1. பட்டினப் பாலை (1-6)

வசையில் புகழ்வயங்கு வெண்மீன், திசைதிரிந்து தெற்கேகினும்

தற்பாடிய களியுணவின், புட்டேம்பப் புயன்மாறி

வான் பொய்யினும் தான் பொய்யா, மலைத்தலை இய கடற்காவிரி.

பொருள் : வெள்ளி எனப்படும் கோல்ஆனது தான் செல்லுவதற்குரிய திசையாகிய வடக்கு செல்லாது தெற்கு நோக்கிச் சென்றாலும், வானம்பாடி என்னும் பறவை மழை துளியாகிய உணவைப் பெறாமல் வருந்தும்படி மேகம் பொய்த்த பஞ்சகாலம் உண்டானாலும் தான் தவறாமல் காலந்தோறும் பெருக்கெடுத்து வருகின்றதும், குடகு மலையினிடத்தே தோன்றி கடலில் சென்று விழுவதுமான காவேரியாறு என்றும் , நீர் வருவதின் தவறாத் தன்மையும் அந்த ஆறு தோன்றிவிழும் இடமும் நன்கு விளக்கப்பட்டிருக்கிறது.

cauvery-river- 6002. புறநானூறு

புனிறு திர்குழவிக்கிலிருந்து பசும் பயிறுவளர்த்து பொன்கதிருக

ஆக்குபொன் கொழிக்கும் காவேரியே.

 3. பத்துப்பாட்டு

பொருநராற்று படையில் 238- 248 வரிகளில் காவேரியின் மகிமையால் சோழநாடு

நெற்களஞ்சியம் என்று விளக்கப்படுகிறது.

நரையும் நரந்தமும் அகிலுமாராமும்

துரைதரைதோறும் பொறையுயிர் தொழுகி

துரைத்தலைக் குறைப்புனல் வரைப்பகம்புகு தொரும்

புனலாடு மகளிற்கதுமெனக் குடையக்

சூடு கோடாக பிறக்கி நாடொறுங்

குன்றெனக்குவை இயக்குன்றாக் குப்பை

சாலிநெல்லின் சிறை கொள்வேலி

காவேரிபுரக்கு நாடுகிழவோனே.

4. சிலப்பதிகாரம்

நாடுகாண் காதையில் : கடல் வனனெதிர்க் “கரியவன் புகையினும் புகைக்கொடி

தோன்றினும் கயவாய் நெரிக்கும்”, எனக் கூறி புனலொடு எப்பொழுதுமிருந்து நின்நாட்டைப் புனல் நாடென பெயர் எடுக்கசெய். நின்னாட்டில் “தாம்பி யும், கிழாரும் வீங்கிசையேத்தமும்” ஒலிக்கவேண்டாம் என்று காவேரி யை பற்றிக் கூறப்படுகிறது.

“சிலப்பதிகார ஆசிரியர், காவேரி யாறு வாழிகாலம் வரை சோழ நாட்டிற்கு தன் வற்றாத வளஞ்சுரக் கும் ஈகையினை அழகுற எடுத்த மொழிந்துள்ளார்.”

“வாழி அவன்தன் வளநாடு மக வாய் வளர்க்கும்

தாயாகி ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழிகாவேரி”

மற்றும் இளங்கோவடிகள் காவேரி தரும் வளத்தை சித்தரித்து காட்டுகிறார். -(சிலப்பதிகாரம்)

“உழவர் ஒதை மதுகு ஒதை; உடைநீர் ஒதை; தண்பதங்கொள்

நடந்தாய் வாழிகாவேரி விழவர் ஒதை சிறந்தார்ப்ப.”

“மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூவாடை அதுபோர்த்து

கருங்கயற்கண் விழிதொல்கி நடந்தாய் வாழிகாவேரி.”

பூவார்கோலை மயிலாலப்புரிந்து குயில்களிசைபாடக்

காமர்மாலை அருகசைய நடந்தாய் வாழிகாவேரி.

பொருள்: பூக்கள் நிறைந்த சோலைகளில் மயில்கள் கூட்டங் கூட்டமாக ஆடவும், குயில் அதற் கேற்ப இசைபாடவும் உள்ள பக்கங் களையுடைய காவேரி என்றும் மகளிர் காவேரியம்மனை புதுநீர் பெருக்கின்போது தூபதீபங்காட்டி வழிபட்டு வழியனுப்பும்போது இடும் பூமாலைகளை தாங்கிச் செல்லும் காவேரி யென்றும் சிறப்பிக் கப்பட்டுள்ளது.

5. மணிமேகலை ஆசிரியராகிய சீத்தலை சாத்தனார் கூறுவதாவது:

(1)  “கோள்நிலை திரிந்து கோடை நீடினும்

தான்நிலை திரியாத் தண்ட மிழ்ப்பாவை.”

தமிழ்நாட்டின் வளத்துக்கு காவேரி காரணமாயிருப்பதால் தண்தமிழ்ப்பாவை யெனக்கூறப் பட்டுள்ளது.

மணிமேகலை

(2) துறக்க வேந்தன் துய்ப் பிலன் கொல்லோ

அறக் கொல்வேந்தன் அருளி லன் கொல்லோ

சுரந்துகாவேரி புரந்து நீர்பரக்கவும்

நலத்தகையின்றி நல்லுயிர் கெல்லாம்

அலத்தற் காலையாகியது ஆயிழை.

ஆசிரியர் “பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை” என்ற பகுதியில், காவேரி எப்படிப்பட்ட காலத்தும் நீர்வளம் குண்றுதலில்லை யென்று அதன் சிறப்பை விளக்குகிறார்.

(3) அதே நூலில், காவேரிப் பட்டின தேவதையான சம்பாதேவி காவேரியை வரவேற்கும்போது, “காவேரி! ஆகாய கங்கை வேணவா தீர்த்த விளக்கே, வா” என்று சொல் வதாக கூறப்படுகிறது.

(ஜ்யோதிரும்ஷி ஆப:) என்ற வாக்குபடி காவேரி நெற்களஞ்சியம் பொற்களஞ்சியம் மட்டும் அல் லாமல் வருங்காலத்தில் மின் னொளி எடுத்து நாடெங்கும் மக்கள் விளக்கிட்டு ஒளியைப் பரப்ப போகின்றது என்பதையும் அறிவிக்கின்றது போலும்!

6. செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும்

கஞ்சவேட்கையிற் காந்தமன் வேண்ட

அமரமுனிவன் அகத்தியன் தனது

காகம் கவிழ்த்த காவிரிப்பாவை

ஆணுவிசும்பின் ஆகாய கங்கை வேணவாத் தீர்த்த விளக்கு. (மணிமேகலை)

7. திவாகரம்

காவேரியைப் பற்றி புகழுங்கால்,

“வருநற் கங்கை வடதிசைப் பெருமையும்,

தென்திசைச் சிறுமையும் போக்கி’’

எனக்கூறப்படுகிறது.

8. பாரதம்

‘காவேரி யென்னத் தப்பா கருணை’ என புகழப்படுகிறது.

9. கம்பராமாயணம்

(1) ‘காவேரி நாடன்ன கழனிநாடு’ என ஆசிரியர் கூறுகிறார். கோசல நாட்டின் சிறப்பைக்கூற வந்த கம்பர் நதியின் பெருமையால் விளக் குகிறார். காவேரி நதி பாய்கின்ற சோழநாட்டைப் போன்ற ‘கோசல நாடு’ என்று நதியின் மூலமாய் நாட்டின் பெருமை விளக்கப்படு கிறது. நாட்டின் பெருமையை விளக்குவதற்கு எடுத்துக்காட்டாக நிற்பது காவேரியே. நதி என்றாலே காவேரி நதியை தான் குறிக்கும். அது அத்தகைய சிறப்பு வாய்ந்தது. சங்கல்பம் செய்து கொள்ளும் போதுகூட சிறுவாய்க்காலாக இருந் தாலும் ‘காவேரி நீரே’ என்று கூறுவதை நாம் இன்றும் பழக்கத் தில் வைத்துக் கொண்டிருக்கிறோம்.

அகத்தியப்படலம்

(2) “கன்னியில வாழைகனி யீவகதிர்வாலின்

செந்நெலுள தேனொழுகு போதுமுளதெய்வம்

பொன்னியென லாயபுனலாறு முளபோதா

அன்னமுள பொன்னி வளொ டன் பின்விளையாட.’’

என்று கூறுமிடத்து தாய் நாட்டுப் பற்றுடை கம்பர் புண்ணி யத்தன்மை பொருந்திய காவேரி நதியை ‘தெய்வப் பொன்னி’ என குறித்துள்ளமையால் காவேரியின் ஏற்றம் புலனாகும்.

(3) கம்பராமாயணம் - கிஷ்கிந்தா காண்டம் - நாட்டை விட்டபடலம்.

சுக்ரீவன் சீதையைத் தேடும்படி வானரர்களை தென்பால் சென்று பார்க்க வேண்டிய

இடங்களைக் குறிப்பிடுகையில் காவேரி பிரதேசத்தை குறிப்பிடுகி றார்கள்.

......................அதற் பிள்ளையவை நளிநீர் பொன்னிச்

சேடுறு தண்புனற் றெய்வத் திருநதியின்

யிருகணிரயுஞ் சேர் திருமாதோ.

(4) கம்பர் அகத்திய படலத்தில் அகத்திய முனிவனது சிறப்புக் களைப் பற்றி கூறுமிடத்து,

“எண்டிசையும் ஏழுலுலகம் எவ்வுயிர்க்கும் வுய்யக்

குண்டிகையினில் பொருஇல் காவேரி கொணர்ந்தான்.’’

என்று புகழ்கின்றார். இதன் மூலம் காவேரியானது எட்டு திக்கு களும், ஏழுலுலகங்களும், அவற்றிலுள்ள எல்லா உயிர்களும் நற்கதி அடையும்படி ஒப்புயர்வற்றுத் தவழ்ந்து செல்கின்றது என்பது தெள்ளெனத் தெரிகிறது.

(ஆரணிய காண்டம் - அகத்தியப் படலம் - 46-ம் செய்யுள்)

10. சேக்கிழார்

பெரிய புராணத்தில் காவேரி நதியை பூமகளின் மார்பில் திகழும் முத்துமாலையாக வர்ணிக்கிறார்.

1.“ஆதி மாதவமுனி யகத்தியன்தரு

பூதநீர்க்கமண்டலம் பொழிந்த காவேரி

மாதர் மண்மடந்தை பொன்

மார்பிற் றாழ்ந்ததோர்

ஓதநீர் நித்திலத்தாம மொக்கு மால்.’’

2. திங்கள் சூடியமுடிச் சிகரத் துச்சியிற்

பொங்கு வெண்டலை நுரை பொருது போதலால்

எங்கணாயகன் முடிமிசை நின்றேயிழி

கங்கையாம் பொன்னியாங் கன்னிநீத்தமே.

3.மாவிரைத் தெழுந்தார்ப்ப வரைதரு

பூவிருத்த புதுமதுப் பொங்கிட

வாவியிற் பொலிநாடு வளந்தரக்

காவேரிப்புனல் கால்புரந் தோங்குமால்

(5) மற்றும் சில புலவர் களின் சிறப்புரைகள்.

(அ) ஔவை பிராட்டி, சோழன் ஔவையை நோக்கி நீ எங்கிருந்து வந்தாய் என்று கேட்க, அம்மையார் சொல்கிறாள்.

...........................

..........................கூனல்

கருந்தேனுக்குக் கண்ணாந்த காவேரிசூழ் நாடா

இருந்தேனுக் கெங்கேயிடம்.

அதாவது சங்கினங்கல் காவேரி நதியின் மருங்கிலுள்ள மலர் சோலைகளில் வாழ்கின்ற மேன்மை யுடைய செழுந்தேனை நோக்கி வளம்பொருந்திய காவேரி தீரத்திஅ சஞ்சரிக்கின்றன என்பதை சொல் கிறாள்.

மற்றொரு சமயம் சிலம்பி என்னும் தாசிக்கு கம்பன் பொன் வாங்கிக்கொண்டு எழுதிக்கொடுத்த அணிரப்பாடலை ஔவை பிர ணிட்டியார் கூழுக்காகப் பூர்த்தி பண்ணிப் பாடினாள். முதல் இரு அடிகள் பின்வருமாறு :

“தண்ணீருங் காவேரியே தார்வேந்தன் சோழனே

மண்ணாவதும் சோழ மண்டலமே.”

மற்றொரு இடத்தில் ‘சோழவள நாடு சோறுடைத்து’ என்றும் கூறுகிறார்.

ஒட்டக்கூத்தர்

வெள்ளத் தடங்காச் சினவாளை வேலிக் கமுகின் மீதேறித்

துள்ளி முகிலைக் கிழித்து மழைத்துளியோ டிறங்குஞ் சோணாடா.

பொருள்:காவேரி நீர் பிரவா கத்தில் கோபங்கொண்ட வாளை மீன்கள் வேலிகளாக அமைந்துள்ள கமுக சோலைகளின் மீதேறி துள்ளி மேகபடலத்தை பிளந்து மழை துளியோடு இறங்கும் சோழநாடு.

புகழேந்திப் புலவர்

“பங்கப் பழனத்து முழவர் பலவின் கனியைப் பறித்தென்று

சங்கிட்டெறிய குரங்கிள நீர் தமைக்கொண் டெலியுந் தமிழ் நாடா.’’

நீர்வளமும் சோறும் பொருந்திய காவேரி தீர கழனிகளில் உழவர்கள் சுவை நிறைந்த பலாபழங்களை குரங்குகள் பிடுங்கினவென்று கழனி களில் விளைந்த சங்குகளைக் கொண்டு வீசவும், குரங்குகள் இள நீர்தமைகொண்டு எறிகின்ற பிரதே சத்தையுடைய சோழநாடு என்று கூறப்படுகிறது. மற்றொரு சமயம் புகழேந்திப் புலவர் காவேரி கரை யிலமர்ந்துள்ள திருநெய் தானத் துப் பெருமானை புகழ்ந்து பாடுகை யில் காவேரியின் சிறப்பைக் குறிப் பிடுகிறார்.

பொருள் : நீர் வற்றுதலில்லாத ஓடைகள். பாரை என்னும் மச்சங்கள், மேகத்தை தொட்டுள்ள கமுக விருக்ஷங்கள் மச்சங்கள் மேலே தாவிப் பாக்கு குலைகளை உதிரும்படி செய்கின்றன். பின்னர் திரும்பி நெல் வயல்களில் தாளடி யில் வீழ்கின்றன. மீண்டும் கரும் பாலைகளின் பாகு வெள்ளத்திற் பாய்ந்து விளையாடுகின்றன. இவ் வளவு காட்சிகளுடன் பொருந்திய இடத்தில் கோயில் கொண்டருளிய திருநெய்த்தானத்தான் சிவபெரு மான் எனப்புகழ்கிறார்.

சொக்கநாதப் புலவர்

இவர் தொண்டை நாட்டில் பிறந்தவராயினும் அவருடைய தனிப்பாடல்களில் ஒன்றில் திரு வெண்காட்டில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைத் துதிக்கும் வகை யில் காவேரியின் சிறப்பையும், உருப் படுத்தியிருக்கிறார்.

அவர் சொல்லுவதாவது குளிர்ச்சி பொருந்திய குவளை மலர் நிறைந்த தடாகங்கள் சூழ்ந்த காவேரி நதி பாய்கின்ற சோழ நாட்டில் ஓர் அதிசயம் உண்டு. கண் ணெதிராக நாரையின் மீது வெண் காடைக்கு இடப்புறத்தே பசுமையாகிய அன்னப்பறவை சேர்ந்திருப் பதையும் பார்த்தோம் என்கிறார்.

சிவபெருமானின் வெள்ளை எருது திருவெண்காட்டு சிவபெரு மான் - பச்சை அன்னம் பார்வதி தேவி என்றும் பொருள்படும்.

காளமேகப் புலவர்

ஒருசமயம் புலவர் காவேரி யாற்றுக்கும் ஆட்டக் குதிரைக்கும் சிலேடையிட நேர்ந்தது.

“ஓடுஞ்சுழி சுத்த முண்டாகுந் துன்னவரைச்

சாடும் பரிவாய் தலைசாய்க்கும் - நாடறிய

தேடுபுகழான் திருமலைராயன் வரையில்

ஆடுபரி காவேரி யாமே’’

நீர் விரைவாயோடும், நீர் சுழியு முடையதாகும், சுத்தம் உண்டாகும், நிராடுபவருக்கு உள்ளும், புறமும் தூய தன்மையை அளிக்கும், மலர் களை மோதி ஒதுக்கும், உயர்ச்சி யுள்ள அலைகளை பக்கங்களில் வீசும். இது ஆற்றைப் பற்றிய வரையில் உள்ள பொருளாகும்.

Pin It