கடந்த 2014 நவம்பர் 27 லிருந்து இன்றுவரை கேரள வனத் துறையினர் தமிழகத்திற்குரிய முல்லைப் பெரியாறு அணைக்கு, தமிழகப் பொதுப்பணித் துறை அதிகாரிகளும் ஊழியர்களும் செல்ல முடியாதபடி தடுத்துள்ளார்கள். தேக்கடி வழியாக படகில் செல்ல முடியாதபடியும் வல்லக்கடவு தரை வழிப் பாதை வழியாக தமிழக அதிகாரிகள் அணைக்கு வர முடியாதபடியும் தடுக்கப்பட்டுள்ளார்கள். அணையில் உள்ள ஒரு இளநிலைப் பொறியாளர் மற்றும் ஊழியர் இருவருக்கும் உணவுக்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உடை மாற்றிக் கொள்ளக்கூட வழியில்லாமல் இருக்கிறார் கள். அவர்கள் தங்கள் குடும்பத்தினரைப் பார்க்க முடியாத அவல நிலை மாதக் கணக்கில் நீள்கிறது.

ஒரு வகையில் பிணைக் கைதிகளைப் போல் அவர்கள் அங்கே இருக்கிறார்கள். கேரள அரசின் இந்த சட்டவிரோதத் தடுப்புச் செயலையும் அட்டூழியத்தையும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

முல்லைப் பெரியாறு அணைக்கு தமிழக அதிகாரிகளைப் போகவிடாமல் தடுத்துவிட்டு, தமிழ கத்தின் கண்காணிப் பில்லாத நேரத்தில் முல்லைப் பெரியாறு அணையில் வெடிகுண்டு வைத்து கேரள அரசு தகர்த்து விடுமோ என்ற அய்யமும் அச்சமும் ஏற்படு கிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, உச்ச நீதிமன்றம் அமைத்த கண்காணிப்புக் குழுவின் ஒப்புதலோடு இவ்வாண்டு முல்லைப் பெரியாறு அணையில் தமிழகப் பொதுப்பணித் துறையினர் 142 அடி தண்ணீர்த் தேக்கியதற்கு எதிராகப் பழிவாங்குவதற்காகவே கேரள ஆட்சியாளர்கள் தங்களின் வனத் துறையினரைத் தூண்டிவிட்டு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட வைத்துள்ளனர். கேரள அரசின் இந்த அராசகத்தைத் தடுக்க இந்திய அரசு என்ன செய்தது, தமிழக அரசு என்ன செய்தது என்ற வினாக்கள் தமிழக மக்களிடம் எழுந்துள்ளன.

எப்பொழுதுமே தமிழகத்தைப் பாகுபாடாகப் பார்த்து ஓரவஞ்சனை செய்துவரும் இந்திய அரசுக்கு, தமிழக அரசு எந்த வகை நெருக்கடியும் கொடுக்காதது மிகவும் வசதியாகப் போய்விட்டது.

முல்லைப் பெரியாறு அணையைச் சுற்றி தேக்கடி உள்ளிட்டு 8,000 ஏக்கர் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் தமிழக அரசின் நிர்வாகத்திற்கு உட்பட்டவை. இந்நிலப்பரப்பை ஒப்பந்தபடி 999 ஆண்டுக்குத் தமிழக அரசு குத்தகைக்கு எடுத்து அதற்குரிய குத்தகைத் தொகையை கேரள அரசுக்கு செலுத்தி வருகிறது. கேரள அரசு மேற்படி குத்தகை நிலப் பரப்பில் விடுதிகள், பல்வேறு அரசு மற்றும் தனியார் கட்டடங் கள் கட்டிக் கொண்டபோது தமிழக அரசு அதைத் தடுக்க வில்லை. உருப்படியான எதிர்ப்பு எதையும் தெரிவிக்க வில்லை.

இந்தத் துணிச்சலில்தான் இப்பொழுது தமிழகப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் வழக்கம்போல் அன்றாடம் அணைக்குச் சென்றுவர அடையாள அட்டை மற்றும் கையப்பம் ஆகியவற்றைக் கேரள வனத்துறை கேட்கிறது. தமிழக அரசின் அனுபோகத்தில் உள்ள குத்தகை நிலப்பரப்பில் - நீர்ப்பரப்பில் சென்றுவர கேரள வனத் துறையிடம் ஒவ்வொரு தடவையும் அடையாள அட்டை காட்டி அவர்களின் ஒப்புதலுக்காக கையப்ப மிட்டு அவர்களிடம் அனுமதி கேட்க வேண்டிய தேவை எங்கிருந்து வருகிறது? தமிழக அரசின் செயலற்றத் தன்மையானது, கேரள அரசின் இனப்பகை அராசகம் அரங்கேற வாய்ப்பளித்துள்ளது.

தமிழக முதலமைச்சரும் பொதுப்பணித் துறை அமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் முன்னாள் முதல்வர் செயலலிதா அவர்கள் நீதிமன்றத் தண்டனையி லிருந்து விடுபடுவதற்காகத் தமிழகம் முழுவதும் கோயில்களில் வேண்டுதல் விழாக்கள் நடத்துவதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். தமிழக மக்களின் உரிமைகள் பறிபோவ தைக் கண்டும் காணாமல் இருக்கிறார்கள். இப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.

ஒரு மாதத்திற்கு மேல் முல்லைப் பெரியாறு அணையில் அன்றாட நிர்வாகப் பணிகளைக் கவனிக்க முடியாதபடி தமிழக அதிகாரிகள் கேரள வனத் துறை யினரால் தடுக்கப்பட்டிருப்பதை முடிவுக்குக் கொண்டுவர இந்திய அரசு தலையிடும் வகையில் உடனடியாக இந்திய அரசுக்கு தமிழக அரசு நெருக்குதல் கொடுக்க வேண்டுமென்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Pin It