ஆதி மருத்துவர் சவரத்தொழிலாளராக்கப்பட்ட வரலாறு
விலை ரூ.90

‘‘மருத்துவச் சாதியினரை ‘பார்பர்' என்று கூறுவதையும், அவர்களின் பரம்பரைத் தொழில் சவரம் செய்தல் என்பதையும் இந்நூல் மறுக்கிறது. ‘அம்பட்டர்' என்ற சேவைச் சாதியினர் சவரத் தொழிலுக்குள் புகுத்தப்படுவதற்கு முன்னர், மிகப் பழங்காலத்திலிருந்தே பூசாரிகளாகவும் மருத்துவர்களாகவும், அறுவைச் சிகிச்சை முறையினை கண்டுபிடித்த முன்னோடிகளாகவும் இருந்தனர் என்பதனைத் தகுந்த ஆதாரங்களுடன் நிறுவுகிறது.''

ஆசிரியர்: கோ. ரகுபதி
பக்கங்கள் : 160
வெளியீடு : வல்லினம், 9, ஒய் பிளாக், அரசு குடியிருப்பு, லாசுப்பேட்டை, புதுவை 605 008
பேசி : 0413 2257151


முல்லைப் பெரியாறு உரிமை மீட்க...
நன்கொடை ரூ.5

‘‘பறித்தவன் பறிகொடுத்தவனைப் போல் அலறுகிறான். பறிகொடுத்தவனோ ஒன்றும் பேசாமல் அமைதி காக்கிறான். முல்லைப் பெரியாறு அணை நீரில் தமிழகத்தின் உரிமையை மறுத்து வரும் கேரளம் ஓங்கிக் குரல் கொடுக்க, உரிமை இழந்த தமிழகம் வாய் பொத்திக் கிடக்கிறது. தமிழகத்திலிருந்து நாள்தோறும் கேரளத்துக்கு வண்டி வண்டியாகச் செல்லும் நெல், அரிசி, வைக்கோல், மாட்டுத் தீவனம், கட்டுமானப் பொருள்கள், மருந்துப் பண்டங்கள் முதலானவை செல்ல விடாமல் மறித்துப் போராட வேண்டும். தமிழகத்தின் ஆற்றுநீர் உரிமையை கேரளம் மதிக்கும்படிச் செய்வதற்கு வேறு வழியில்லை.''
ஆசிரியர் : தியாகு
பக்கங்கள் : 24
கிடைக்குமிடம் : தமிழர் கண்ணோட்டம், 2 ஆம் தளம், 20/7, முத்துரங்கம் சாலை, சென்னை 600 017


தாத்ரிகுட்டி
நன்கொடை ரூ.8

‘‘காலத்தைக் காட்டும் கண்ணாடியே இலக்கியமாகும். அவ்வகையில் இந்நூலின் கருவும் உருவுமான தாத்ரிகுட்டியின் காலம், நூற்றாண்டிற்கும் முந்தியதாகும். இருப்பினும், கேரள மண்ணில் தாத்ரிகுட்டி பண்பாட்டின் வீரியமாகவும், ஆய்வுத் தொடராகவும், வீர வணக்கத்திற்கு உரியவளாகவும், ஆணாதிக்க சமூக அமைப்பை அச்சுறுத்தும் ஒரு நீங்காத நினைவாகவும் மக்களின் ஆழ்மனங்களின் அடர்த்தியாகத் தாங்கி நிற்பவள். கேரளாவில் பெண்ணிய இயக்கங்களுக்கு முன்னகர்வு ஆன மானுட வல்லமைச் சின்னமே தாத்ரிகுட்டி.''

ஆசிரியர் : ஏபி. வள்ளிநாயகம்
பக்கங்கள் : 24
வெளியீடு : செம்மொழி பதிப்பகம், எண்.1/805பி, பிளாட் எண்.9, ஏழவாது தெரு, மடிப்பாக்கம், சென்னை 91


2007 இல் தலித் மக்களுக்கு தனித் திட்டம்
நன்கொடை ரூ.15

‘‘நிலத்தை மய்யப்படுத்திய போராட்டங்கள் போல, சிறப்புக் கூறுத் திட்டத்திற்கென தனியான போராட்டங்கள் நடக்கவில்லை. தலித் மக்களிடையே சிறப்புக் கூறுத் திட்டம் விரிவாகச் சென்று சேரவில்லை. மக்கள் சரியாகப் புரிந்துகொண்டு, போராட்டத்தைக் கையிலெடுத்தால்தான் ஒரு போராட்டம் வெற்றியடையும். நமது இலக்கு, 2007 பட்ஜெட்டில் சிறப்புக் கூறு நிதி, தனியாக ஒதுக்கப்பட வேண்டும் என்பது. அதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.''

வெளியீடு : புதிய கோடாங்கி, சி4, வேலன் அடுக்ககம், 4ஆவது தெரு, ரயில்வே குடியிருப்பு, நெல்சன் மாணிக்கம் சாலை, அமைந்தகரை, சென்னை 600 029


இஸ்லாமியப் பெண்ணியம்
விலை ரூ.10

‘‘இஸ்லாமிய ஆண்கள் தங்கள் ஆதிக்கச் செயல்பாட்டை நிலைநாட்ட இஸ்லாமியச் சட்டங்களை திரிப்பதும், திருமறை வசனங்களை ஒரு சார்பாகப் பயன்படுத்துவதும், வாழ்வியல் நிலைப்பாடுகளில் பாரபட்சம் காட்டுவதும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இதனால் பெண்களின் சோகக் கதைகள், மூடிய திரைகளுக்குள் அழுது புலம்பிக் கொண்டிருப்பதும் நமக்கு கேட்கிறது. இந்நிலையில் திருக்குர் ஆனிலும், ஹதீசுகளிலும் பெண் சார்ந்த நலன்களை முதன்மைப்படுத்தும் ‘பெண்ணிய வாசிப்பு' மிகத் தேவை. இத்தகைய வாசிப்பை இஸ்லாமியப் பெண்ணியச் சிந்தனையாளர்கள் அதிக அளவில் மேற்கொள்ளும்போதுதான் பெண் ஒடுக்குமுறை சார்ந்த கருத்தியல்கள் நொறுக்கப்படும்.''

ஆசிரியர் : ஹெச்.ஜி. ரசூல்
பக்கங்கள் : 48
வெளியீடு : பாரதி புத்தகாலயம், புதிய எண். 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018

நிழல்களைத் தேடி
விலை ரூ.60

‘‘புதிதாய்ப் பிறந்தவர்களையும் சாதி, மத, பால் அடையாளங்களுக்குள் அடைத்து மேல் கீழ் வகைப்பாட்டைக் கடைப்பிடிக்கும் சமூகம், மாறுவது எப்போது என்ற ஏக்கமே புதியமாதவியின் கவிதை ரசம். ஆனால், அதன் எளிமையான அழகிய வெளிப்பாடு இன்னும் கூர்மையாக, கிணற்றில் தொலைத்த பொருளைத் தேடும் பலமுனைக் கொக்கிகளைக் கொண்ட ஆழ்கரண்டியைப் போலத் துழாவுகிறது - சில சமயங்களில் மென்மையாக, பல சமயங்களில் வன்மையாக.''

ஆசிரியர் : புதியமாதவி
பக்கங்கள் : 120
வெளியீடு : அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை - 600 011
பேசி : 044 - 25582552
Pin It