பாபா பிளாக்ஷிப்
வா! வா! செம்மறி
இருக்கிறதா கம்பளி?
ஆம்! ஆம்! அய்யா!
முதுகில் மூன்று மூட்டைகள்
ஒன்று எசமானுக்கு
ஒன்று எசமானிக்கு
ஒன்று தோப்பில் அழுகிற
சின்னச் செல்லப் பிள்ளைக்கு!
புஸ்ஸி கேட்....
பூனையாரே! பூனையாரே!
எங்கே போனீங்க?
லண்டனுக்கு ராணியைத்தான்
பார்க்கப் போனேங்க
போன இடத்தில் பூனையாரே
என்ன செய்தீங்க?
அரியாசனம் அடியில் இருந்த
எலியைக் கொன்னேங்க!
ட்விங்கிள் ட்விங்கிள்...
மின்னும் மீனே! மின்னும் மீனே!
எப்படி உன்னை வியப்பேன் நானே!
பூமியின் மேலே வெகு உயரத்தில்
வைரம் போலே ஒளிர்கின்றாயே!
நரசிம்மன்,
தாவரவியல் பேராசிரியர், சென்னை கிறித்துவக் கல்லூரி
தலித் முரசு - மே 2008
குழந்தைப் பாடல்கள்
- விவரங்கள்
- நரசிம்மன்
- பிரிவு: தலித் முரசு - மே 2008
More articles by நரசிம்மன்
- சென்னையின் தொன்மை மரங்கள் (14 ஏப் 2015)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.