கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற வர்; ஆடம்பரத்தை அறவே விரும்பாதவர்; ஏழை எளிய மக்களுக்காக, பெண்களுக்காக, ஒடுக்கப்பட்ட மனிதர் களுக்காக குரல் எழுப்புபவர் என்று பரவலாகப் பாராட்டப்படுபவர்.

கடந்த ஞாயிறன்று (12.04.2015) கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமையகமான வத்திகான் தூய பேதுரு பேராலய வளாகத்தில் நடந்த கூட்டத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். 1915 மற்றும் 1922 ஆம் ஆண்டுகளில் துருக்கியில் ஏறக்குறைய 15 இலட்சம் ஆர்மீனியர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டதை அவர் நினைவு கூர்ந்து, அது கொலை அல்ல, “கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த முதல் இனப்படு கொலை” என்று அறிவித்தார். கத்தோலிக்கத் திருச்சபை யின் தலைவரான போப் இவ்வாறு அறிவித்ததை துருக்கி நாட்டு அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த அறிவிப்பைக் கண்டித்து மறுப்பு தெரிவித் துள்ளது.

போப் பிரான்சிஸ் கடந்த சனவரி மாதம் இனப் படுகொலை நாடான இலங்கைக்கு வருகை தந்ததும், அதற்கு முன்னர் சிங்கள இனவெறியன் இராசபக் சேவுடன் கை குலுக்கியதும் நாம் அறிந்ததே. அன்பின் வடிவமான இயேசு கிறித்துவின் அடையாளமான போப் பிரான்சிஸ் இரத்தக்கறை படிந்த மனிதகுலப் பகைவன் இராசபக்சேவோடு எப்படி கைகுலுக்க முடியும் என்றெல்லாம் கடும் விமர்சனங்கள் பரவலாக எழுந்தன. சிங்கள இனவெறியர்கள் விரிக்கும் சதிவலையில் விழுந்து இனப்படுகொலை நாடான இலங்கைக்கு போப் பாண்டவர் செல்லக் கூடாது என்றெல்லாம் பல்வேறு தமிழ் அமைப்புகள் அப்போது வேண்டு கோள் விடுத்தன.

கடந்த மூன்று ஆண்டுகளாக இங்கிலாந்து நாட் டின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவ ணப் படங்கள் உலகத்தின் மனச் சாட்சியை உலுக்கிய வேளையில், கொழும்பில் காமன் வெல்த் மாநாட்டை நடத்துவதும், திருத் தந்தையை இலங் கைக்கு அழைத்து வருவதும், இலங்கை பற்றிய பிம் பத்தை பன்னாட்டு அரங்கில் மாற்றிவிடும் என சிங்கள இன வெறிக் கும்பல் கணக்குப் போட் டது. ஆனால் நாளுக்கு நாள் இலங் கைக்கு எதிரான விமர்சனங்களும் நடந்த இனப்படுகொலைக்கு பன் னாட்டு விசாரணை தேவை என்ற முழக்கங்களும் குறைந்தபாடில்லை. அந்த வரிசையில் அண்மையில் எழுந்த குரல் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் எழுப்பிய முழக்க மும் வடக்கு மாகாண சபை முன்மொழிந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானமும் ஆகும்.

இந்த வேளையில்தான், திருச் சபைத் தலைவரான போப் பிரான் சிஸ் அவர்கள் கடந்த ஞாயிறன்று (12.04.2015) வத்திகானில் ஆர்மீனிய இனப்படுகொலை பற்றி பேசிய பேச்சு முதன்மையாகிறது. 2001 ஆம் ஆண்டு ஆர்மீனியத் திருச்ச பைத் தலைவரும் முன்னாள் கத் தோலிக்க திருத்தந்தை இரண் டாம் அருள் சின்னப்பரும் இணைந்து கையெழுத்திட்டு இதே போன்று ஒரு அறிவிப்பைச் செய்தி ருந்தனர். அதனை மேற்கோள் காட்டி அழுத்தம் திருத்தமாக திருத்தந்தை பிரான்சிஸ் முதன் முறையாககத் தோலிக்கத் தலைமையகமான வத்திகான் பேதுரு பேராலயத்தில் வைத்து அறிவித்திருப்பது மிகவும் முகாமையானதாகக் கருதப்படு கிறது.

1915 - 1922 வரையிலான கால கட்டத்தில் 15 இலட்சம் ஆர்மீனி யர்கள் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டதற்கான நீதி வேண்டி ஆர்மீனியர்கள் பல ஆண்டுகளாக குரலெழுப்பி வந்துள்ளனர். ஏற் கெனவே அங்கு நடந்தது இனப்படு கொலையே என்று பிரான்சு மற்றும் இரசியா போன்ற 20 நாடுகள் அறிவித்துள்ளன என்ப தும் குறிப்பிடத்தக்கது.

இச்சூழலில் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்காக திருத் தந்தை பிரான்சிஸ் குரலெழுப்ப வேண்டும் என்று தமிழ் அமைப்பு கள் கத்தோலிக்கத் திருச்சபைக்கு அழுத்தம் தர வேண்டும். தமிழகத் தில் இருக்கும் அனைத்து கத்தோ லிக்க ஆயர்களும் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு திருத்தந்தை பிரான்சிஸ் குரல் எழுப்ப வேண் டும் என்று வத்திகானை வலியுறுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள கத்தோலிக்க ஆயர்களும், குருக்க ளும் துறவற சபையினரும் வத்திகா னுக்குஇது தொடர்பாக தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். ஈழத்திலும், தமிழகத்திலும் வாழும் இலட்சக்கணக்கான தமிழ் கிறித் தவர்கள் சார்பாக இக் கோரிக்கை வலுவாக எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

1983-க்குப் பின்னர் தமிழர்களின் வழிபாட்டிடம் என்ற ஒரே கார ணத்திற்காக நூற்றுக் கணக்கான கிறித்தவ தேவாலயங்கள் சிங்கள இனவெறியர்களால் இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளன. போர்ச் சூழலில் தமிழ் மக்களுக்காகப் பாடு பட்ட அல்லது மக்களோடு மக்க ளாக முள்ளிவாய்க்கால் வரை சென்ற பல கத்தோலிக்கக் குருக்கள் கொடூரமான முறையில் சிங்கள இனவெறியர்களாலும், இராணு வத்தாலும் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர். இன்றைய நாள் வரை கைது செய்யப் பட்டு, காவலில் அடைக்கப்பட்ட பல குருக்கள் எங்கே இருக்கிறார் கள் என்றே தெரியவில்லை. தமிழர்களுக்காக குரல் கொடுத்த ஒரே காரணத்திற்காக பல கிறித்தவ துறவியர்கள் சிங்கள இராணுவத் தால் கொடூரமான முறையில் சித் திரவதைக்கு உள்ளாக்கப் பட்டுள்ள னர்.

ஏன் சிங்களத் திருச்சபைத் தலைமையேகூட இலங்கையில் தமிழ்த் திருச்சபையை இரண்டாம் தரமாகத்தான் பார்க்கிறது என் பதை யாரும் மறுக்க முடியுமா? நீதி, நியாயத்திற்காக நிற்க வேண்டிய சிங்களத் திருச்சபை, இன ரீதியாக சிங்கள வெறியர்களோடு கை கோத்து நிற்கிறது என்பதை இங்கே வேதனையோடு பதிவு செய்ய வேண்டியுள்ளது. தமிழர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இராயப்பு அவர்களை சிங்கள அரசும் இராணுவமும் அவமானப்படுத்து கிறது; அவர் மீது அடக்குமுறையை ஏவி விடுகிறது; அவரை எப் போதுமே கண்காணிப்பு வளையத் திற்குள்ளே வைத்துள்ளது. ஈழத்தில் போருக்குப் பின்னால் மனித உரிமைப் பணிகளையும், பாதிக்கப் பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வுப் பணிகளையும் ஆற்றி வந்த அருட் திரு. மகேசன் பிரவீன் அவர்களை சிங்கள இராணுவம் கைது செய்து சித்திரவதை செய்தது. பின்னர் வெளி நாடுகளிலிருந்து வந்த அழுத்தம் காரணமாக விடுவித்தது. இதுபோன்ற சூழல் இன்னும் தொடர்ந்து கொண்டுதானே உள்ளது!

தமிழீழப் பகுதிகளில் திருச்சபை சார்ந்த / கிறித்தவ சமயம் சார்ந்த நிகழ்வுகளில் கூட சிங்கள இராணு வத்தின் கடுமையான தலையீடு களும், தொடர் அச்சறுத்துதலும் இன்னமும் இருந்து கொண்டு தானே உள்ளது. குறைந்தபட்சம் இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழகத் திருச்சபை வத்தி கானில் குரல் கொடுக்க வேண்டும். ரோமின் பார்வைக்கும் பரிசீல னைக்கும் அவ்வப்போது எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இருப் பதை யாரும் மறுக்க முடியாது! இவை அனைத்தும் இன ஒடுக்கு முறையின் வடிவங்கள் தான் என் பதைப் புரிந்து கொள்ள மிகப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது. இவற்றையெல்லாம் திருச்சபையின் தலைமைப் பீடத்திற்கு தமிழகத் திருச்சபை ஆயர்கள் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பிலி ருந்து நழுவுவது மாபெரும் குற்ற மாகும்!

இராணுவமயமாக்கலும், சிங்கள பவுத்தமயமாக்கலும் தமிழீ ழப் பகுதிகளில் அனைத்து மாவட் டங்களிலும் இன்றும் நிலவுகிறது. இதனை நிறுத்துவதற்கு, ஈழத் தமி ழர் வாழ்நிலை சுமூகமாகவும் அவர்கள் கண்ணியமாக வாழவும் தங்களது அரசியல் உரிமைகளைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளும் உரிமையை தக்கவைத்துக் கொள்ள வும் தமிழர்களுக்கான தாயக பூமி அவர்களுக்கானதாக இருக்க வேண்டும்! அதற்கான உடனடித் தேவை பன்னாட்டு அரசுகளின் கண்காணிப்பில் நடைபெற வேண் டிய பொது வாக்கொடுப்பு - இதற் கான முதல்படி ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையே என்ற பன்னாட்டு அரசுகளின் ஏற்பு! இதற்கு தூண்டுகோலாக கத்தோ லிக்கத் திருத்தந்தையின் அறிவிப்பு மிகவும் உதவும்!

ஆர்மீனியப் படுகொலை நடந்து ஒரு நூற்றாண்டு கழித்து, நடந்தது இனப்படுகொலைதான் என இன்று போப்பாண்டவர் அறிவிப்பது நீதி ஏற்றுக் கொள் ளப்பட்டது என்ற மனநிறைவை ஏற்படுத்துமே அன்றி, அழிக்கப் பட்ட மக்களின் வழித் தோன்றல் களுக்கும் - ஆர்மீனிய இனத்திற்கும் ஞாயம் வழங்க உதவாது. அதே போன்ற நிலை, ஈழத் தமிழர்களுக் கும் ஏற்பட்டுவிடக் கூடாது. இலங்கையில் நடந்தது தமிழ் இனப் படுகொலை தான் என்று தாமத மில்லாமல் போப் பாண்டவர் அறிவிப்பது, அவ்வினத்திற்கு தீர் வைப் பெற்றுத்தர பேருதவியாக இருக்கும்.

2013 ஆம் ஆண்டு போப் பிரான்சிஸ் அவர்கள் எழுதிய “நற்செய்தியில் மகிழ்ச்சி” என்ற தலைப்பிலான திருமடலில் அவர் குறிப்பிட்டுள்ள ஒரு சில வரிகள் இங்கே மிகவும் பொருந்துவதாக அமைகிறது.

“முரண்பாடுகளைத் தட்டிக் கழிக்கவோ, மறைத்து வைக்கவோ கூடாது. அவற்றிற்கு முகம் கொடுத்தே ஆக வேண்டும். சிலர் இவற்றை பார்த்தாலும் ஒன்றுமே நடக்காதது போல் தம் வழியே போய்விடுகின்றனர். சிலர் தம் கை களை கழுவிவிட்டு தங்கள் வாழ்க் கையை மட்டும் வாழ்ந்து கொண் டிருக்கின்றனர். முரண்பாடுகளை சிறப்பான முறையில் தீர்த்துக் கொள்வதற்கு, அவற்றை நேருக்கு நேர் முகம் கொடுத்து, தீர்வு காண முயல வேண்டும். புதிய வழிமுறை களைக் கண்டுபிடித்து புதிய பாதை யில் பயணிக்க வழி காணுதல் அவசி யம்”.

(எண் 226, 227 - “நற்செய்தியில் மகிழ்ச்சி” எனும் திருமடல், 2013, திருத்தந்தை பிரான்சிஸ் ).

Pin It