* சகிப்புத் தன்மை குறைந்து வருவதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய பேரணிக்கு பா.ஜ.க. போட்டி பேரணி - செய்தி

எதிர்ப்புகளை சகித்துக் கொள்ளவே மாட்டோம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறாங்க, போல!

* நீதிமன்றத்தில் தமிழ் உரிமைக் கோரிய போராட்டத்தினால் நீதிமன்ற வளாகத்தில் தமிழக காவல்துறைக்கு பதில் - மத்திய போலீஸ் படை வருகிறது. - செய்தி

நீதிமன்றத்துக்குள் மட்டுமல்ல; நீதிமன்ற வளாகத்துக்குள்ளும் தமிழுக்கு இடமில்லை. இனி இந்திக்கார போலீஸ்தான்!

* வடபழனி முருகன் கோயிலில் திருமணம் செய்ய வரும் ஏழைகளிடம் இடைத்தரகர்கள் பணம் பறிக்கும் மோசடி நடக்கிறது. - ‘தினமலர்’ செய்தி

ஆனா, முருகனுக்கு இடைத் தரகர்களாக இருக்கும் அர்ச்சகர்கள் மோசடிப் பற்றி மட்டும் பேச மாட்டீங்க.

* ஆர்.எஸ்.எஸ். சீருடையில் மாற்றம். இனி மூத்தவர்களுக்கு முழுக்கால் சட்டை. - செய்தி

ஆக, முழுக்கால் சட்டையை ‘பாரத கலாச்சாரமாக’ ஒத்துக்கீட்டீங்க... பெரிய புரட்சி தான்!

* பீகாரில் பா.ஜ.க. தோற்றால், பாகிஸ்தானில் பட்டாசு வெடிப்பார்கள். - தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா

இஸ்லாமியர்களும் தீபாவளி கொண்டாடுறாங்களேன்னு மகிழ்ச்சியடைய வேண்டியது தானே! இதுல உங்களுக்கு என்ன ‘ஜி’ சங்கடம்?