டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்துப் பூட்டும் போராட்டம்! 

இளைஞர்களை சீரழிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்துப் பூட்டும் போராட்டத்தை தமிழகமெங்கும் 04.1.2013 அன்று, தமிழக இளைஞர் முன்னணி நடத்தியது. இப்போராட்டத்தின் போது சிதம்பரம், முருகன்குடி (பெண்ணாடம்) ஆகிய இடங்களில், காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமானத் தடியடியில் த.இ.மு. தோழர்களும் பொதுமக்களும் காய மடைந்தனர். 

சிதம்பரத்தில் காவல்துறையினர் தடியடி - பொய் வழக்கு 

சிதம்பரம் நகரின் வடக்கு நுழைவு வாயிலான, கஞ்சித் தொட்டி முனை அருகில் இயங்கிக் கொண்டிருந்த டாஸ்மாக் அரசு மதுபானக்கடை யை இழுத்துப் பூட்டும் போராட்டம் எழுச் சியுடன் நடைபெற்றது. 

போராட்ட நாளன்று, காலை 10.30 மணியளவில், 30க்கும் மேற்பட்ட த.இ.மு தோழர்கள், பதாகைகள், கொடிகள் ஏந்தியபடி, மதுச் சீரழிவுக்கு எதிராக முழக்கமிட்டவாறு டாஸ்மாக் மதுக்கடையை நெருங்கினர். 

புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, கஞ்சித் தொட்டி பெட்ரோல் நிலையம் அருகில் சிதம்பரம் காவல்துறையினர் தடுத்து நிறுத்த முற்பட்டனர். காவல்துறையினரின் முற்றுகையை உடைத்துக் கொண்டு, டாஸ்மாக் கடையை நோக்கி முன்னேறிய தோழர்களை, நகரக் காவல் ஆய்வாளர் முருகானந்தம் தலைமையில் குவிக்கப் பட்டிருந்த காவலர்களும், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளரின் அதிவிரைவு படைக் காவலர்களும் வழிமறித்துத் தாக்கினர். தோழர்கள் தாக்குதலை பொருட்படுத்தாது ஒருபுறத்தில் சென்று, கடையின் ஷட்டரை (வாயிற்கதவை) இழுத்து சாத்தினர். 

சில வினாடிகளிலேயே, அங்கு போராட்டத் தையொட்டி குவிக்கப்பட்டிருந்த 30-க்கும் மேலான காவல்துறையினர் தோழர்கள் மீது கண்மண் தெரியாத தடியடியை நடத்தினர். காவல்துறையின் தடியடியின் போது காவலர்கள் மீதோ, கடை ஊழியர்கள் மீதோ வன்முறையில் ஈடுபடாத த.இ.மு தோழர்கள் மீது, கடுமையாக தாக்குதல் தொடர்ந்தது. 

இத்தாக்குதலில், போராட்டத்திற்குத் தலை மையேற்ற தமிழக இளைஞர் முன்னணிப் துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன், தமிழக மாணவர் முன்னணி அமைப் பாளர் வே.சுப்பிரமணிய சிவா, சு.சுகன்ராஜ், கி.சதீசுகுமார், ரா.ராஜேசுகுமார், பா.கலைவாணன் ஆகியோர் தடியடியால் காயம்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏறும் போதும் கூட ஆய்வாளர் முருகானந்தம் அரம்பத்தனத் தோடு ஒவ்வொருவராக தாக்கி தாக்கி வாகனத்தில் ஏற்றினார். 

இந்நிலையில் காவல் நிலையத்துக்கு தொலைப் பேசி செய்த காவல்துறை கூடுதல் கண்காணிப் பாளர் துரை என்பவர், “குபேரன் என்ன சாதி?” என்று கேட்டார். தாழ்த்தப்பட்டவர் என்று தெரிவிக்கப்பட்டவுடன், உடனடியாக காவல் நிலையத்துக்கு வருவதாகக் கூறி தொலைபேசியை துண்டித்தார். 

கைது செய்யப்பட்ட 19 தோழர்களில், 10 பேர் தாழ்த்தப்பட்டவர்கள், 9 பேர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் ஆவர். 13 பேர் கல்லூரி மாணவர்கள் ஆவர். 

போராட்டத்தில் பங்கேற்று கைதான 4 பெண் தோழர்கள், தனிமைப்படுத்தப்பட்டு கடுமையாக நடத்தப்பட்டனர். அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும், ஆபாசமாகவும் பேசினர் பெண் காவலர்கள். காவல் நிலையத்துக்கு வந்த காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் போராட்டத் தலைவர் குபேரனை தனிமையில் அழைத்து மிரட்டினார். 

“மதுக்கடை பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது மதுவிலக்கை கோரி எங்கள் அமைப்பின் முடிவுப்படி நாங்கள் சட்ட ரீதியாக போராட்டத்தை செய்துள்ளோம். தமிழகத்தின் பல்வேறுப் பகுதிகளிலும் போ ராட்டம் நடைபெற்று வருகிறது. சிதம்பரத்திலும் நடைபெறுகிறது” என தோழர் குபேரன் பதிலு ரைத்தார். ”அங்கெல்லாம் உங்க அமைப்புப்படி நடக்குது. இங்க எப்படி நடக்குதுனு பாரு.. இந்த ஊர்ல தான இருக்கப் போற.. எதா இருந்தாலும் எங்க கிட்டதான் வரனும் அப்ப பாத்துக்குறேன்” என்று கூறினார்.

மதுவிலக்கு கோரிய 15 த.இ.மு. தோழர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் 353, 143, 188 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் போடப்பட்டது. 15 தோழர்களும், கடலூர் நடுவண் சிறையில் அடைக்கப்பட்டனர். 

அனைவரும் 8.01.13 அன்று இரவு நிபந்தனைப் பிணையில் விடுதலை ஆயினர். நாள்தோறும் சிதம்பரம் நகரக் காவல் நிலையத்தில் கையொப் பமிட வேண்டும் என்பது நிபந்தனை. 

சிறையிலிருந்து விடுதலையான, தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செய லாளர் தோழர் ஆ.குபேரன், த..தே.பொ.க. தோழர் மு.முருகவேல், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட 15 தோழர்களுக்கும், கடலூர் சிறை வாசலில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. 

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, பொதுக்குழு உறுப்பினர் தோழர் க.முருகன், சிதம்பரம் நகர த.தே.பொ.க. செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகளும், தோழர் களும் இதில் பங்கேற்றனர். 

முருகன்குடியில் காவல்துறை தடியடி 

பெண்ணாடம் பகுதி முருகன்குடியில் நடை பெற்ற போராட்டத்திற்கு, தமிழக இளைஞர் முன்னணித் தோழர் இரா.சுப்பிரமணியன் தலைமையேற்றார். த.இ.மு. இளைஞர்கள் இருபிரிவினராகப் பிரிந்து சென்று, அரசு மதுபானக்கடையை முற்றுகையிட்டனர். 

ஒருபிரிவினர், பெண்களுடன் இணைந்து சென்று கடையின் ஷட்டரை இழுத்துச் சாத்தினர். கதவைச் சாத்தும் போது, அங்கிருந்த காவலர்கள் த.இ.மு. தோழர்களையும், பெண் களையும் கடுமையாகத் தாக்கினர். போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களை தடியால் தாக்கியும், சேலைகளைக் கிழித்தும் காவல் துறையினர் வெறியாட்டம் நிகழ்த்தினர். 

இந்நிகழ்வை பார்த்த மகளிர் ஆயப் பொறுப் பாளர்களும், பெண்களும் “காவல்துறை அட்டூழியம் ஒழிக” என முழுக்கங்கள் எழுப்பினர். 

காவல்துறையினரின் தடியடியைக் கண்டித்து, உடனடியாக சாலை மறியல் நடத்தப்பட்டது. சற்றொப்ப 1 மணி நேரத்திற்கு, சாலைப் போக்குவரத்து முடங்கியது. போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள், “எங்கள் குழந்தைகளை படிக்க வைக்க முடியவில்லை. எங்கள் கழுத்தில் தாலியில்லை வெறும் கயிறு தான் இருக்கிறது” என கண்ணீர் மல்க ஊடகங்களிடம் ஆவேசமாகக் கூறினர். 

பின்னர், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி.பிரகாசு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் க.முருகன், மகளிர் ஆயம் அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் மு.வித்தியா, கிளைப் பொறுப்பாளர்கள் க.இந்துமதி, ப.எழிலரசி, செ.வளர்மதி, க.வாசுமதி, சு.பானுமதி, சி.கந்தாடு உள்பட 21 பெண்களும், 33 ஆண்களும் என மொத்தம் 54 பேர் கைது செய்யப்பட்டனர். 

மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட கைதான தோழர்களுக்கு, ஊர்மக்கள் பெருமளவில் வாழ்த்துத் தெரிவித்துப் பாராட்டினர். ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர் களும், கைதானவர்களுக்கு தேநீர் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கி ஆதரவு தெரிவித்தனர். 

சென்னை 

சென்னை பல்லாவரம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை இழுத்துப் பூட்டும் போராட்டத்திற்கு, தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக் குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். த.இ.மு. தாம்பரம், நகரக் கிளைப் பொறுப்பாளர்களும், தோழர்களும் என போராட்டத்தில் பங்கேற்ற 20 பேர் கைது செய்யப்பட்டனர். 

தஞ்சாவூர் 

தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகி லுள்ள டாஸ்மாக் மதுக்கடையை இழுத்துப் பூட்டும் போராட்டம் காலை 11 மணியளவில் நடைபெற்றது. தமிழக இளைஞர் முன்னணி துணைத் தலைவர் தோழர் கெ. செந்தில்குமரன் தலைமை தாங்கினார். த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் செந்திறல், த.இ.மு. நகரத் தலைவர் தோழர் இலெ.இராமசாமி, த.தே.பொ.க. பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் க.காம ராசு, த.தே.பொ.க. நகரத் துணைச் செயலாளர் தோழர் தமிழ்ச்செல்வன், மகளிர் ஆயம் பூதலூர் ஒன்றிய அமைப்பாளர் தோழர் மீனா, தோழர்கள் உமா, கௌசல்யா, உள்ளிட்ட 31 பேர் கைது செய்யப்பட்டனர். 

ஓசூர் 

ஓசூர் இராம் நகரில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை இழுத்துப் பூட்டும் போராட்டம் தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கிளைச் செயலாளர்கள் தோழர் இரமேசு, தோழர் சுப்பிரமணியம், மகளிர் ஆயத் தோழர் அபிராமி, தமிழக உழவர் முன்னணி இராயக்கோட்டை செயலாளர் தூருவாசர் உள்ளிட்ட 17 பேர் கை தாயினர். 

கிள்ளுக்கோட்டை 

புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோயில் ஒன்றியம் கிள்ளுக்கோட்டை நகரி லுள்ள டாஸ்மாக் மதுக்கடையை இழுத்துப் பூட்டும் போராட்டம் தமிழக இளைஞர் முன் னணி ஒன்றியத் தலைவர் தோழர் இலட்சுமணன் தலைமையில் நடைபெற்றது. த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். த.இ.மு. பூதலூர் ஒன்றியத் தலைவர் தோழர் தேவதாசு, த.இ.மு. நிர்வாகிகள் மற்றும் 7 பெண்கள் உள்ளிட்ட 55 பேர் கைது செய்யப் பட்டனர். 

சாமிமலை 

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம் சாமிமலையில், அரசு மேனிலைப்பள்ளி அருகி லுள்ள மதுக்கடையை இழுத்து பூட்டும் போராட்டம் தமிழக இளைஞர் முன்னணி கிளைச் செயலாளர் தோழர் சரவணன் தலை மையில் நடைபெற்றது. த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் விடுதலைச்சுடர், த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர்கள் தோழர் செந்த மிழன், பிரபாகரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். தோழர் இளவரசி உள்ளிட்ட 10 பெண்களும், திரளானோரும் இப்போராட் டத்தில் பங்கேற்றனர். த.தே.பொ.க. கிளைச் செயலாளர் தோழர் ம.முரளி, தோழர் இளவரசி உள்ளிட்ட பெண்களும் கலந்து கொண்ட போராட்டத்தில், 21 பேர் கைதாயினர். 

கிருட்டிணகிரி 

கிருட்டிணகிரி மாவட்டம், வரட்டணப்பள்ளி யில் டாஸ்மாக் மதுக்கடை பூட்டும் போராட்டம் த.தே.பொ.க. தோழர் இரா.முருகப்பெருமாள் தலைமையில் நடைபெற்றது. தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் பெ.ஈசுவரன், த.இ.மு. கிளைச் செயலாளர் தோழர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவல்துறையினருக்கும், போராட்டத் தோழர் களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட் டத்தில் ஈடுபட்ட 20 தோழர்கள் கைது செய்யப் பட்டனர். 

சிதம்பரம் தவிர்த்து, ஏனைய இடங்களில் கைது செய்யப்பட்ட தோழர்கள் மாலை விடு தலை செய்யப்பட்டனர்.

திருச்சியில் ஆர்ப்பாட்டம்

திருச்சி - துவாக்குடி பேருந்து நிலையம் அரு கில், 04.01.2013 அன்று மாலை மதுக்கடைகளை இழுத்து மூடக் கோரி தமிழக இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, பாவலர் மு.வ.பரணர் தலைமையேற்றார். தமிழக இளைஞர் முன்னணி அமைப்பாளர் தோழர் மு.தியாகராசன், தமிழ்த் தேசப் பொதுவுடை மைக் கட்சி திருச்சி செயலாளர் தோழர் மு.க.கவித் துவன், துவாக்குடி தோழர்கள் வே.க.லட்சுமணன், செல்வக்குமார், திருச்சி வானூர்தி நிலையப் பகுதி த.தே.பொ.க. பொறுப்பாளர் தோழர் முகில் இனியன், வாழ வந்தான் கோட்டை ம.தி.மு.க. தோழர் வேலுச்சாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். 

நிறைவில், ம.தி.மு.க. அரசியலமைப்பு ஆய்வுக் குழு உறுப்பினர் புலவர் முருகேசன் நிறைவுரை யாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், திரளான பெண்களும், தோழர்களும் பங்கேற்றனர். 

Pin It