ஆளுநருக்கான வீட்டுச் செலவுக்கு கடந்த ஆண்டு 15.93 கோடி ரூபாய் என்று இருந்ததை, இந்த ஆண்டு 16.69 கோடி ரூபாயாக அதிகப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு.

இரண்டு கோடி, இரண்டு கோடி என மொத்தம் நான்கு கோடி ரூபாய், ‘‘அட்சய பாத்திரம்’’ என்ற திட்டத்திற்கு வழங்கப்பட்டதாகச் சொன்னாலும், அதை ஆளுநருடைய வீட்டுச் செலவு வங்கிக் கணக்கில் மாற்றப்பட்டு உள்ளதாகவும், மீதி வேறு ஒரு இடத்திற்குச் சென்றுள்ளது என்றும் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் சட்டமன்றத்தில் கூறியிருக்கிறார்.rn ravi 400Petty grants என்ற கணக்கில் மொத்தம் ரூ.18.38 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 11.32 கோடி ரூபாய் ஆளுநர் வீட்டுச் செலவுக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. அதன் செலவுக் கணக்குகள் அரசுக்குத் தெரியாது. இது விதிமுறை மீறல் என்று சுட்டிக் காட்டுகிறார் நிதியமைச்சர்.

2021 செப்டம்பருக்குப் பிறகு யு.பி.எஸ்.சி மாணவர்கள் கூட்டத்திற்கு 5 லட்சம், தேநீர் விருந்துக்கு 30 லட்சம், ஊட்டி ராஜ்பவனில் கலாச்சார விழாவிற்கு 3 லட்சம் என்று petty grants நிதியில் செலவிடப்பட்டுள்ளது.

இந்தப் பிரிவில் ஒரே நபருக்கு ரூபாய் 58 லட்சம் வீதம், மீண்டும் மீண்டும் தொகை கொடுக்கப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு போனஸ் என்று ஒரு முறை 18 லட்ச ரூபாயும், இன்னொரு முறை 14 லட்ச ரூபாயும் கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார் அமைச்சர்.

ஒன்றிய அரசின் முகவராக (Agent) இருந்து கொண்டு சட்ட மசோதாக்களுக்குக் கையெழுத்திடும் ஒருவருக்கு அரசு கொடுக்கும் நிதியே மிக அதிகம். அதிலும் விதிமுறை மீறல் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

இதுபோன்ற விதிமீறல் கட்டுப்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் சொல்லியிருப்பது ஆறுதலாக இருக்கிறது.

அறிஞர் அண்ணா தெளிவாகச் சொன்னார்,“ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை”

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It