நூறாவது உலக மகளிர் தினம் மார்ச் 8, 2010 ஆம் தேதி நம் எல்லோருக்கும் முன்னால் மாநிலங்களவையில் எம்.பிக்கள்,  அவைத் தலைவர் அன்சாரியை அமைதியான முறையில் மகளிர் மசோதாவை நிறைவேற்ற முடியாதபடி கடுமையாக தாக்கினர். 1996ஆம் ஆண்டு முதல் 14 வருடங்களாக நிறைவேற்ற முடியாமல் இருந்த பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை மீண்டும் ஒருமுறை பெண்களுக்கு எதிரான சக்தி, ஆணாதிக்கம் செலுத்தும் சக்திகளிடம் மீண்டும் இரையாகிவிட்டது. இந்த தோல்வியை அறிந்த மகளிர் இயக்கங்கள் நாடாளுமன்ற நுழைவு வாயிலில் எப்போதும் போல முற்றுகையிட்டனர். இந்த துரோகத்தை கண்டித்து ஜனநாயக மனதுடைய மக்களின் உதவியால் நாடாளுமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தினர்.

2010 ஆம் ஆண்டு 9ஆம் தேதி அநேக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்  7 மாநிலங்களவை எம்.பிக்களின் நீக்கத்திற்கு பிறகு 186 வாக்குகளின் உதவியால் மசோதா கடைசியில் நிறைவேற்றப்பட்டது. ஒரு மசோதாவை சட்ட திருத்தம் செய்ய 2/3 பங்கு சாதகமான வாக்கு தேவை அவைகிடைத்து திருத்தம் செய்யப்பட்டது. இது ஜனநாயகத்திற்கும் இந்தியாவில் பெண்களின் இயக்கங்களுக்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.

இந்த யுத்தத்தில் வெற்றி கிடைக்கவில்லை. இந்த மசோதா நிறைவேற்றப்படாதபடிக்கு கடுமையான, நீதிக்கு புறம்பான யுத்தத் தந்திரங்களை வகுத்து மக்களவையில் நிறைவேற்றபடாதபடிக்கு முயற்சிக்கிறார்கள். இப்படியிருக்கும் போது பொது மக்களுடைய அதிக ஆதரவு பெண்களுக்கான இடஒதுக்கீடு ஒரு ஜனநாயக உரிமையே மாறாக பெண்களுக்கு பிச்சைபோடுவதல்ல இது குறித்து இந்த நாட்களில் அநேக கேள்விகளும் சந்தேகங்களும் எழுப்பப்பட்டு வருகிறது. இந்தப் பிரச்சனை குறித்து ஜனநாயக இயக்கங்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து ஜனங்களின் மத்தியில் பிரச்சாரம் செய்து அரசியல் கட்சிகளுக்கு மசோதா நிறைவேற்ற நெருக்கடி உருவாக்க வேண்டும். இது ஒது அத்தியாவசியமான ஒன்று ஏனென்றால்  இந்நாள் வரை இடதுசாரி கட்சிகளே இந்த மசோதாவினை நிலைநிறுத்தச் செய்யவும், இந்த மசோதவிற்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

இவ்வண்ணமாக UPA  இந்த மசோதா குறித்து தாமதம்காட்டுகிறது. சட்டத் துறை அமைச்சர் மீண்டும் ஒருமுறை இந்நாள் வரைக்கும் மசோதாவை நிறைவேற்ற தாமதித்துக் கொண்டே இருந்த ஆரம்ப கட்ட பேச்சுக்கு மீண்டும் தம்முடைய கவனத்தை திருப்புகிறார்.

பெண்களுக்கு இடஒதுக்கீடு தேவையா?

சுதந்திரத்திற்குப் பிறகு ஜனநாயகத்தை, பல விஷேசங்களை விரும்பிய மக்கள் அரசியல் அமைப்பில் பெண்கள் ஆண்களுக்கு சமமாக அரசியலில் பெண்கள் பங்குகொள்ள போதுமான பாதுகாப்பு இருப்பதாக உணர்ந்தார்கள். பெண்கள் பற்றியான ஆய்வில் (1975) நாடாளுமன்றத்திலும், மாநிலங்களிலும் பெண்களுக்கான இடஒதுக்கீடு பரிந்துரை செய்யவில்லை. அதைத் தொடர்ந்து அதிகமான பெண்கள் அரசியலில் நுழைவதற்கான நிறைய இடையூறுகள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.

உலக அளவிலும் பெண்களுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு (1995) அவர்கள் நடவடிக்கை எடுக்கும் அடிப்படையில் அரசியல் அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பு சட்டமயமாக்குவதை நிலைப்படுத்தின.

இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு கூட சில முக்கியமான தீர்மானங்கள் எடுக்கும் அமைப்புகளில் பெண்களின் பங்கு 10 சதவீதம் கூட இல்லை மக்களைவையிலும், மாநிலங்களவையிலும்.

முன்னேற முடியாத பரிதாப நிலையில் இருக்கிறது. 15வது மக்களவைக் கூடுதலில் 543 உறுப்பினர்களில் 59 (10.8 சதவீதம்) பெண்களே உள்ளனர்.  பெண்களுக்கான 33 சதஒதுக்கீடு தற்போது இருக்கும் பதற்ற நிலையை மாற்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகத்தை பலப்படுத்த முக்கியப் பங்கு வகிக்கிறது.

இது பெண்கள் அரசியலில் அதிகமாக பங்கு கொள்வதை பலப்படுத்தி ஊக்குவிப்பது மற்றும் அல்லாமல் அரசியல் அமைப்புகளில் ஆண்,பெண் பாகுபாடு இல்லாமல் இடம் வகுக்கும். நமது சமூதாயத்தில் பெண்களின் நிலைபாடு குறித்து கவனிக்காத போது இது முக்கியமான ஒன்று தொடர்ந்து 60 ஆண்டுகளாக சட்ட சபையில் மேலோங்கி இருந்த ஆண் ஆதிக்கம் கொண்டுள்ள நிலை மாறி இப்போது ஆண், பெண் மத்தியில் சமநிலை உருவாக்குவது ஒரு கடினமான இலக்காகவே கருதப்படுகிறது.

நிலத்திலும், சொத்திலும், வேலையிலும், கல்வியிலும் பெண்களுக்கான சமஉரிமை மறுக்கப்படவில்லை. பெண்களுக்கு எதிரான கணக்கிலடங்கா எண்ணிகையில் வன்முறை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. பாலியல் துன்புறுத்தலும் பெண்களுக்கு தொடர்ந்து நடக்கிற கொடுமைகளில் ஒன்று. நாம் பழைய நிலைமை தொடர்வதில் நாம் எதிர்த்து புதுமை கொண்டு வர விரும்பினாள் சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும், கலாச்சாரத்திலும், அரசியலிலும் பெண்களின் ஆதிக்கம் நிலைநிறுத்த வேண்டும்.

ஏன் இதை எதிர்க்கிறார்கள்:

கட்சிகளில் முக்கியப் பங்கு வகிக்கும் பெருபாலான ஆண்கள் இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு சட்டசபைக்கான பொதுத்தேர்தலில் 87 சதவீதம் குறைவாக இடம் வகித்தவர்கள். அவர்கள் தொடர்ந்து இந்த மசோதாவிற்கு ஆதரவு அளிக்காமல் எதிர்த்து குரல் எழுப்பி ஆண் அரசியல்வாதிகள் தங்களுடைய அதிகாரத்தின் மேல் ஆதிக்கத்தை விட்டு கொடுக்க மறுக்கிறார்கள். குறிப்பாக எதிர்க் கட்சியில் உள்ளவர்கள் தங்களுடைய இடத்தை பாதுகாத்து கொள்வதிலிலேயே கவனம் செலுத்தி இருக்கிறார்கள்.

இந்திய சமுதாயம் தொடர்ந்து குடும்ப அமைப்பாகவோ, குடும்பவம்சா வழியாகக் கொண்டே இருக்கிறது. இதில் ஆண்கள் பொது நிறுவனங்களிலும், பொது இடங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். பெண்கள் தனியார் நிறுவனங்களிலும் மக்களுடைய குடும்பத்திலும் காணப்படுகிறார்கள் . தொடர்ந்து மேலாதிக்கம் கையோங்கியே இருக்கிறது.

“சம்பாத்தி செய்பவர்கள் என யாரால் அடையாளம் காட்டப்பட்டது” அந்த ஆதிக்கத்தினரே இதற்குகாரணமாக உள்ளனர். முடிவெடுக்க கூடிய அதிகாரம் படைத்த அமைப்புகளில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் பால் பாகுபாட்டுடன் கூடிய கண்ணோட்டத்தில் இருப்பது இம் மசோதா நிறைவேற பெரும் தடையாக இருக்கிறது. இத்தோடு மக்களவையிலும்  குறைந்தது 15 மாநிலச் சட்ட சபையிலும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

அரசியல் வகுப்பினர் உள்லேயே OBC, தலித்துகளுக்கு எதிராக மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக மசோதாவை கொண்டு செல்வதற்கு குரல் எழுப்புவதோடு, உறுதியான எதிர்ப்பு தெரிவிக்கிரார்கள். அவர்கள் பெண்களுக்கான உள் ஒதுக்கீடும் கோருகிறார்கள். இது ஒரு சமூகத்திற்கும் மற்றொரு சமூகத்திற்கும் மோதலை உருவாக்குவதோடு மகளிர் இடஒதுக்கீட்டை முடக்கி போடுவதாக அமைக்கிறது. SC/ST என இடஒதுக்கீடு என்பது நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப் பேரவைகளிலும் ஏற்கனவே அமலில் உள்ளது. பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உள் ஒதுக்கீடு கோரும் போது ஏற்கெனவே இருக்கும் SC/ST க்கான ஏற்கனவே அமலில் உள்ள ஒதுக்கீட்டில் உள்ள 1/3 யில் ஒரு பங்குதான்

பெண்களுக்கு ஒதுக்கப்படும். தற்போது மக்களவையில் 17 பெண்கள் SC/ST உறுப்பினர்கள் உள்ளனர். பெண்களுக்கான இடஒதுக்கீட்டு சட்டத்தை அமல்படுத்தினால் 42 ஆக உயரும். இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் 30 சதவீதம் மேற்பட்ட இடங்களில் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டுள்ளது.

14வது மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த உறுப்பினர்களே அதிகம். பிற்படுத்தப்பட்ட சமுகத்தினரின் எண்ணிக்கை மற்றும் அரசியல் ரீதியான திரட்டுதல் இச்சமூகப் பெண்களுக்கே அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் கூடுதலாக அமைகிறது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் சமூகப் பொருளாதார ரீதியாக பின்தங்கி இருப்பதை புறக்கணிக்க முடியாத போதிலும், இன்றைய சூழலில் இவர்களை அரசியல் ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் என கருத முடியாது.

14 வது மக்களவைத் தேர்தலில் 34 பேர் இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஆனால் 15 வது மக்களவையில் 28 (5%) மாக குறைந்துள்ளது. இது இந்தியாவின் இஸ்லாமிய ஜனத்தொகையோடு 4/3 ஒப்பிடும் போது மிகக் குறைவாகும். நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப் பேரவையிலும் இவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டியுள்ளது. ஆனால், இதை பெண்களுக்கான இடஒதுக்கீட்டோடு குழப்பாமல் தனியாக கவனம் செலுத்த வேண்டிய ஒரு விசயமாகும்.

இந்தியாவின் இஸ்லாமியர்களுக்கு மத ரீதியாக இடஒதுக்கீடு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ரங்கநாத் மிஸ்ரா குழுவின் பரிந்துரை கேள்விகளுக்கு விடைத்தேடும் முயற்சியாக அமைந்துள்ளது. இஸ்லாமிய சமூகத்தினருக்கு வேலை மற்றும் கல்வி ஆகியவற்றில் இடஒதுக்கீட்டை வழங்க முன்முயற்சி எடுக்க வேண்டியுள்ளது.

மசோதா அங்கீகரிக்கப்படாத எதிர்மறை வாக்குவாதங்கள்.

உள்ளாட்சிகளிலும், பஞ்சாயத்துக்களிலும் 73, 74வது சட்ட திருத்தத்தின் போது 33 சதவீத இடஒதுக்கீடு பெண்களுக்காக அமல்படுத்திய போது பல்வேறு சந்தேகங்களை எழுப்பின. பெண் பிரதிநிதிகளை எங்கே தேடுவது? அவர்களால் அந்த பொறுப்புகளை நிறைவேற்ற முடியுமா? போன்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டது. தற்போது பல மாநிலங்கள் பெண்களுக்காக 50 சதவீதம் ஒதுக்கியுள்ளது. பெண்களின் ஈடுபாட்டிலும், செயல்திறனையும் வெளிப்படுத்தியுள்ளது. பல நீண்ட பயணத்திற்கு பிறகு வந்திருக்கும் இந்த பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தை தற்போதும் பல்வேறு மாற்றுக் கருத்துக்களை வைத்து சீர்குலைக்க முயலுகின்றனர். இந்த சட்ட முன்வடிவை எதிர்த்து சொல்லக்கூடிய கருத்துக்கள் சட்ட முடிவுகள் பெண்களுக்கு தரும் சலுகைகளை விடக் குறைவானது. அரசியல் கட்சிகள் தங்களின் போட்டியாளர் பட்டியலில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை கொடுத்தாலும் பெண் போட்டியாளரை உயர்த்தினாலே பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை உயர்த்திடும் என்று சொல்ல முடியாது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 720 ஆக உயர்த்தலாம் என்று சொல்லப்படும் ஆலோசனை தேவையற்ற சிக்கல்களை உருவாக்கும்.  ஆகவே தான் நாடாளுமன்ற நிலைக்குழுவால் 2009 டிசம்பரில் சட்ட முன் வடிவை எந்த மாற்றமும் இன்றி பரிந்துரை செய்யப்பட்டது.

பெண்களுக்கு அரசியல் அதிகாரம் கூடுதலாக வழங்குவதால் பெண்களுக்கான பிரச்சனைகள் தீர்ந்துவிடுமா என்ன?

அப்படி நிச்சயமாக சொல்லிவிட முடியாது. நல்லண்ண அடிப்படையிலும், வர்க்கப்பார்வையோடு திட்டங்களை வகுப்பதினால் மட்டுமே இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண முடியும். யார் அதிகாரத்தில் இருந்தாலும் புதிய பொருளாதாரம் மற்றும் உலகமயச் சந்தை பொருளாதாரத்திற்கு மாற்றான ஒரு பாதையை வகுப்பதே தீர்வாகும். அது வரையும் பெண்களுக்கான இடஒதுக்கீடு போன்ற முற்போக்கு நடவடிக்கைகளை வளர்த்தெடுப்பது அவசியமாகும்.

சம உரிமை மற்றும் பெண்களின் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள அனைவரும் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற குரல்கொடுக்க வேண்டும்.

-சுதா சுந்தர்ராமன்

Pin It

தமிழத்தில் கடந்த சில மாதங்களாய் பல சாமியார்கள் தொடர்ந்து அம்பலப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். இருப்பினும் புதிய சாமியார்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றனர். ஏற்கனவே நிறைய அம்மாக்கள் தமிழகத்தில் உண்டு நாராயணி அம்மா தங்கக் கோயில் நடத்துகிறார்! மேல்மருவத்தூர் அம்மா கல்லூரிகளை நடத்துகிறார் இதுவன்றி அடிக்கடிகேரளாவிலிருந்து அமிர்தானந்தமாயி அம்மா வருகிறார்! லோக்கல் சாமிகளாக பீடி சாமியார், பீர் சாமியார், சாக்கடை சாமியார், கஞ்சா சாமியார், குவாட்டர் சாமியார், பாம்பு சாமியார், வாழைப்பழத்தை வாயில் ஊட்டும் சாமியார் என வித விதமான, வகை வகையான சாமியார்கள் உள் ள னர். இதுவன்றி ரவிசங்கர், நித்தியானந்தம், கல்கி, ஜக்கி வாசுதேவ் போன்ற சாமி யார்கள் கதவை திறகாத்துவரட்டும் மனசே ரிலாக்ஸ் பிளீஸ் போன்ற தலைப்புகளில் மேல், நடுத்தர வர்க்கத்தை வசியப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள் மேலும் சங்கராச்சாரி வகையறாக்கள் மடாதிபதிகளாக, மதத்தலைவர்களாக தங்களால் முடிந்த சேவைகளை செய்து வருகின்றனர் அவாள் சேவைகளை நாடு அறியும் இதுவன்றி தொலைக்காட்சிகளில் அருளாசி வழங்கும் நபர்கள் தனி.

மற்றொருபுறம்... ரோமன் கத்தோலிக், தென்னிந்திய திருப்பை, ஆதிபெந்த கோஸ்தே சபை, தி பெந்தகோஸ்தே சபை, கிருபாசனம் பெற்த கோஸ்தேசபை, பூர்ண சுவிசேஷ சபை, ஏசு அழைக்கிறார் சபை, இரட்சண்ய சேளைபபை, கல்வாரி ருத்ரன் அசம்பளி ஆப்காட்,நல்லமேய்ப்பன் மிஷன்சபை, சீயோன் அசம்ப்ளி சபை, ஏழாம் நாள் அற்புத சபை, யோகோவா சபை என்ற பெயர்களில் இயங்கும் இவர்களின் அப்ரோச்சே  தனிதான்.....

குருடர்கள் பார்க்கிறார்கள்,முடவர்கள் நடக்கிறார்கள் ,ஊமைகள் பேசுகிறார்கள், ஆவிகளுக்குரிய கூட்டம் என இவர்கள் அடிக்கும் கூத்து சொல்லி மாளாது,  தொலைக்காட்சி சேனல்களில்காலை நேரத்தில் கண்களை  முடிக் கொண்டு நேயர்களை பாவிகளே என்று இவர்கள் ஆசீர்வதிக்கும்காட்சிகள் நகைச் சுவை மிக்கதாக இருக்கும். துவக்கத்தில் நல்ல நோக்கத்துடன் கல்வியை கொடுத்த மிசனரிகள் உண்டு.ஆனால் தமிழகத்தில் இவர்களால் நடத்தப்படும் கல்வி நிலை யங்கள் கல்வி வியாபார நிறுவனங்களாக மாறி உள்ளது .இதில் இவர்கள் செய்யும் அநீதிகளை பட்டியலிட்டால் அது தனி கட்டுரையாக விரியும்.

மேலும் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்ற தலைப்பிலும் இன்னும் பல பெயர்களிலும் நபிகள் நாயகத்தின் புகழை பரப்புவதாகச் சொல்லி தொலைக்காட்சி உட்பட பல ரூபங்களில் அவர்களால் முடிந்ததை அவர்கள் செய்து வருகிறார்கள். அவர்களின் மத பிரச்சாரம் தனி ரகமாய் சென்று கொண்டிருக்கிறது.

அடிப்படையில எந்த மதமும் மாற்று மதத்தின் மீதும் மாற்று மதத்தை நம்பும் மக்கள் மீதும் வன்மத்தை விதைப்பதில்லை. அன்பை மட்டுமே போதிக்கின்றன. வாழ்வில் அல்லலுற்று ஆற்றாமையால் வாடி நிற்கிற மனிதனுக்கு, சுமைதாங்கியாய் மதங்களின் அடிப்படை திகழ்கிறது .ஆனால் கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்களும் மதத்தை தங்களுடைய அரசியல் சுய பொருளாதார லாபத்திற்காக பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே மாற்று மதத்தின் மீது வன்மங்களை விதைத்து, பிரச்சனைகளை அறுவடை செய்கின்றனர். ஆனால் அனைத்து மதங்களிலும் உள்ள அடிப்படைவாதிகளும்  ஒன்றாய் கரம் கோர்த்து நிற்பார்கள். அது முற்போக்கு ஜனநாயக சக்திகளை வேரறுப்பதில் உதாரணத்திற்கு கேரளாவில் உள்ள இடதுசாரி அரசாங்கம் மதமாற்ற மனிதன் என்ற சிறுகதையை பாடநூலில் சேர்த்த போது கேரளா சந்தித்த கலவரத்தை நாடறியும்.

பின்னணி...

சரி, இத்தகைய சூழலில் மீண்டும் மீண்டும் கடவுள் நம்பிக்கை சார்ந்த மக்கள் கூட்டம் அதிகமாக அலைமோதுவதன் காரணம் என்ன ? மத அமைப்புகள் பின்னால் மக்கள் திரளகாரணம் என்ன? இதற்கு மிக எளிதாக வாழ்வியல் பிரச்சனையே காரணம் என்று கூற முடியும்,

இந்திய நாட்டில் 1990களில் தீவிரமாக அமலாகத் துவங்கிய உலகமயம் ஒட்டுமொத்தமாய் இந்திய சமூக வாழ்க்கையில் தலைகீழ் மாற்றத்தை விதைக்கத் துவங்கியது சமூகப் பாதுகாப்பு என்பதும்எதிர்கால நம்பிக்கை என்பதும் கேள்விக் குறியாய் மாறியது லாபம் மட்டுமே நோக்கம் என்பதை தாரக மந்திரமாய் கொண்ட முதலாளித்துவத்தின் புதிய பரிணாமமான நிதி மூலதனத்தின் உலகமயம் தொழிற்சாலைகளை தொழிளாளர்கள் இல்லாமல் நடத்தத் தூண்டியது எந்திரங்கள், விஞ்ஞான தொழில் நுட்பம் மனிதர்களின், இட.ங்களை பிடித்துக் கொண்டன சமூக வெளி எங்கும் வேலையில்லாப் பட்டாளம் வீங்கி புடைக்கத் துவங்கியது. அரசு தனக்கான சமூகப் பொறுப்பை தட்டிக்கழிக்கத் துவங்கியது. வேலை கொடுப்பது அரசின் கடமை இல்லை என்றானது கிராமப் புறங்களின் விவசாயம் அடியோடு அழிக்கப்படுகிறது நிலங்களில் வேலை செய்பவர்கள் நகரங்களை நோக்கி வேறு வேறு, இடங்களைத் தேடி அலையத் துவங்கினர் கணினித் துறையில் வேலை செய்தால் கூட பாதுகாப்பு இல்லாத சூழலில் மக்களின் மனநிலை மாற்றம் அடைகிறது.

தன் குடும்பத்திலிருந்து அந்நியப்பட்டு இதுவரை தனக்கு பழக்கமான முகங்களுடன் உள்ளூரில் வாழ்ந்து. குடும்பம் என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்த தனி மனிதன்,தனக்கு முற்றிலும் பரிச்சயம் இல்லாத நகர்புறத்திற்கு வரும்பொழுது அந்நியமானவனாக குடும்பத்திலிருந்தும் உறவுகளிலிருந்தும் துண்டிக்கப்படுகிறான்.

தன் பணியிடத்திலிருந்து அந்நியப்பட்டு தன் சக தொழிலாளிக்கோ, தனக்கோ ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு பெற அணிதிரண்டு குரல் எழுப்பும் நிலையில் இல்லாமல் இருக்கிறான்.

தனது சொந்த கிராமத்தில் என்ன வேலை செய்வது என்று திகைத்து நிற்கிறான், இந்த நேரங்களில் மனிதனின் மனதை அலைகழிக்கும் கேள்விகள் அதுவும் விடைகானா கேள்விகள் எழுகிறது

இத்தகைய நெருக்கடியான சூழலில் தனி மனித உறவு பல மாற்றங்களை சந்திக்கின்றது பிறருடனான தனி மனித உறவுகளில் பல மாற்றங்கள் நடக்கிறது தனிமனிதனுக்கும் குடும்பத்திற்குமான உறவில் மாற்றங்கள் நடக்கிறது.தனிமனிதனுக்கும் வேலைக்கு மான உறவில் மாற்றங்கள் ஏற்படுகிறது.இந்த மாற்றங் களில் ஏற்படும் மன அழுத்தம், அமைதியை, நிம்மதி யைத் தேடி அலைகிறது.அந்த நிம்மதியும் ஒருவித பாதுகாப்பு உணர்வும், மத அடையாளம் மூலம் அவருக்கு கிடைப்பது எளிதாக இருக்கிறது.

கடவுள் சார்ந்த நம்பிக்கையும்,கோயில் திரு விழாக்களும் மிகவும் அதிகமாக மக்களை திரட்ட, மேற்கண்ட அரசியல், பொருளாதாரப் பின்னணி மிகவும் உதவுகிறது: இந்த இடத்தை பயன்படுத்தும் மதவாதிகள், வாழ்வின் இறுதித் தீர்வு என்பது கடவுளை சரணடைதல் என்ற வேதாந்தத்தை பல ரூபங்களில் மீண்டும்,மீண்டும் அடித்து இறக்கி வருகின்றனர், நவீன அறிவியல் தொழில் நுட்பத்தை தனக்கு சாதகமாக முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் தொலைக்காட்சி ஊடகம் இவர்களுக்கு முழுமையாக பயன்படுகிறது,

சர்வதேச நிதி மூலதனத்திற்கும்,இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் மக்கள் வாழ்வியல் சார்ந்து,கோரிக்கை சார்ந்து போராடாமல்  இருப்பதே பாதுகாப்பானது. எனவே, சாதி, மத, இன, மொழி அடையாளம் சார்ந்து பிரிந்து நிற்க முழு ஒத்துழைப்பையும் நல்குகின்றனர். பிரதமர் முதல் வட்டச் செயலாளர் வரை சாமியார் களின்காலில் விழுவது,மந்திரிகள் கூட கோயில் திருவிழாக்களில் பங்கேற்பதையும், புதிய புதிய சாதிய இயக்கங்களின் எழுச்சியினையும் இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

எனவே....

இந்திய சர்வதேச ஆளும் வர்க்கங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு நமது நாட்டின் ஊடகங்கள் தங்களால் முடிந்த அளவு மக்கள் மனதை பண்படுத்துகின்றனர், அனைத்து தொலைக்காட்சிகளிலும், அச்சு ஊடகங் களிலும் மதம் சார்ந்த நிகழ்வுகள் தொடர்ந்து இடம் பெறுவது இதனால்தான், சாமியார்களை, கடவுள் நம்பிக்கையை உயர்த்திப் பிடிக்கும் இவர்கள் நித்தியானந்தா, பிரேமானந்தா, சந்திராசாமி, சங்கரன் போன்ற சாமியார்கள் மட்டும் போதும்

அந்த சம்பவங்களை வெறும் தனி நபர்களின் கொல்லைகள் மற்றும் கற்பழிப்பு, சல்லாபம், காமம் சார்ந்த நிகழ்வுகளுடன் சம்பந்தப்படுத்தி பரபரப்பு செய்திகளாக்கி அடிப்படிடையை கேள்வி எழுப்ப மறுக்கின்றன அல்லது அப்படி எழும் கேள்விகளை மறைக்கின்றன.

உதாரணத்திற்கு நித்தியானந்தா சம்பவத்தில் அவனது காம உணர்வு இயல்பானது தன்னை கடவுளாக அறிவித்து லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றிய ஆபாசத்தைவிட, அய்யோக்கிய தனத்தைவிட ரஞ்சிதாவுடன் இயற்கை உணர்வை தனித்தது தவறுபோல் சித்தரிக்கப்பட்டது ஏன் ?  கடவுள் சார்ந்த அவதாரங்கள் சார்ந்த நம்பிக்கைளை கேள்விக் குள்ளாக்காமல் காம களியாட்டங்கள் முதன்மை பெற்றது எதனால் ? தன்னை பத்தாவது அவதாரம் என்று அறிவித்த கல்கி, போதையில் கட்டுண்டு கிடக்கும் படங்கள்  மட்டும் அச்சாவது எதற்காக?

பதில் மிகவும் முக்கியமானது .நமது ஊடகங்களுக்கு இரண்டு நோக்கம் இருக்கிறது இந்த நபர்கள் அம்பலப்பட்டால் நாளை வேறு சாமியார்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.. ஆனால் கடவுள் நம்பிக்கை சிதைந்தால் வியாபாரம் பாதிக்கும். அடுத்து காமம்.. போதை என்ற மனித மனதை கிளர்ச்சியூட்டும் சம்பவங்களை வெளிப்படுத்தினால் வியாபாரம் அதிகரிக்கும் எனவே ஒரே கல்லில் இரண்டு கொய்யா என்பது போல மூட நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை சார்ந்த கேள்விகளை பின்னுக்குத் தள்ளி ஆபாச வியாபாரம் நடத்த இந்த சம்பவங்களை பயன்படுத்துகின்றன.

சமூக நெருக்கடி, உளவியல் பிரச்சனைகளுக்கான தீர்வு என்பது. அவதாரங்களிடம் இல்லை. எளிய மனிதர்களின் போராட்டத்தில்தான் உள்ளது என்ற உண்மையை மறைக்கும் அபத்தங்களை அம்பலப்படுத்துவது நம் முன் கடமையாய் உள்ளது.

- எஸ்.ஜி.ரமேஷ்பாபு

Pin It

நான் அவரை சிறந்த நிர்வாகியாக மட்டும் பார்க்கவில்லை. தனது அரசியல் செல்வாக்கை, பதவியைக் கொண்டு சாதாரண மக்களுக்கு தொண்டு செய்யும் மனிதநேயம் மிக்கவராகவும் பார்த்தேன். அவர் சிறந்த நீதிபதி, நிர்வாகி, அரசியல் செயல்பாட்டாளர் என குறிப்பிட்ட இ.எம்.எஸ் சின் மதிப்பிற்குரிய வார்த்தைகள் அனைத்திற்கும் சொந்தக்காரர் நீதியரசர் கிருஷ்ணய்யர் அவர்கள் ஆவார். அம் மகத்தான மனிதனின் வாழ்க்கையை படிக்க மிகவும் அருமையான வாய்ப்பாக இப்புத்தகம் வெளிவந்துள்ளது.

இந்திய நீதித்துறை வரலாற்றிலும் அரசியல் வரலாற்றிலும் மிகவும் குறிப்பிடத்தக்கவர் வி.ஆர். கிருஷ்ணய்யர் அடிமைப்பட்டுத் கிடந்த பிரிட்டிஷ்  இந்தியாவில் 1915 நவ 15ந் தேதி புதிய விடியலுக்காக அவர் உதயமானது முதல் தொடர்ந்து வீரநடைபோட்டு எழுகிறது அவர் வரலாறு.

தன்னுடைய பள்ளி மாணவப் பருவத்தில் துவங்கி கல்லூரி சட்ட மாணவராக, வழக்கறிஞராக, nithi_00மக்கள் சேவகராக சிறந்த அமைச்சராக, உயர்நீதி மன்ற நீதிபதியாக, சட்டக்கமிஷன் உறுப்பினராக, உச்சநீதிமன்ற நீதிபதியாக பணி நிறைவு பெற்ற பின்னர் அவர் ஆற்றிய பணிகளை இந்நூல் விரிவாக குறிப்பிட்டுள்ளது. அதே சமயத்தில் அவர் வாழ்கையில் கிடைத்த அத்துனை தருணங்களின் போதும் ஏழை எளிய உழைப்பாளி மக்களின் வாழ்வுக்காக,  உரிமைக்காக வாதாடியும், போராடியும் வந்துள்ளதை இந்நூல் உரிய முறையில் குறிப்பிடுகிறது.

வி.ஆர். கிருஷ்ணய்யர் தன்னுடைய மக்களின் உரிமைக்காக போராட்டத்தில தன்னை ஈடுபடுத்திக் கொண்டதோடு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு அக்கொடுமையையும் அனுபவித்துள்ளார். 1957ஆம் ஆண்டு வாக்குசீட்டு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவையில் உள்துறை, சிறைத்துறை, பாசனத்துறை அமைச்சராக பதவி வகித்த பின்னரும் கூட லட்சாதிபதியாக இருந்த அவர் சில ஆயிரம் ரூபாய்களோடு ஊர் திரும்பினார் என்பதை அறியும் போது அவரின் தியாகம், எளிமை போன்ற உயரிய பண்பு அவருக்கேயுரியது. இன்றைய அரசியலில் அத்தகைய பண்புகள் மங்கிப்போய் கொண்டிருக்கும் சூழலில் அதனை உயர்த்திப் பிடிக்கும் பணியை செய்பவர்களின் கரத்தை வலுப்படுத்துவது அவசியமாகும்.

மனிதர்களை நேசித்த அந்த மாமனிதன் வாயில்லா ஜீவன்கள் மீதும் தம்முடைய பறிவைக்காட்டத் தவறவில்லை. நோயாளிகள், அடித்தட்டு மக்களின் துன்பங்களில் உடன் நின்று பாதுகாத்தவர் ஆவார்.

காங்கிரசின் சிறுபிள்ளைத் தனம்:

கிருஷ்ணய்யரை நேரடியாக அரசியலில் சந்திக்க முடியாதகாங்கிரஸ் தனக்கே உரித்தான சிறுபிள்ளைத்தனமான முயற்சியில் இறங்கி அவரை தங்கள் கட்சியில் சேர்க்க முயற்சி மேற்கொண்டது. மக்களுக்கு துரோகம் என்பதை தம் கனவில் கூட நினைக்காத கிருஷ்ணய்யரிடம் அம்முயற்சி தோல்வியுற்றது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

வாழ்க்கை போகும் பக்கம் வளைந்து வாழும் மனிதர்களை உருவாக்கும் சமூகத்தில் தன்னுடைய லட்சியத்தை தீர்மானித்து வாழ்ந்தவர் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர் தன்னுடைய நீதிபதி பதவி ஏற்கும் உறுதி மொழியில் அதனை வெளிப் படுத்தியது பற்றி இந்நூல் மிகச்சரியாகக் குறிப்பிட்டுள்ளது.

நாட்டை கலக்கிய தீர்ப்பு

அலகாபாத் தீர்ப்புக்குப் பின் இந்திரா அம்மையார்  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவ்வழக்கு நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் முன் விசாரனைக்கு வந்தது. முழுமையான தடைக்குப் பதிலாக குறிப்பிட்டகாலத்திற்கான நிபந்தனையுடன் கூடிய இடைக்காலத் தடையை வழங்கினார். அவ்வழக்கு, அதன் சூழ்நிலைகளையும் படம் பிடித்துகாட்டுவதைப் போன்று  அற்புதமாக காட்சிப்படுத்தி உள்ளார் நூலாசிரியர்.

வேட்டி, சட்டையில் எளிய மனிதராக அங்கு சென்ற போது அவரின் பெருமை அறியாத மூடர்களின், கோட்பாட்டை விமர்சித்துவிட்டு அங்கிருந்து சுயமரியாதையுள்ள பெருமைக்குரிய இந்தியனாக கம்பீரமாகத்  திரும்பினார். இச்செயலுக்குகாரணமான சென்னை கிரிக்கெட் கிளப்பை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எப்.ஐ) தொழிற்சங்க இயக்கமும் ஆர்ப்பாட்டம் செய்தது என்ற தகவலும் இந்நூலில் உரிய முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படி வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களின் வாழ்க்கை சம்பவங்களை அதில் அவரின் வார்த்தைகளைக் கொண்டே மிக நேர்த்தியாக அடுக்கி அற்புதமாக நூல் எழுதப்பட்டுள்ளது.

அதேபோல் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒன்றுபட்ட போராட்டத்தில் ஈடுபட்ட அவர் குடியரசுத் தலைவர் தேர்தல் துவங்கி குஜராத் இனப் படுக்கொலை என தொடர்ந்து அக்கோட்பாட்டை உயர்த்திப் பிடித்துள்ளார் என்பதும், இந்திய சமூகத்தின் அவமான சின்னமான சாதிய முறையும், அதற்கு எதிரான போராட்டம் பற்றியும், அவர்மீதான அவமதிப்பு வழக்குகளையும் மிகுந்த அக்கறையோடு சுட்டிக்காட்டி விளக்கி உள்ளது இப்புத்தகம்.

ஏழை எளிய உழைப்பாளி மக்களின் மனித உரிமையை பாதுகாத்து நீதிமன்றத்தை நீதியின் ஆலயங்களாக மாற்றும் மிக முக்கிய வரலாற்றுக் கடமையை ஆற்றியவர் என்பதை இந்நூலில் அறியமுடிகிறது.

அதே போல கேரளா முதல்வர் அச்சுதானந்தன் தலைமையிலான இடது முன்னணி அரசு கடந்த 2009 குடியரசு தினத்தன்று அரசிடம் எந்த ஒரு பலனும் பெறாமல் கடும் உழைப்பால் உருவாக்கப்பட்ட சட்ட சீர்திருத்த கமிஷன் பரிந்துரையை அதன் தலைவர் கிருஷ்ணய்யர் சட்ட அமைச்சர்களிடம் வழங்கினார். 65 புதிய சட்ட மசோதா, 30 சட்ட திருத்த மசோதா, விதிகள், நடைமுறைகள் என 104 மசோதாவை வடிவமைத்து  சாதனையைத் தொடர்ந்தார் அச்சிற்பி.

நீதியரசர் கிருஷ்ணய்யர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை உலக அரசியல், இந்திய அரசியல், கேரள அரசியல் பின்னணியுடன் அலசி மிகவும் அற்புதமான முறையில் இந்நூலை  எழுதியுள்ள நூலாசிரியர் அ. மகபூப்பாட்சா அவர்கள் நம் அன்பிற்கும், பாராட்டிற்கும் உரியவர்.

உலகமய சூழ்ச்சியால் ஏகாதிபத்திய, முதலாளித்துவ, மதவெறி அரசியல் மக்களை மேலும், மேலும் பிளவுபடுத்திக் கொண்டிருக்கும்  சூழலில் நீதியரசர் கிருஷ்ணய்யரின் வாழ்க்கை, வரலாறு அதனை முறியடிக்கும் அற்புதமான ஆயுதமாக  திகழும். இந்நூலின் தத்துவப்பார்வை இந்திய மக்களின் சமூக பொருளாதார விடுதலைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்காக உள்ளது சிறப்பம்சம்.

இத்துடன் கிருஷ்ணய்யரின் தாத்தா, அப்பா, தாய், உடன் பிறந்தவர்கள், மனைவி வாரிசு என அவர்களின் உயரிய பங்குகள் இந்நூலில் மிகவும் அற்புதமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய முக்கியமான அம்சங்களை பல இந்நூலை நாம் படிக்கும் போது உள்வாங்கிட முடியும்.

இந்நூல் அறிமுகத்தில் வி.ஆர். கிருஷ்ணய்யர் போன்ற உயர்ந்த மனிதர்களின் வாழ்க்கை வரலாறு இன்றைய இளைஞர்கள் படிக்க வேண்டிய வரலாறாக உள்ளது. அவர் நடந்துகாட்டிய பாதையில் அடியெடுத்து நாமும் பின் செல்ல வேண்டியது அவசியம். அவரின் வாழ்க்கை நாம் அனைவரும்  பின்பற்ற வேண்டிய வரலாறாகவும் உள்ளது. அத்துடன் அவர் பாடுபட்ட தொழிலாளி, விவசாயி, ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட  மக்களின் மனித உரிமைகளை வாழ்வாதாரங்களை பெற்றுத்தர பாடுபடுவது அவரின் உயர்ந்த லட்சியத்திற்கு செய்யும்காணிக்கையாக இருக்கும்.

அவரின் பன்முகத் திறன் இளைஞர்களுக்கு முன்மாதிரியான ஒன்றாக உள்ளது. கிருஷ்ணய்யர் வாழ்க்கை ஒரு வரலாறாக உள்ளது.  இவ்வரலாற்று நூலை இளைஞர்கள் அவசியம் படித்து  பயன்பெற்றிட வேண்டும்.

நீதிவானில் ஒரு செந்தாரகை

ஆசிரியர், அ. மகபூப் பாட்சா

வெளியீடு:

சோக்கோ அறக்கட்டளை

கே.கே. நகர், மதுரை 20

ரு. 200

Pin It

ஜூன் 25 1950 லிருந்து ஜூன் 27 1957 வரை நீடித்த கொரிய யுத்தமானது இரணடாம் உலகப் போருக்குப் பிறகு மிகக் கொடூரமான முறையில் நடத்தப்பட்ட யுத்தமாகும். கொரிய யுத்தத்தின்மூலம்தான் அமெரிக்காவின்  பனிப்போர் உச்சக்கட்டத்தை தொடங்கி வைத்தது. கொரிய யுத்தத்தில் ஈடுபட்ட அமெரிக்கா போர்காலத்தில் வடகொரியாவும் சீனாவும் பல மனித உரிமைகளை மீறி செயல்பட்டன என தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. என்றாலும் உண்மையில் அமெரிக்காதான் அத்தகைய மனித உரிமைகளை மீறி செயல்பட்டது என தற்போது வெளிப்படத் துவங்கியுள்ளது. அமெரிக்கா கொரிய தீபகற்பத்தில் 1950 ஆம் ஆண்டு நடத்திய போரில் பல அப்பாவி மனிதர்களை படுகொலை செய்தும், கைது செய்த நபர்கள் மீதுகாட்டு மிராண்டித்தனமான சித்திரவதைகளையும்,தென்கொரியா அரசுடன் சேர்ந்து கொண்டு அமெரிக்க ராணுவம் செய்துள்ளதை தற்போது ஆதாரப் பூர்வமாக வெளிப்பட்டு உள்ளது.

அமெரிக்க ராணுவத்தின் தலைமையின் கீழ் அப்பாவி பொதுமக்களை ரகசியமாக படுகொலைகளை அமெரிக்கா செய்ததை யுத்தம் நடத்திய போது எடுத்த புகைப்படங்களை கடந்த வருடம் வாஷிங்டனில் அமெரிக்க ராணுவம் வெளியிட்டது. அந்தப் புகைப்படங்களில் சிறைக் கைதிகளை வெள்ளைத் துணியினால் உடல் முழுவதும் மறைக்கப்பட்டு பின்புறமாக கைகள் கட்டப்பட்டு தலை குனிந்த நிலையில், யுத்த பதுங்குகுழியின் சுவர் பக்கமாக நிற்க வைத்து, தென் கொரிய கொலையாளிகள் கைதிகளின் பின்தலையில் சுட்டு கொல்லும் போது அந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு உள்ளன. வின்னிங்ஸ்டன் என்ற இங்கிலாந்து பத்திரிகை நிருபர் அமெரிக்கா கம்யூனிஸ்ட் தினசரி பத்திரிகையான டெய்லி ஒர்க்கரில் இந்த படுகொலைகள் தென்கொரிய நகரமான டோவோன்ஜோனில் 1950இல் நடந்ததை யுத்தகாலத்தில் எழுதிய போது யாரும் அதை கண்டுகொள்ளவில்லை. ஆனால் உண்மைகள் நீண்டகாலத்திற்கு பிறகு தற்போது வெளிவந்து, ஆலன் வின்னிங்ஸ்டன் எழுதியது உண்மைதான் என நிருபணமாகி உள்ளது.

2002 ஆம் ஆண்டிற்கு பிறகு தென்கொரிய நகரமான தைபூனில் ஏராளமான ரகசிய சவக்குழிகள் இருப்பது எதேச்சையாக கண்டுபிடிக்கப்பட்டது. தென்கொரியாவிலிருந்து வருகின்ற பத்திரிகை செய்திகளின்படி டோவோன்ஜோனில் அமெரிக்க ராணுவம் கொரிய யுத்தத்தின் போது அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்து புதைத்த பல சுடுகாடுகள் தற்போது தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. 1990ஆம் ஆண்டுக்கு பிறகு, பாதிக்கப்பட்டவர்கள் வெளியே வந்து சாட்சியங்கள் அளிக்க ஆரம்பித்து உள்ளதால் பல்வேறு விஷயங்கள் தற்போது வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது.

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி ரோ மூ ஷீயூன் மூலம் 2006இல் அமைக்கப்பட்ட வட,தென்கொரிய உண்மை மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு குழுவின் மூலம் புதிய ஆதாரங்கள் பல கிடைத்துள்ளன. அவரின் பதவிக்காலம் முடிந்து செல்லும் போது கும்பல் படுகொலைகளை செய்தவர்களுக்கு பொது மன்னிப்பும் கும்பல் படுகொலைகள் தென்கொரிய அரசின் ஆதரவுடன் தான் நடந்துள்ளன எனவும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

1950இல் அமெரிக்காவின் கைப்பாவை அரசு 30,000 தென்கொரிய விவசாயிகளை கம்யூனிஸ்ட் ஆதரவு உள்ளவர்கள் எனக் கூறி அவர்களை சிறையில் அடைத்தது. யுத்தகாலத்தில் தென்கொரிய அரசு உருவாக்கிய தேசிய வழிகாட்டும் குழுவின் உதவியுடன் வாழ்விடங்களிலேயே சிறை வைத்து அவர்களின் செயல்பாடுகளை கண்காணித்து கட்டுப்படுத்தி வந்தது. கொரிய தீபகற்பம் போர் முடிந்தவுடன் தேசிய வழிகாட்டுக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரையும் தென்கொரிய அரசு கொன்றுவிட்டது என ஆதாரங்களுடன் உண்மை மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு குழு வெளியிட்டுள்ளது.

1950களில் கோடைகாலத்தின் போது தென்கொரிய நகரமான டோவோன்ஜோனில் தென் கொரிய pamm_ppoபடைகள் பத்தாயிரக் கணக்கான கம்யூனிஸ்டுகளையும், விவசாயிகளையும் கொன்ற தோடு, பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் கும்பல் கும்பலாக படுகொலைகள் செய்துள்ளது. இந்தப் படுகொலைகளில் ஈடுபட்ட சிறைகாவலாளியின் கூற்றின்படி சுட்டுக் கொல்லப்பட்ட சாதாரண கைதிகள் யாரும் கம்யூனிசத்தைப் பற்றியோ, கம்யூனிஸ்டுகளின் திட்டங்களைப் பற்றியோ எதுவும் அறியாத அப்பாவி தென்கொரிய விவசாய பொதுமக்கள்என பத்திரிகை சந்திப்பின் போது கூறியுள்ளனர். மறு ஆய்வு செய்யப்பட்ட பத்திரிகை செய்திகளின் படி அமெரிக்க ராணுவ அதிகாரிகள் பல கொடூரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட மனித உடல்களை எந்தவிதமான இறுதிச் சடங்கும் செய்யாமல், பதுங்கு குழிகளிலும், பயன்படாத சுரங்கங்களிலும், கடல்களிலும் வீசியெறிந்துள்ளனர் என தென்கொரிய தொலைக்காட்சி பல மனித உடல்களின் எச்சங்களை கண்டுபிடித்ததன் வாயிலாக வெளி உலகத்திற்கு தெரிய வந்தது.

இந்தப் படுகொலைகளை அமெரிக்க அரசும் அதன் ராணுவமும் செய்துள்ளதால் இதில் ஈடுபட்டுள்ளவர்களை விசாரணை நடத்தி தண்டனை கொடுக்கப்பட வேண்டும். என தென் கொரிய ஆய்வாளர்கான்மான்கில் தெரிவித்துள்ளார்.

அதிக துன்பமளித்ததும் மிகக் கொடூரமானது மான 1950களின் முற்பாதியில் நடந்த தீபகற்ப கொரிய யுத்தம். அதில் சிதிலமடைந்த மனித உடல்கள் இன்னும் நாம் காட்டுமிராண்டிகளின் காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பதாக உள்ளது என உண்மை பரஸ்பர ஒத்துழைப்பு குழுவின் உறுப்பினர் கிம்தோங்சேன் கூறியுள்ளார்.

இருபது லட்சம் தென்கொரியர்கள் படுகொலை:

இரண்டு கோடி ஜனத்தொகை கொண்ட தென்கொரியாவில் 1,00,000 பேர்கள் போரினால் படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என உண்மை பரஸ்பர ஓத்துழைப்பு குழு முடிவு செய்துள்ளது. ஆனால் கிம் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள மறுத்து இது மிக பழைய கணக்கு எனவும் யுத்தத்தில் இதைவிட அதிகமான நபர்கள் கொல்லப்பட்டிருப்பதாக கூறுகிறார். 2150 வழக்குகளை விசாரித்த குழு அமெரிக்க ராணுவம் தென்கொரிய பொதுமக்களை கொன்றதாக குற்றம் சாட்டியிருக்கிறது. அமெரிக்கப் படைகளை தலைமை தாங்கி நடத்திய ஜெனரல் டக்ளஸ் மெக் ஆர்கர் இது தென்கொரியாவின் உள்நாட்டு விவகாரம் எனக் கூறி இத்தகைய குற்றச்சாட்டுகளை மறுத்தே வந்து உள்ளார்.யுத்தகாலத்தில் தென்கொரியப் படைகள் மெக்ஆர்தரின் தலைமையில் மேற்பார்வை இடப்பட்டு இயங்கி வந்ததும் தற்போது தெரிய வந்துள்ளது. தென்கொரியாவின் அமெரிக்க தூதரும் 1950களில் இருந்தவர் கடந்த ஆண்டு தான் எழுதிய கட்டுரை ஒன்றில் அமெரிக்க ராணுவம் தென்கொரிய பொதுமக்களை சுட்டுக்கொல்வதை கொள்கையாகவே வைத்து செயல்பட்டு வந்தார்கள் எனகாலம் கடந்தேனும் எழுதியுள்ளார். மேலும், அமெரிக்க ராணுவ நிலைகளுக்கு எதிராக யார் வந்தாலும் சாதாரண பொதுமக்கள் வந்தாலும்கூட அவர்களை சுட்டுக்கொன்றதை அமெரிக்க அரசு துணை செயலருக்கு தான் அப்போது

எழுதியகடிதம் கண்டு கொள்ளப்படவில்லை எனவும் எழுதியுள்ளார். முன்னாள் அமெரிக்க விமானப்படை உளவுத்துறை அதிகாரி டோனால்டு நிக்கோலஸ் தனது கொரிய போர் நினைவு குறிப்புகள் புத்தகத்தில் தென்கொரிய வவோன் நகரில் 1800 நபர்கள் கொல்லப் பட்டத்தை தன்னால் மறக்க முடியவில்லை என கூறுகிறார்.

வடகொரிய படைகள் 1950 களில் நோகன்ரா நகரிலிருந்து திரும்பி சென்ற உடனே அமெரிக்க pamm_poபடைதளத்திற்கு அருகே தென்பட்ட தென்கொரிய பொதுமக்கள் நூற்றுக் கணக்கில் குறிப்பாக பெண்களையும், குழந்தைகளையும் அமெரிக்க ராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது. அமெரிக்க ராணுவத்தின் 25வது டிவிசன் கமாண்டர் தன் படை வீரர்களுக்கு தென்கொரிய குடிமகன் யாராக இருந்தாலும் அவர்களை எதிரியாக முடிவு செய்து கொல்லப்பட வேண்டும் என உத்தரவு இட்டிருந்தார் எனவும் தெரிய வந்துள்ளது. எடுத்துக்காட்டாக 1950 செப்டம்பர்  1 இல் அமெரிக்க கப்பற்படை தென்கொரிய போஆங் அகதி முகாமின் மீது தாக்குதல் நடத்தி அதில் இருந்த 200க்கும் மேலான அகதிகளை கொன்றுகுவித்துள்ளது.

அதோடு அல்லாமல் நோ கன் ரா அகதிகள் முகாமிலிருந்த 300 நபர்களை அமெரிக்க படை தலைவரின் உத்தரவின் பேரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஓய்வு பெற்ற ராணுவ எழுத்தாளர் கூறியுள்ளார். தென்கொரியாவில் போரில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் இழப்புகளுக்கு நஷ்டஈடு கேட்டு 1960களில் வழக்கு தொடர்ந்த போது சியோலில் உள்ள அமெரிக்க ராணுவ தலைமை அலுவலகம் அவர்கள் போரினால் கொல்லப்படவில்லை எனவும் போரின் போது அவர்கள் காணாமல் போய்விட்டார்கள் எனவும் கூசாமல் பொய் கூறி தப்பித்துக் கொண்டது. மீண்டும் 1997இல் வழக்கு தொடர்ந்த போது அமெரிக்க ராணுவம் 1950களில் அங்கு செல்லவே இல்லை எனவும் அங்கு ராணுவம் முகாமிடவில்லை எனவும் சாதித்து வருகிறது.

அமெரிக்காவின் கரங்கள் தென், வட கொரியா யுத்தத்தினால் ரத்தமயமாகிப் போனதை வரலாறு கூறுகிறது. வியட்நாம், ஈராக் போர்களுக்கு முன் ஆப்கன் சோதனை முயற்சியாக தென்கொரிய ஆயுதமற்ற பொதுமக்களை குறி வைத்து கொல்வது என்பது அமெரிக்கப் படையின் நடைமுறையாக இருந்துள்ளது. மூன்று வருடம் நடந்த யுத்தத்தினால் 20 லட்சம் தென்கொரிய பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின் அமெரிக்கப் படைகள் மிக மிக அதிக அளவில் வெடிகுண்டுகளும், துப்பாக்கி குண்டுகளையும் பயன்படுத்தி உள்ளது. முதன் முதலாக நாபாம் குண்டுகளை கொரிய யுத்தத்தில் தான் அமெரிக்கா பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தி உள்ளதும் தற்போது வெளிவந்துள்ளது. வடகொரியாவில் உள்ள எந்த ஒரு நகரமும் குண்டு வீச்சுகளிலிருந்து தப்பக்கூடாது எனவும், அதன் பொதுமக்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் என தனது படைகளுக்கு முன்னாள் அமெரிக்க விமானப்படை தலைவர் கர்ட்டீஸ் லெமே உத்தரவிட்டுள்ளதும் ஆய்வு முடிவுகளின் மூலம் தகவல்கள் வெளி வந்துள்ளன.

கிம் மேன் சிக் கொரிய யுத்தத்தின் போது 1950 களில் தென்கொரிய ராணுவகாவல்துறையின் சார்ஜன்டாகப் பணிபுரிந்தவர் கடந்த ஆண்டு தி நியூயார்க் டைம்ஸ் நாளேடு அவரை பேட்டி எடுத்தபோது அவர் கூறியதாவது “ஒருவரை கம்யூனிஸ்ட் என சந்தேகப்பட்ட உடனே அவரை ராணுவ டெலிபோன் ஒயரால் கட்டி அவருடன் பத்து, இருபது நபர்களை இணைத்து கட்டிய பிறகு துப்பாக்கியால் சுட தொடங்கினால் துப்பாக்கி சூட்டிலிருந்து தப்பிக்க நபர்கள் முயலும் போது டெலிபோன் ஒயர்களில் கட்டப்பட்ட அவர்களின் மணிகட்டுகள் அறுந்து விழுவதையும் இரத்தம் அவர்களின் வெள்ளை சட்டைகளின் மீது தெரித்து விழுவதையும் பார்த்து ரசிப்போம்’’ என கூறியுள்ளார். மேலும், அவர் உண்மை மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு குழுவிடம் கம்யூனிஸ்ட் கட்சி குடும்பங்களை அமெரிக்க ராணுவம் சுட்டுக்கொன்றதாக சாட்சியமும் அளித்துள்ளார்.

உண்மை மற்றும பரஸ்பர குழுவின் உறுப்பினர் கிம் வாங் என்பவர் தி கொரியா டைம்ஸ் பத்திரிகையில் எழுதுகிறார். போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஓன்றிணைந்து சங்கமாகி நஷ்ட ஈடு கோரி போராடினால் அவர்களுக்கு நல்ல வேலையோ பொதுத்துறை,காவல்துறை, ராணுவத்திலோ அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளை தென்கொரிய அரசு தொடர்ந்து மறுத்தே வருகிறது எனவும் அவர்களின் பிள்ளைகள் பள்ளிகளில் புறக்கணிக்கப்பட்டு வருவது தொடர்கிறது எனவும் எழுதியுள்ளார்.

புதிதாக பொறுப்புக்கு வந்த புதிய பழைமை வாதிகளின் தென்கொரிய அரசு குழுவிடம் முடிவுகளை ஏற்றுக் கொள்ள மறுத்ததோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்ட ஈடு தொகையும் வழங்க மறுத்துவிட்டது. தென்கொரியாவில் உள்ள வலதுசாரிகள் குழுவின் முடிவுகள் பழைய குப்பைகளையே மீண்டும் மீண்டும் கிளறி வருவதாகவும், அதனை தவிர எதுவும் இல்லை என கூறிவருகின்றனர்...

நன்றி.....

WWW. FRONT LINE.COM

WWW. DPRK GOVT.COM

WWW. SOUTH KOREA GOVT.COM

-ஆர்.இரவி

Pin It

மிகவும் பரபரப்புடன் துவங்கிய உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் கலந்து கொண்ட ஆசிய அணிகளில் தென் கொரியாவின் ஆட்டம் மட்டுமே பெயர் சொல்லும் அளவுக்கு இருந்தது. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் ஆட்டம் மிகவும் கவலைக் குள்ளாக்கியது. மற்றொரு அணியான பாகிஸ்தானும் சாதிக்கத் தவறியது.

panmm_ooபன்னிரண்டாவது உலகக் கோப்பை ஹாக்கித் தொடர் புதுதில்லி தயான் சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் பிப். 28 துவங்கி மார்ச். 13இல் நிறைவடைந்தது. இதில் இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், தென்ஆப்ரிக்கா, நியூசிலாந்து, அர்ஜென்டினா, கனடா ஆகிய 12 நாடுகள் பங்கேற்றன.

உலக தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஜெர்மனி, இரண்டாவது இடத்திலிருந்த ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகள் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகளாக கருதப்பட்டன.

1971க்கு பிறகு இந்தியாவில் இரண்டாவது முறையாக உலகக் கோப்பை போட்டி நடத்தப்பட்டது. பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவித்து வந்த இந்திய அணி நமது தேசிய விளையாட்டான ஹாக்கியின் பாரம்பரியத்தை மீண்டும் நிலை நாட்டுவதற்கு இந்தத் தொடர் ஒரு வாய்ப்பாக அமைந்தது.

இதுமட்டுமின்றி, வீரர்களின் எதிர்காலமும் இந்திய ஹாக்கி அணியின் எதிர்காலமும் அடங்கி இருந்ததால் சொந்த மண்ணில் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களம் இறங்கியது.

ஏமாற்றம் அளித்த இந்தியா

சம்பள உயர்வு பிரச்சனையின் போது வீரர்கள் போராட்டத்தில் குதித்தனர்.அப்போது வீரர்களுக்கு எதிராக செயல்பட்டார் ராஜ்பால்சிங். ஆனால், அவருக்கே அணியின் தலைவர் பதவியை வழங்கி கவுரவித்தது இந்திய ஹாக்கி சம்மேளனம். இதற்கு மூத்த வீரர்கள் உள்ளிட்ட பலரும் பலத்த எதிர்ப்பை தெரிவித்ததோடு பிரப்ஜோத் சிங்கை தலைவராக்க வேண்டும் என்றும் மாற்று ஆலோசனையும் முன்வைத்தபோது, அதனை சம்மேளனம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் விளைவு ஆட்டக்களத்திலும் எதிரொலித்தது.

இந்தத் தொடரில் இளம் வீரர்கள் அதிகம் இடம் பிடித்தும் திவாகர் ராம் மட்டும் ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார். முன்னாள் அணித் தலைவர் சந்தீப் சிங் ஆட்டமும் ஓரளவுக்கு கைக்கொடுத்தது. அனுபவ வீரர்களின் சொதப்பல் ஆட்டத்தால், ரசிகர்களின் கோப்பைக் கனவும், அணித்தலைவர் ராஜ்பால்சிங்கின் அரை இறுதிக் கனவும் தகர்ந்தது.

மைதானத்தில் நமது வீரர்கள் போதுமான வேகம்காட்டாததால் இரண்டு போட்டிகளில் வெற்றியின் விளிம்புக்கே சென்றும் தோல்வியை தழுவியதால் எட்டாவது இடமே கிடைத்தது.

தெற்காசிய போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த இந்திய அணி உலகக் கோப்பையின் தொடக்கப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த வெற்றிக்காக மக்களவையும், மாநிலங்களவையும் பாராட்டு மழை பொழிந்தன. இந்த உற்சாகத்தை ரசிகர்களும் கொண்டாடிட தவறவில்லை. நாடே பாராட்டியது.

சம்பளபாக்கி கேட்டு போராடியபோது வீரர்களை அவமானப்படுத்திய இந்திய ஹாக்கி சம்மேளனம், பாகிஸ்தான் அணியை இந்திய அணி வென்றதும் வீரர்கள், பயிற்சியாளர் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் தலா 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கி பகைமையை வளர்த்தது நல்ல பண்பாடல்ல.

விளையாட்டில் வெற்றி தோல்விகள் நிரந்தரமல்ல. ஒரு போட்டியில் வெற்றி பெற்றதற்காக மட்டும் ஹாக்கி சம்மேளனம் பரிசு அளிப்பதும் குடியரசுத் தலைவர் பாராட்டுவதும் அண்டை நாடுகளுடன் உள்ள நட்புறவை பலப்படுத்த உதவாது.

பரிதாபம்

ஹாக்கி உலகில் ஃபெனால்டி வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் கில்லாடிகள் என்ற தனி சிறப்பு பாகிஸ்தான் வீரர்களுக்கு உண்டு. இந்த உலகக் கோப்பை தொடரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமாக ஆடியதால் இந்த முறை அந்தப் பெருமையை இழந்தனர்.

உலகக் கோப்பையை அதிகமுறை (நான்கு) வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பாகிஸ்தான் அணி, பலம் இல்லாத அணியான  கனடாவிடமும் தோல்வி அடைந்ததால் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.

சாதித்த ஜெர்மனி

பெய்ஜிங் ஒலிம்பிக் சாம்பியன் பட்டத்தையும் உலகக் கோப்பையை இரண்டு முறை வென்ற சாம்பியன் என்ற பெருமையோடு ஜெர்மனி அணி இளம் வீரர்களை களம் இறக்கியது.

அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்கள் இல்லையென்றாலும் நாங்கள் அரை இறுதி வரைக்கும் முன்னேறுவோம் என்று அளித்த வாக்குறுதியை உண்மையாக்கியது ஜெர்மனி.

இளம் வீரர்களின் துடிப்பான, மனஉறுதிக்கு முதல் போட்டியில் கிடைத்த வெற்றி இறுதி போட்டிக்குக் கொண்டு சென்றது. பலம், அனுபவத்தில் சிறந்த அணியான இங்கிலாந்தை அரை இறுதியில் தோற்கடித்து சாதித்தனர்.

சாதனை வெற்றி

1986ஆம் ஆண்டில் கோப் பையை வென்ற ஆஸ்திரேலியா அணி இந்த உலகக் கோப்பையில்  இங்கிலாந்திடம் துவக்கத்திலேயே தோல்வியை தழுவினாலும், அதன் பிறகு பெற்ற எழுச்சியால் 24 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் கோப்பையை கைப்பற்றியது.

கனடாவுக்கு எதிராக 12 கோல்கள் அடித்து கோல் மழை பொழிந்த ஆஸ்திரேலிய அணி, ஐரோப்பிய சாம்பியனான நெதர்லாந்தை அரை இறுதியிலும், ஜெர்மனியை இறுதிப் போட்டியிலும் தோற்கடித்தது. இந்த சாதனை வெற்றியின் மூலம் ஜெர்மனியின் ஹாட்ரிக் கனவை தகர்த்ததோடு, தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்தது.

ஆஸ்திரேலிய வீரர்களின் அனுபவமும் ஒருங்கிணைந்து செயல்பட்ட ஒற்றுமைக்கும் கிடைத்த பரிசுதான் இந்த உலகக்கோப்பை.

-சி.ஸ்ரீராமலு

Pin It