ரஷ்யப் புரட்சியாளர் ஜோசப் ஸ்டாலின் மறைவதற்கு நான்கு நாள்களுக்கு முன்னர் பிறந்தவர் மு.க.ஸ்டாலின்.

அவர் போல்ஸ்விக் கட்சியின் தலைவர், இவர் தி.மு.கழகத்தின் தலைவர். இருவரும் நாத்திகர்கள். இருவரும் கொள்கையிலும், செயல்பாட்டிலும் உறுதியானவர்கள்.

2021 மே, 7ஆம் நாள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தலைவர் ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற போது இந்திய ஒன்றியமே, இன்று சீனாவில் இருப்பதைப் போல கொரொனாவால் சீரழிந்து கொண்டு இருந்தது.

mk stalin 277உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் உள்ளிட்டப் பல மாநிலங்கள் பிணங்களை எரிக்க முடியாமல் தெருவோரங்களில் கிடத்தியிருந்த கொடுமையைப் பார்த்தோம்.

தமிழ்நாட்டில் மாண்புமிகு முதல்வரின் நிர்வாகத் திறமையாலும், விரைந்த - சோர்வில்லாச் செயல்பாட்டாலும் கொரொனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தினார்.

 பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம்.

 மக்களைத் தேடி மருத்துவம்.

 தமிழ்நாட்டின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை.

 இல்லம் தேடிக் கல்வி.

 அரசுப் பள்ளி மாணவியருக்கு மாதம் 1,000 ருபாய்

 நான் முதல்வன்.

 பசுமைத் தமிழ்நாடு இயக்கம்.

 புதுமைப்பெண்.

 முதலமைச்சரின் காலைச் சிற்றுண்டித் திட்டம்

 இன்னும் சொல்லப் போனால் நம் முதலமைச்சரின் மக்களுக்கான சாதனைப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் 2019ஆம் ஆண்டில் நடத்திய ஆய்வில், இந்திய ஒன்றியத்தின் சக்தி வாய்ந்த தலைவர்களுள் தலைவர் ஸ்டாலினும் ஒருவர்.

‘இந்தியா டுடே’ இதழ் 2022, ஆகஸ்டில் நடத்திய கருத்துக் கணிப்பில், இந்திய ஒன்றிய முதல்வர்களுள் முதல் இடத்தைப் பிடித்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

2023ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற ஆளுநர் உரையின் போது, தமிழ்நாடு அரசு ஆளுநரின் முன் ஒப்புதலோடு தயாரித்துக் கொடுத்த உரையில் சமூக நீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, தமிழ்நாடு, தமிழ்நாடு அமைதிப் பூங்கா போன்ற சொற்களையும், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், தலைவர் கலைஞர் ஆகிய பெயர்களையும் வெட்டியும், அவருக்கு ஏற்றவாறு ‘இந்த’ போன்ற சொற்களை ஒட்டியும் பேசி சட்டமன்ற மரபை மீறினார்.

ஆளுநர் பேசும்போதோ, அதற்கு முன்போ, பின்போ யாரும் குறுக்கிட்டுப் பேசக்கூடாது என்பது விதி. அந்த 17ஆம் விதியில் திருத்தம் கொண்டு வந்து, ஆளுநரின் உரையைத் தவிர்த்து, அரசு தயாரித்த உரையை அப்படியே அவைக் குறிப்பில் பேரவைத் தலைவர் மூலம் ஏற்றிடச் செய்த துணிச்சலான செயல் இந்திய ஒன்றியத்தில் எந்த மாநிலத்திலும் இதுவரை நடைபெறவில்லை என்பது வரலாறாகப் பதிவாகியிருக்கிறது.

அமைதியான முகம், மென்மையான பார்வை, தெறிக்க விடும் சின்னச் சிரிப்பு, அமைதி, பொறுமை, கழகத் தோழர்களை அரவணைக்கும் பாங்கு, முதலமைச்சருக்கான திறமை, செயல்பாடுகள் எனத் தலைவரின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இவ்வாண்டு, தமிழர்களின் தைத்திரு நாளில் தலைவரை வாழ்த்துவோம், அவரின் கரத்தை வலுப்படுத்த உறுதியேற்போம்!

- எழில்.இளங்கோவன்

Pin It