மரண வாசனை கண்டால்
நாய்கள் கூட ஓலமிடும்
தமிழா!
நீ உறங்கிக் கொண்டிருந்தாய்
உன் இனம்
ஈழத்தில்
கொத்துக் கொத்தாய்
கொல்லப்பட்டபோது

துக்கம் தீரவில்லை.
மிச்சம் பிழைத்த தமிழன்
சிங்களச் சாத்தான்
வாயிலிருந்து
இன்னும் மீளவில்லை.
தீபாவளி, ரம்ஸான், ஈஸ்டர்
பண்டிகைகளுக்கு
தமிழகத்தில் குறைவில்லை

அரச பயங்கரவாதத்தில்
வெடித்துச் சிதறின
தமிழர் உடல்கள்
புதைப்பதற்கு
ஈழத்தில் யாருமில்லை.
பட்டாசு ஆயிரம் வகை
இனிப்பு நூறு வகை
வெடிக்கவும் உண்ணவும்
புத்தாடையில் தீபாவளிக்கு
சொலிக்கவும் தயாராய்
ஆறுகோடி தமிழரின் தமிழகம்

இழவுக்கு இழவு
குடித்து வெடித்து ஆடி
பழகிப் போன தமிழனிடம்
வேறென்ன எதிர்பார்ப்பது?

Pin It