புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய எட்டு கோள்களை பற்றி விரிவான ஆராய்ச்சிகள் நடந்துக் கொண்டுள்ளன. Mercury, Venus, Earth, Mars, Jupiter, Satum, Uranus என்று ஆங்கிலத்தில் இக்கோள்களை அழைக்கின்றனர். இக்கோள்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியே நாம் பார்க்கலாம்.

புதன் :

சூரியக்குடும்பத்தில் இருக்கும் எட்டு கோள்களில் முதல் இடத்தில் இருக்கும் கோள் புதன். சூரியனுக்குப் பக்கத்து வீட்டில் இருப்பது என்றும் கூட சொல்லலாம். சூரியனிலிருந்து சுமார் மூன்று கோடியே அறுபது லட்சம் மைல் தொலைவில் புதன் இருக்கிறது. கோள்களிலேயே மிகவும் வேகத்தில் புதன் சுற்றுகிறது. சூரியனை இக்கோள் ஒரு முறை சுற்றி வருவதற்கு 3 மாதங்களை (88 நாட்கள்) எடுத்துக் கொள்கிறது. ஆனால் பூமியோ சூரியனை ஒரு முறை சுற்றி வர 365 நாட்களை (12 மாதங்களை) எடுத்துக் கொள்கிறது. அப்படியானால் புதனில் ஓர் ஆண்டு என்பது 3 மாதம். பூமியில் ஒருவருக்கு ஆண்டுக்கு ஒரு பிறந்தநாள் எனில், புதனிலோ 3 பிறந்த நாள்கள் வரும்!

mercurys
கிரேக்க அறிவியலாளர்கள் இதன் வேகத்தைக் கண்டு வியந்தனர். எனவே ஒலிம்பஸ் மலையில் இருக்கும் கடவுளர்களின் தூதனாக இருந்த, சிறகுகள் கொண்ட மெர்க்குரியின் பெயரையே இந்தக் கோளுக்கும் வைத்து விட்டனர். புதன், சூரியனை அத்தனை வேகமாகச் சுற்றினாலும் அது தன்னைத்தானே மெதுவாகத்தான் சுற்றிக்கொள்கிறது. புதன் கோள் தன்னைத்தானே சுற்றிக் கொள்வதற்கும் 3 மாதங்கள் தான் ஆகின்றன. அதனால் புதனில் நீண்ண்ண்ட பகலும், நீண்ண்ண்ட இரவும் இருக்கிறது! முடிவற்ற பகலும் முடிவற்ற இரவும் கொண்டதுதான் புதன்.

நமது பூமி தன்னைத் தானே சுற்றிவர 24 மணி நேரத்தை மட்டுமே எடுத்துக் கொள்வதால் ஒரு நாளில் இரவு பகல் என மாறிமாறி வந்து விடுகிறது. புதனில் பகல் முடிவற்றதுபோல வெப்பமும் அதிகமானதுதான். அங்கு பகல் வெப்பம் 7000 (பாரன்ஹீட்) அதாவது ஒரு காரியத் துண்டை உருவாக்கிவிடக் கூடிய அளவிலான வெப்பம். இரவின் வெப்பமோ மிக.. மிக.. மிகக்குறைவு. அது மைனஸ் 459 டிகிரி செல்சியஸ். இந்த வெப்ப அளவு தான் சூரிய மண்டலத்திலேயே மிகவும் குறைவானதாகும் என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்.

புதன் கோளில் காற்று இல்லை. அதன் எடை குறைவானது. புதன் கோளின் குறுக்களவு 3000 மைல்கள் தான். இதை நம் பூமியில் இருக்கும் பெருங்கடலில் தூக்கிப் போட்டு முழுக்கிவிடலாம்! புதன் கோளில் புவி ஈர்ப்பு விசையும் மிகக் குறைவு என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பூமியில் 100 கிலோ எடையுள்ள ஒரு பொருள் புதன் கோளில் 24 கிலோவாக இருக்கும். பாறையால் ஆன இந்தக் கோள் கருப்பு நிறத்தில் தெரியும். பகலாக இருக்கும் பக்கத்தில் பாறைகளும், மணலும், இரவாக இருக்கும் பக்கத்தில் பனியும் கொண்டது தான் புதன் கோள்! ?

Pin It