“எனக்கு குரல் இருக்கிறது. நான் தொடர்ந்து பாடிக் கொண்டே இருப்பேன். என்னுடைய உணர்வுகளை யாரும் கொன்றுவிட முடியாது. இதற்கு முன்பு நான் என்னுடைய குடும்பத்திற்காக என் மகளுக்கு நீதி கேட்டு மட்டுமே போராடினேன். இனி நான் சாகும் வரை, என்னுடைய சக மனிதர்களுக்காகப் போராடுவேன். என்னைத் தாக்கிய குற்றவாளிகளை கூண்டில் ஏற்றும் வரை நான் ஓயமாட்டேன்.”

Bandh singh
பந்த் சிங் - பஞ்சாப் மாநிலத்தின் மான்சா மாவட்டத்தைச் சேர்ந்த புரட்சிகர தலித் பாடகர். இவர் விவசாயத் தொழிலாளர் அமைப்பான ‘மஸ்தூர் முக்தி மோர்ச்சா' அமைப்பின் தலைவர். 2000 ஆம் ஆண்டில் இவருடைய இளைய மகள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டதை எதிர்த்து நீதி கேட்டு, தன்னுடைய போராட்டத்தைத் தொடங்கினார். இவ்வழக்கை கைவிட்டுவிடும்படி பஞ்சாயத்தின் சாதி இந்துக்கள் இவரை மிரட்டியபோதும், சமரசம் செய்து கொள்ளாமல் சட்ட ரீதியாக நீதி கேட்டு இடையறாது போராடினார். இதன் விளைவாக, 2002 இல் அக்குற்றத்தைச் செய்த ‘ஜாட்' சாதி பண்ணையார்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

ஆனால், இக்குற்றவாளிகள் அவரைப் பழி தீர்க்க 5.1.2006 அன்று அவர் மீது கடும் தாக்குதலைத் தொடுத்தனர். மரணத்தின் விளிம்புக்குச் சென்றார் பந்த் சிங். அவருடைய இரு கைகளும், ஒரு காலும் வெட்டப்பட்டு, மற்றொரு காலும் புரையோடிப் போய்விட்டது.

கடும் தாக்குதலுக்கு உட்பட்ட பந்த் சிங், தற்பொழுது உடல் ரீதியாக பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார். அவரால் தனியாக எங்கும் செல்ல முடியாது. அவருடைய புரையோடிப் போன காலில், இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது. அவருடைய சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எட்டு குழந்தைகள் உள்ளனர். அவருடைய மருத்துவச் செலவுக்கு மிகப் பெரும் தொகை தேவைப்படுகிறது. அவருக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்தால், தற்போதைய நவீன மருத்துவத் தொழில்நுட்பத்தால், அவர் சொந்தமாக நடமாடக்கூடிய அளவுக்கு சிகிச்சை பெற முடியும். தற்பொழுது டெல்லியில் உள்ள ஸ்டீபன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் பந்த் சிங்கிற்கு, மேற்குறிப்பிட்டுள்ள முகவரிக்குத் தங்களால் இயன்ற உதவியை அளித்திடுங்கள்.

You can draw your cheque/DD in favour of AIAL A, and send it to
U-90, Shakarpur, Delhi - 110 092
For further details and queries on nature of contribution, you could contact :
FORUM FOR DEMOCRATIC INITIATIVES
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.; இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
98680 38981/98116 25577/99100 74470
Pin It