திருச்சி : சட்ட எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைச் சென்று சிறையிலேயே உயிர்நீத்த பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகியோரின் நினைவிடத்தில் திருச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் மீ.இ. ஆரோக்கியசாமி தலைமையில் ஜாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்பும், அண்மையில் முடிவெய்திய இராவணனுக்கு வீரவணக்க நிகழ்வும் 26.11.2019 அன்று காலை 10:30 மணியளவில் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகக் கொள்கைப் பரப்புரைச் செயலாளர் சீனி. விடுதலையரசு பங்கேற்று வீர வணக்க உரை நிகழ்த்தினார்.

kovai 600மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் புதியவன் உறுதி மொழி வாசிக்க தோழர்கள் உறுதி மொழி ஏற்றனர். இறுதியாக மனோகர் நன்றி கூறினார். நிகழ்வில், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி, மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கிய பண்பாட்டு கழகம், காட்டாறு ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.

கோபி : கோபி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்ட பிரிவுகளைக் கொளுத்தி சிறையில்  உயிர்நீத்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்துதல் மற்றும் மறைந்த பெரியார் தொண்டர் இராவணனுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சியும் கோபி பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் சிலை முன்பு  நடைபெற்றது.

நிகழ்விற்கு திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.ப. வெங்கிடு தலைமையேற்க த.பெ.திக. உமா, திராவிடர் கழக  மாவட்டத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் விசயசங்கர், இராவணன் படத்திற்கு மாலை அணிவித்த பின் தோழர்கள் அனைவரும் சாதி ஒழிப்பு போராளிகளுக்கு வீரவணக்க முழக்கமிட்ட பின் அனைவரும் சாதி ஒழிப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்வில்  தி.வி.க., த.பெ.தி.க., தி.க., புஇமு, தி.மு.க. குமணன், திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.

trichy 600கோவை : கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் காந்திபுரம் பெரியார் சிலை முன்பு ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளைக் கொளுத்தி சிறையிலும் சிறைக்கு வெளியேயும் உயிர் நீத்த ஜாதி ஒழிப்பு  போராளிகளின் 62ஆம் ஆண்டு நினைவையொட்டி கொள்கை முழக்கங்கள் எழுப்பியும்  மற்றும் உறுதிமொழி  எடுத்தும் மரியாதை செய்யப்பட்டது. நிகழ்விற்கு மாநகரத் தலைவர் நேருதாஸ் தலைமை வகித்தார்.  லீலாவதி சட்ட எரிப்பு நாள் உறுதிமொழியை வாசிக்க தோழர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மாநகர தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நிர்மல் குமார், நேருதாசு, வெங்கட், லோகு, இயல், கிருஷ்ணன், லீலாவதி, துளசி, ராஜாமணி, அறிவரசு, மாதவன் சங்கர், புரட்சி மணி, ஜெயச்சந்திரன், சங்கனூர் கிருஷ்ணமூர்த்தி, பூரண பவித்ரன், கார்மேகம், சௌந்தர், ஸ்டாலின் ராஜா, சுசி. கலையரசன் (விசிக) ஆகியோர் கலந்து கொண்டனர்.