவங்களுக்குக் கொண்டு போனார்கள், அவனை எப்படி செம்மைப்படுத்தினார்கள் என்பது பல அனுபவங்களால் இந்த நாவலில் நிரப்பப்பட்டு இருக்கிறது. தாயின் அன்பு, தந்தையின் லேசான கண்டிப்பு, கல்லூரிப் பருவ விஷயங்கள், நண்பர்கள் கல்லூரி விடுதி வளாகம் என்று இந்த நாவல் அமைந்திருக்கிறது. வித்யா, அருண் போன்ற முக்கிய கதாபாத்திரங்கள் அவர்களது உணர்வுகளோடு இது வெளிப்படுகிறது.

எந்த உடை உடுத்துவது என்பதில் உள்ள சர்ச்சை கூட முக்கியமானதாகிறது. சேலை என்பது எப்படி கௌரவமானது என்று பல சமயங்களில் பொதுப்புத்தியில் வளர்க்கப்படுகிறது. சுடிதார் என்பதைத் தவிர்த்து விடுவதும் அப்படித்தான். அதேபோல சாப்பாட்டு விஷயத்தில் உள்ள தேர்வு என்பதும் சொல்லப்படுகிறது.

இந்த இளைஞர்கள் மத்தியில் காணப்படும் விரக்தியும் குடும்பமும் சுற்றத்தில் இருந்து விடுதலை ஆகிற திடீர் எண்ணங்களும் இந்த நாவலை ஆக்கிரமிக்கின்றன. கல்லூரிப் பருவங்கள் சரியாகப் பதிவு செய்யப்பட வேண்டியவை, கேளிக்கை அம்சங்கள் அல்ல என்பதன் பார்வையை இந்த நாவல் வலியுறுத்துகிறது

ஆங்கிலத்தில் எளிமையாக உருவாக்கப் பட்டிருக்கிறது. அங்கங்கே கவித்துவமான வாக்கியங்கள் சிறப்பு செய்கின்றன. கல்லூரி வளாகம் சார்ந்த ஆங்கில நாவல்களில் வரிசையில் இந்த நாவலுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு... கொஞ்சம் சமூகவியல் அக்கறையோடு கதாபாத்திரங்களின் இயல்புகள் சித்திரிக்கப்படுவது என்பதால், மற்றைய கல்லூரி வளாக நாவல்களிலிருந்து இது வேறுபட்டு ஒளிர்கிறது.

சுப்ரபாரதிமணியன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.