தேர்தலுக்கு முன்...
தேடிச் சென்று
பார்க்கின்றனர்
தேவை இல்லாத
இலவசத்தையும்
தேவையாக்குகின்றனர்....
ஐயா... என்று
தேடிச் சென்று
சிக்கல்கள்...
கூறி
அழுது புரண்டாலும்
சிக்கல்கள் முடிவதில்லை
தேர்தல்கள் மட்டுமே முடிகின்றன...
தேடுகின்றோம்
நல்ல தலைவனை.
தேர்தல்
ஒரு தேடலே...!

- தமிழமுது, புதுச்சேரி

Pin It