அறுந்து வீழ்ந்த கழுகின் சிறகில்
ஓய்வெடுக்கும் சின்னச் சிட்டுக்குருவி
வார்த்தை இல்லாத அதிகாலை மனதில்
ஆர்ப்பரிக்கும் கடலின் சங்கீதம்
முல்லை கேட்டது சிவப்பு பூவை
எனக்குத் தருவாயோ உன் சிவப்பை?
தொட்டில் கேட்டது எனக்குத் தருவாயா
கொழுத்தியச் சவக் குழியில் இருந்து
ஒரு குஞ்சை
விபச்சாரத்திற்கு அழைத்தவன்
இன்றும் அதிருப்தியாகவே
காலம் கொடுக்கிற
குற்றம் செய்யாது
அரிச்சந்திரனின் கையில் வியர்வை
நரம்புகள் கொண்டு
ஊஞ்சல் கட்டும்
கைகளாம் பைத்யத்தின்
கனவுகள்
ரத்தமும் வியர்வையுமாய்
யுத்தம் ஏற்படும்போது
உற்று நோக்குவதில்லை
நீதிமன்றங்கள்.
- ஏ.அய்யப்பன் / தமிழில் :சுப்ரபாரதிமணியன்