1990களின் இறுதியில்   இந்திய விமானப் படையில் இருந்த மிக் ரக விமானங்கள் அனைத்தும் பழுதடைந்தன. இந்த வகை விமானங்கள் அனைத்தும் ரஷ்ய நாட்டில் இருந்து வாங்கப்பட்டவை. இவை பழுதடைந்ததன் காரணமாக மாறி வரும் உலக  ஏகாதிபத்தியச்  சூழலில் இந்திய அரசுக்கு நவீன வகையான போர் விமானங்கள் தேவைப்பட்டன. அதன்படி 2002 ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் கிட்டத்தட்ட 126 போர் விமானங்களை வாங்க திட்டமிடப்பட்டது. இந்த போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே போடப்பட்டு விட்டது. அதன் பின் இந்த விமானத்தை இந்திய விமானப்படை 2011-ம் ஆண்டு வரை  சோதித்துப் பார்த்தது. இந்த சோதனையின் அடிப்படையில்  விமானம் வாங்க பரிந்துரைத்ததாக அன்றைய மன்மோகன்சிங் அரசு கூறியது.

இச்சோதனைக்கு இரண்டு வகையான விமானங்கள் இந்திய விமானப்படை சோதித்து பார்த்ததாக அன்றைய மன்மோகன் சிங் அரசு கூறியது. முதலாவதாக ஐரோப்பிய யூனியனில் உற்பத்தி செய்யப்பட்ட  டைபூன் வகை  விமானங்களை  சோதித்து பார்த்தது. அதன்பின் இரண்டாவதாக அதற்கு இணையான ராஃபேல்  வகை விமானங்கள் சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்த இரு விமான வகைகளில்  ராஃபேல் வகை விமானங்கள் தான் மிகச் சிறந்ததாக இருந்ததாக அன்றைய மன்மோகன் சிங் கூறியது. இந்த விமான ஒப்பந்தத்தை பிரான்ஸ் நாட்டுடன் போட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி மொத்தம்  126 விமானங்கள் வாங்க  பிரான்சுடன் உடன்பாடு எட்டப்பட்டது. முதலாவதாக 18 விமானங்களையும் உடனடியாக வாங்குவது என்றும், அதன்பின் பிரான்ஸ் அரசிடம் இருந்து, இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திற்கு தொழில்நுட்பத்தை பெற்று இந்திய அரசே  உற்பத்தி செய்வது என  தீர்மானிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை மீண்டும் மார்ச் 2015 புதுப்பிக்கத்தக்க பிரான்ஸ் மற்றும் இந்திய அரசு ஒப்புக்கொண்டன. அதன்பின் இந்த ஒப்பந்தத்தின்படி காங்கிரஸ் அரசு  ஒரு விமானத்தின் விலை  ரூபாய் 526 கோடி   செலுத்தி  விமானத்தை பெற்றுக் கொள்வது என ஒப்பந்தம் போடப்பட்டது. முதலில் உடனடியாக 18 விமானங்களை பெற்றுக் கொள்வது என்றும், அதன்பின் இந்த ஒப்பந்தத்தை மார்ச் 2015 ஆம் ஆண்டு புதுப்பிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி மார்ச் 2015 ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தம் மோடி அரசினால் மாற்றியமைக்கப்பட்டது.

முந்தைய ஒப்பந்தத்தின்படி 18 விமானங்களை உடனடியாக வாங்குவது என்றும் மீதியுள்ள 108 விமானங்கள் பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்ப உதவி பெற்று இந்தியாவிலேயே இந்திய நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் மூலம் தயாரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மோடி அரசு பதவியேற்ற பின் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.  மீண்டும் 36 விமானங்களை உடனடியாக பெற்றுக் கொள்வது என்றும், மற்றவை அனைத்தும் பராமரிப்பு மற்றும் உற்பத்தி அனைத்தும் அணில் அம்பானியின் ரிலையன்ஸ் ஏவியேஷன்  நிறுவனம் செய்யும் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த புதிய ஒப்பந்தத்தின்படி விமானம் ஒன்றின் விலை 1676 கோடி  கோடிக்கு வாங்க முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு  கிட்டத்தட்ட 48,000 கோடி ரூபாய் அளவுக்கு நட்டம் ஏற்படும்.

இதில் முதன்மையான விஷயம் ஏற்கனவே விமான உற்பத்தியிலும், அதனை பராமரிப்பதிலும் அனுபவம் பெற்ற அரசு பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திடமிருந்து எந்த ஒரு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல்,  எந்த முன் அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் ஏவியன்ஸ் நிறுவனத்திற்கு    தாரை வார்த்துள்ளது மோடி அரசு. இது போதாதென்று அடுத்த 15 முதல் இருபது ஆண்டுகளுக்கு விமான பராமரிப்புகள் அனைத்தும் ரிலையன்ஸ்  ஏவியன்ஸ் நிறுவனம் செய்யும். இதற்காக ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு  ஒரு லட்சம் கோடி அளவுக்கு பணம் செலுத்த உள்ளது இந்திய அரசு.  ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தை விட அதிக விலை கொடுத்து இந்த விமானத்தை வாங்க உள்ளது மோடி அரசு.

இது போதாதென்று விமான உற்பத்தி மற்றும் பராமரிப்பு அனுபவம் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது. இதைத்தான் ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில்  எழுப்பினர். அப்போது இதற்கு பதிலளித்த ராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் மற்றும் இந்தியாவிற்கு ஏற்பட்ட இந்த ஒப்பந்தம் ரகசியமானது. இதனை நாடாளுமன்றத்திலோ அல்லது பொதுவெளியிலோ வெளியிட முடியாது. மேலும் இது தேசத்தின் பாதுகாப்பு  தொடர்பான விஷயம். இதை நாடாளுமன்றத்திலோ அல்லது பொதுவெளியிலோ விவாதிக்க முடியாது என்று கூறினார். ஆனால் இந்த விவரங்கள் எல்லாம் பா.ச.க காங்கிரசை விட ஊழலில் ஒன்றும் சளைத்ததல்ல என்பதையே காட்டுகிறது.

Pin It