mk stalin tributes nedunchezhiyan statueசென்னை சேப்பாக்கம் விருந்தினர்  மாளிகையில் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் சிலையை, 26 - 12 - 2021 அன்று  முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துள்ளார்.

 “தலை சிறந்த பகுத்தறிவுவாதிகளில் ஒருவர், எனக்கே பாடம் கற்றுத் தரும் அளவுக்குத் தகுதி வாய்ந்தவர் நாவலர்!’’ என்று தந்தை பெரியாராலும்.....

“தம்பி வா, தலைமை ஏற்க வா, நாட்டுக்குக் கிடைத்திருக்கும் நல்லவரே, நாவலரே!’’ என்று அறிஞர் அண்ணாவாலும்....

“நடைமிடுக்கும், நகைச்சுவை எடுப்பும், நற்றமிழ் பேச்சால் நாட்டோரைக் கவர்ந்திழுக்கும்,  நாவன்மை மிக்க நாவலரே!” என்று தலைவர் கலைஞராலும் பாராட்டப் பெற்றவர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள்.

இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது, இவரோடு பயின்ற பேராசிரியர் அன்பழகன் அவர்களுடன் சுயமரியாதைக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு 1944இல் திராவிடர் கழகத்தில் இணைந்து, பின் 1949 ஆம் ஆண்டு அண்ணாவுடன் தி.மு.கழகத்தில் சேர்ந்தார்.

கழகத்தின் பிரச்சாரக் குழுத் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும், 1967 இல் அண்ணா அமைச்சரவையிலும், பின்னர் கலைஞர் அமைச்சரவையிலும் கல்வியமைச்சராக இருந்து செயல்பட்டவர் நாவலர்.

சிறந்த இலக்கியவாதியாகவும், இயக்கவாதியாகவும், எழுத்தாளர், பேச்சாளர், இதழாளர் என்ற பன்முகத் தன்மை கொண்ட நாவலரின் சிலையை  இன்றைய கழகத் தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்கரங்களால் திறந்து வைத்திருப்பது மிகவும் பெருமைக்கு உரியதாகும்.

காரணம் நாவலர் மறையும் போது அவர் தி.மு.கழகத்தில் இல்லை; அதற்காக முதல்வர் அவரைப் புறக்கணிக்கவும் இல்லை!

Pin It