ஒரு குழப்பமான நிலையில் தமிழ்நாடு அரசியல் இருக்கிறது. சட்டமன்றத்தில் பொய்களைத் தவிர ஆக்கபூர்வமானவை பேசப்படுவதில்லை.
எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதல்வர் விஜய் வாய்திறந்து பதில் சொல்வதில்லை. எதிர்கட்சித் தலைவர் உதயநிதியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில்கூற முடியாமல், மூன்று நாள்களுக்குப்பின் பதில் சொல்கிறேன் என்று பாதியில் வெளியே செல்கிறார் முதல்வர்.
ஆதவ் அர்ஜுனாவும், நிர்மல்குமாரும் தான் ஆட்சியின் தலைவர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அவர்களுக்குப் பின்னால் பாஜகவின் நிழல் தெரிகிறது.
பரந்தூர் விமான நிலையம் கைவிரிப்பு, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இருட்டடிப்பு, தொகுதி மறுசீரைப்பில் இரட்டை வேடம் இப்படி பாஜகவிற்கான விஜயின் நிழல் நிஜமாகிக் கொண்டிருக்கிறது.
விசிகவும், இந்திய தேசிய முஸ்லிம் லீக்கும், இரு கம்யூனிஸ்டுகளும் ஆட்சிக்கு முட்டுக்கொடுப்பதற்குப் போட்டி போடுகிறார்களே தவிர, நாட்டின் நலன்கருதி தட்டிக் கேட்பவர்களாக இல்லை.
இப்படிப்பட்ட குழப்பமான நிலையில், ஐயா தந்தை பெரியார் வழியில், தலைவர் ஸ்டாலின் கரங்களை வலுப்படுத்துவதில் 'திராவிட இயக்கத் தமிழர் பேரவை' பின்தங்கியது இல்லை.
பத்தொன்பது ஆண்டுகளைக் கடந்து செயல்பட்டுக் கொண்டு இருக்கும் பேரவை, முன்பைவிட இப்போது கூடுதல் முனைப்போடு செயல்படுகிறது.
பேரவைத் தலைவர், பொதுச் செயலாளர் வழிகாட்டலில் பேரவை ஆரியத்தை வீழ்த்தவும், திராவிடத்தை ஏந்தவும் வலிமையாக உறுதியேற்கிறது.
- கருஞ்சட்டைத் தமிழர்