நூறாவது உலக மகளிர் தினம் மார்ச் 8, 2010 ஆம் தேதி நம் எல்லோருக்கும் முன்னால் மாநிலங்களவையில் எம்.பிக்கள், அவைத் தலைவர் அன்சாரியை அமைதியான முறையில் மகளிர் மசோதாவை நிறைவேற்ற முடியாதபடி கடுமையாக தாக்கினர். 1996ஆம் ஆண்டு முதல் 14 வருடங்களாக நிறைவேற்ற முடியாமல் இருந்த பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை மீண்டும் ஒருமுறை பெண்களுக்கு எதிரான சக்தி, ஆணாதிக்கம் செலுத்தும் சக்திகளிடம் மீண்டும் இரையாகிவிட்டது. இந்த தோல்வியை அறிந்த மகளிர் இயக்கங்கள் நாடாளுமன்ற நுழைவு வாயிலில் எப்போதும் போல முற்றுகையிட்டனர். இந்த துரோகத்தை கண்டித்து ஜனநாயக மனதுடைய மக்களின் உதவியால் நாடாளுமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தினர்.
2010 ஆம் ஆண்டு 9ஆம் தேதி அநேக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 7 மாநிலங்களவை எம்.பிக்களின் நீக்கத்திற்கு பிறகு 186 வாக்குகளின் உதவியால் மசோதா கடைசியில் நிறைவேற்றப்பட்டது. ஒரு மசோதாவை சட்ட திருத்தம் செய்ய 2/3 பங்கு சாதகமான வாக்கு தேவை அவைகிடைத்து திருத்தம் செய்யப்பட்டது. இது ஜனநாயகத்திற்கும் இந்தியாவில் பெண்களின் இயக்கங்களுக்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.
இந்த யுத்தத்தில் வெற்றி கிடைக்கவில்லை. இந்த மசோதா நிறைவேற்றப்படாதபடிக்கு கடுமையான, நீதிக்கு புறம்பான யுத்தத் தந்திரங்களை வகுத்து மக்களவையில் நிறைவேற்றபடாதபடிக்கு முயற்சிக்கிறார்கள். இப்படியிருக்கும் போது பொது மக்களுடைய அதிக ஆதரவு பெண்களுக்கான இடஒதுக்கீடு ஒரு ஜனநாயக உரிமையே மாறாக பெண்களுக்கு பிச்சைபோடுவதல்ல இது குறித்து இந்த நாட்களில் அநேக கேள்விகளும் சந்தேகங்களும் எழுப்பப்பட்டு வருகிறது. இந்தப் பிரச்சனை குறித்து ஜனநாயக இயக்கங்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து ஜனங்களின் மத்தியில் பிரச்சாரம் செய்து அரசியல் கட்சிகளுக்கு மசோதா நிறைவேற்ற நெருக்கடி உருவாக்க வேண்டும். இது ஒது அத்தியாவசியமான ஒன்று ஏனென்றால் இந்நாள் வரை இடதுசாரி கட்சிகளே இந்த மசோதாவினை நிலைநிறுத்தச் செய்யவும், இந்த மசோதவிற்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
இவ்வண்ணமாக UPA இந்த மசோதா குறித்து தாமதம்காட்டுகிறது. சட்டத் துறை அமைச்சர் மீண்டும் ஒருமுறை இந்நாள் வரைக்கும் மசோதாவை நிறைவேற்ற தாமதித்துக் கொண்டே இருந்த ஆரம்ப கட்ட பேச்சுக்கு மீண்டும் தம்முடைய கவனத்தை திருப்புகிறார்.
பெண்களுக்கு இடஒதுக்கீடு தேவையா?
சுதந்திரத்திற்குப் பிறகு ஜனநாயகத்தை, பல விஷேசங்களை விரும்பிய மக்கள் அரசியல் அமைப்பில் பெண்கள் ஆண்களுக்கு சமமாக அரசியலில் பெண்கள் பங்குகொள்ள போதுமான பாதுகாப்பு இருப்பதாக உணர்ந்தார்கள். பெண்கள் பற்றியான ஆய்வில் (1975) நாடாளுமன்றத்திலும், மாநிலங்களிலும் பெண்களுக்கான இடஒதுக்கீடு பரிந்துரை செய்யவில்லை. அதைத் தொடர்ந்து அதிகமான பெண்கள் அரசியலில் நுழைவதற்கான நிறைய இடையூறுகள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.
உலக அளவிலும் பெண்களுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு (1995) அவர்கள் நடவடிக்கை எடுக்கும் அடிப்படையில் அரசியல் அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பு சட்டமயமாக்குவதை நிலைப்படுத்தின.
இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு கூட சில முக்கியமான தீர்மானங்கள் எடுக்கும் அமைப்புகளில் பெண்களின் பங்கு 10 சதவீதம் கூட இல்லை மக்களைவையிலும், மாநிலங்களவையிலும்.
முன்னேற முடியாத பரிதாப நிலையில் இருக்கிறது. 15வது மக்களவைக் கூடுதலில் 543 உறுப்பினர்களில் 59 (10.8 சதவீதம்) பெண்களே உள்ளனர். பெண்களுக்கான 33 சதஒதுக்கீடு தற்போது இருக்கும் பதற்ற நிலையை மாற்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகத்தை பலப்படுத்த முக்கியப் பங்கு வகிக்கிறது.
இது பெண்கள் அரசியலில் அதிகமாக பங்கு கொள்வதை பலப்படுத்தி ஊக்குவிப்பது மற்றும் அல்லாமல் அரசியல் அமைப்புகளில் ஆண்,பெண் பாகுபாடு இல்லாமல் இடம் வகுக்கும். நமது சமூதாயத்தில் பெண்களின் நிலைபாடு குறித்து கவனிக்காத போது இது முக்கியமான ஒன்று தொடர்ந்து 60 ஆண்டுகளாக சட்ட சபையில் மேலோங்கி இருந்த ஆண் ஆதிக்கம் கொண்டுள்ள நிலை மாறி இப்போது ஆண், பெண் மத்தியில் சமநிலை உருவாக்குவது ஒரு கடினமான இலக்காகவே கருதப்படுகிறது.
நிலத்திலும், சொத்திலும், வேலையிலும், கல்வியிலும் பெண்களுக்கான சமஉரிமை மறுக்கப்படவில்லை. பெண்களுக்கு எதிரான கணக்கிலடங்கா எண்ணிகையில் வன்முறை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. பாலியல் துன்புறுத்தலும் பெண்களுக்கு தொடர்ந்து நடக்கிற கொடுமைகளில் ஒன்று. நாம் பழைய நிலைமை தொடர்வதில் நாம் எதிர்த்து புதுமை கொண்டு வர விரும்பினாள் சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும், கலாச்சாரத்திலும், அரசியலிலும் பெண்களின் ஆதிக்கம் நிலைநிறுத்த வேண்டும்.
ஏன் இதை எதிர்க்கிறார்கள்:
கட்சிகளில் முக்கியப் பங்கு வகிக்கும் பெருபாலான ஆண்கள் இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு சட்டசபைக்கான பொதுத்தேர்தலில் 87 சதவீதம் குறைவாக இடம் வகித்தவர்கள். அவர்கள் தொடர்ந்து இந்த மசோதாவிற்கு ஆதரவு அளிக்காமல் எதிர்த்து குரல் எழுப்பி ஆண் அரசியல்வாதிகள் தங்களுடைய அதிகாரத்தின் மேல் ஆதிக்கத்தை விட்டு கொடுக்க மறுக்கிறார்கள். குறிப்பாக எதிர்க் கட்சியில் உள்ளவர்கள் தங்களுடைய இடத்தை பாதுகாத்து கொள்வதிலிலேயே கவனம் செலுத்தி இருக்கிறார்கள்.
இந்திய சமுதாயம் தொடர்ந்து குடும்ப அமைப்பாகவோ, குடும்பவம்சா வழியாகக் கொண்டே இருக்கிறது. இதில் ஆண்கள் பொது நிறுவனங்களிலும், பொது இடங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். பெண்கள் தனியார் நிறுவனங்களிலும் மக்களுடைய குடும்பத்திலும் காணப்படுகிறார்கள் . தொடர்ந்து மேலாதிக்கம் கையோங்கியே இருக்கிறது.
“சம்பாத்தி செய்பவர்கள் என யாரால் அடையாளம் காட்டப்பட்டது” அந்த ஆதிக்கத்தினரே இதற்குகாரணமாக உள்ளனர். முடிவெடுக்க கூடிய அதிகாரம் படைத்த அமைப்புகளில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் பால் பாகுபாட்டுடன் கூடிய கண்ணோட்டத்தில் இருப்பது இம் மசோதா நிறைவேற பெரும் தடையாக இருக்கிறது. இத்தோடு மக்களவையிலும் குறைந்தது 15 மாநிலச் சட்ட சபையிலும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.
அரசியல் வகுப்பினர் உள்லேயே OBC, தலித்துகளுக்கு எதிராக மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக மசோதாவை கொண்டு செல்வதற்கு குரல் எழுப்புவதோடு, உறுதியான எதிர்ப்பு தெரிவிக்கிரார்கள். அவர்கள் பெண்களுக்கான உள் ஒதுக்கீடும் கோருகிறார்கள். இது ஒரு சமூகத்திற்கும் மற்றொரு சமூகத்திற்கும் மோதலை உருவாக்குவதோடு மகளிர் இடஒதுக்கீட்டை முடக்கி போடுவதாக அமைக்கிறது. SC/ST என இடஒதுக்கீடு என்பது நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப் பேரவைகளிலும் ஏற்கனவே அமலில் உள்ளது. பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உள் ஒதுக்கீடு கோரும் போது ஏற்கெனவே இருக்கும் SC/ST க்கான ஏற்கனவே அமலில் உள்ள ஒதுக்கீட்டில் உள்ள 1/3 யில் ஒரு பங்குதான்
பெண்களுக்கு ஒதுக்கப்படும். தற்போது மக்களவையில் 17 பெண்கள் SC/ST உறுப்பினர்கள் உள்ளனர். பெண்களுக்கான இடஒதுக்கீட்டு சட்டத்தை அமல்படுத்தினால் 42 ஆக உயரும். இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் 30 சதவீதம் மேற்பட்ட இடங்களில் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டுள்ளது.
14வது மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த உறுப்பினர்களே அதிகம். பிற்படுத்தப்பட்ட சமுகத்தினரின் எண்ணிக்கை மற்றும் அரசியல் ரீதியான திரட்டுதல் இச்சமூகப் பெண்களுக்கே அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் கூடுதலாக அமைகிறது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் சமூகப் பொருளாதார ரீதியாக பின்தங்கி இருப்பதை புறக்கணிக்க முடியாத போதிலும், இன்றைய சூழலில் இவர்களை அரசியல் ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் என கருத முடியாது.
14 வது மக்களவைத் தேர்தலில் 34 பேர் இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஆனால் 15 வது மக்களவையில் 28 (5%) மாக குறைந்துள்ளது. இது இந்தியாவின் இஸ்லாமிய ஜனத்தொகையோடு 4/3 ஒப்பிடும் போது மிகக் குறைவாகும். நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப் பேரவையிலும் இவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டியுள்ளது. ஆனால், இதை பெண்களுக்கான இடஒதுக்கீட்டோடு குழப்பாமல் தனியாக கவனம் செலுத்த வேண்டிய ஒரு விசயமாகும்.
இந்தியாவின் இஸ்லாமியர்களுக்கு மத ரீதியாக இடஒதுக்கீடு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ரங்கநாத் மிஸ்ரா குழுவின் பரிந்துரை கேள்விகளுக்கு விடைத்தேடும் முயற்சியாக அமைந்துள்ளது. இஸ்லாமிய சமூகத்தினருக்கு வேலை மற்றும் கல்வி ஆகியவற்றில் இடஒதுக்கீட்டை வழங்க முன்முயற்சி எடுக்க வேண்டியுள்ளது.
மசோதா அங்கீகரிக்கப்படாத எதிர்மறை வாக்குவாதங்கள்.
உள்ளாட்சிகளிலும், பஞ்சாயத்துக்களிலும் 73, 74வது சட்ட திருத்தத்தின் போது 33 சதவீத இடஒதுக்கீடு பெண்களுக்காக அமல்படுத்திய போது பல்வேறு சந்தேகங்களை எழுப்பின. பெண் பிரதிநிதிகளை எங்கே தேடுவது? அவர்களால் அந்த பொறுப்புகளை நிறைவேற்ற முடியுமா? போன்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டது. தற்போது பல மாநிலங்கள் பெண்களுக்காக 50 சதவீதம் ஒதுக்கியுள்ளது. பெண்களின் ஈடுபாட்டிலும், செயல்திறனையும் வெளிப்படுத்தியுள்ளது. பல நீண்ட பயணத்திற்கு பிறகு வந்திருக்கும் இந்த பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தை தற்போதும் பல்வேறு மாற்றுக் கருத்துக்களை வைத்து சீர்குலைக்க முயலுகின்றனர். இந்த சட்ட முன்வடிவை எதிர்த்து சொல்லக்கூடிய கருத்துக்கள் சட்ட முடிவுகள் பெண்களுக்கு தரும் சலுகைகளை விடக் குறைவானது. அரசியல் கட்சிகள் தங்களின் போட்டியாளர் பட்டியலில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை கொடுத்தாலும் பெண் போட்டியாளரை உயர்த்தினாலே பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை உயர்த்திடும் என்று சொல்ல முடியாது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 720 ஆக உயர்த்தலாம் என்று சொல்லப்படும் ஆலோசனை தேவையற்ற சிக்கல்களை உருவாக்கும். ஆகவே தான் நாடாளுமன்ற நிலைக்குழுவால் 2009 டிசம்பரில் சட்ட முன் வடிவை எந்த மாற்றமும் இன்றி பரிந்துரை செய்யப்பட்டது.
பெண்களுக்கு அரசியல் அதிகாரம் கூடுதலாக வழங்குவதால் பெண்களுக்கான பிரச்சனைகள் தீர்ந்துவிடுமா என்ன?
அப்படி நிச்சயமாக சொல்லிவிட முடியாது. நல்லண்ண அடிப்படையிலும், வர்க்கப்பார்வையோடு திட்டங்களை வகுப்பதினால் மட்டுமே இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண முடியும். யார் அதிகாரத்தில் இருந்தாலும் புதிய பொருளாதாரம் மற்றும் உலகமயச் சந்தை பொருளாதாரத்திற்கு மாற்றான ஒரு பாதையை வகுப்பதே தீர்வாகும். அது வரையும் பெண்களுக்கான இடஒதுக்கீடு போன்ற முற்போக்கு நடவடிக்கைகளை வளர்த்தெடுப்பது அவசியமாகும்.
சம உரிமை மற்றும் பெண்களின் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள அனைவரும் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற குரல்கொடுக்க வேண்டும்.
-சுதா சுந்தர்ராமன்