கர்நாடகத்தில் மேகதாது என்ற இடத்தில் அணை கட்டத் தீவிரம் காட்டி வருகிறது அம்மாநில அரசு. அதற்கான நிதிக்காக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வரை போய்விட்டார் முதல்வர் சிவகுமார். அதுமட்டுமல்லாமல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட்டியிருக்கிறார் டில்லியில்.

தமிழ்நாடு முதல்வர் என்ன செய்கிறார்? என்ன செய்யப்போகிறார்? இவர் தமிழ்நாட்டின் விஸ்வகுரு. மோடியைப் போலப் பேசவே மாட்டார்?

"இங்கே வாருங்கள் பேசலாம்" அழைத்தார் கர்நாடக முதல்வர் சிவகுமார். “சரி" என்று தலையாட்டினார் தமிழ்நாடு முதல்வர் விஜய். சிலநாள்களில் "வரவேண்டாம்" என்றார் சிவகுமார். "சரி" என்று அதற்கும் தலையாட்டிவிட்டார் விஜய்.

இதற்கிடையில் அரசின் நிலை தெரியாததால் மேகதாது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது திமுகழகம். இதைப் பார்த்து ஆரஅமர நிதானமாக இப்போதுதான் நீதிமன்றம் போயிருக்கிறது தவெக அரசு.

சட்டமன்றத்திலும் இதற்கான விளக்கம் இல்லை, மக்கள் மன்றத்திலும் விளக்கம் கொடுக்க முதல்வரால் முடியவில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட கூட்டவில்லை விஜய்.

தேர்தலுக்கு முன்பு 2,500 ரூபாய் தருவேன், 6 சிலிண்டர் தருவேன், கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை பெண்களுக்கு இலவசப் பயணம் தருவேன், விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வேன் என்று தம்பட்டம் போட்ட விஜய், இந்த நிதிநிலை அறிக்கையில் அவைகளை இருட்டடிப்பு செய்து விட்டார் என்பது அவரை அடையாளம் காட்டுகிறது, மக்களிடம்.

அதுபோலத்தான் மேகதாது அணை விவகாரத்திலும் தெளிவான முடிவு இல்லாமல் இருக்கிறது தமிழ்நாடு அரசு.

"நீரின்றி அமையாது உலகு" என்கிறார் திருவள்ளுவர்.

மேகதாது அணை - என்ன செய்யப்போகிறார் முதல்வர் விஜய்?

- கருஞ்சட்டைத் தமிழர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.