கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

சுற்றுச் சூழலைப் பாதிக்கக் கூடிய ஆபத்தான திட்டங்களை உலகின் வளர்ச்சி அடைந்த நாடுகள், இந்தியா போன்ற பின் தங்கிய நாடுகளிடம் கொண்டு வந்து திணிக்கின்றன. அன்னிய முதலீட்டு சுரண்டலுக்கு கதவு திறந்து வைத்திருக்கும், பார்ப்பன-பனியா நலன் காக்கும் இந்திய நடுவண் ஆட்சி, தொழில் வளர்ச்சி என்று கூறி, அத்தகைய ஆபத்தானத் திட்டங்களை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது.

வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர் லைட் ஆலை அப்படி வந்த ஒன்று தான். நச்சுக் கழிவுகளை உருவாக்க, சாயப் பட்டறை, தோல் பொருள் உற்பத்திகள், வெளிநாட்டு ஏற்றுமதி களுக்காக தமிழகத்தை நஞ்சாக்கி வருகின்றன.

பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவின் விதி முறைகளை கண்மூடித்தனமாக மீறி செயல்படும் உரிமைகளையும், மாநில அரசுகள் வழங்கிக் கொண்டிருக்கின்றன.

இராஜஸ்தான் மாநிலத்தி லிருந்து ஒரு அதிர்ச்சியான செய்தி வந்திருக்கிறது.

இராஜஸ்தான் மாநிலத்தில் பீடாசர் பகுதியில் செயல்பட்டு வரும் வெளிநாட்டு மருந்து நிறுவனம் ஒன்று, அதுதயாரித்த மருந்துகளை எலிகளுக்குத் தந்து சோதனை செய்யும் முறைக்கு மாறாக நேரடியாக மனிதர்களுக்கே தந்து சோதனை நடத்தியிருக்கிறது. இந்த சோதனைகளுக்காக ஆட் களை நாளொன்றுக்கு ரூ.500 கூலி யாகத் தந்து, வேலைக்கு அமர்த்தி யுள்ளது. ஆபத்துகளை உணராத அந்த அப்பாவிகளிடம் மூன்று நாள், தான் தயாரித்த மருந்து களை உடலில் செலுத்தியிருக்கிறது அந்த நிறுவனம். 21 பேர் இப்படி மருந்து செலுத்தப்பட்டுள்ளனர். அதில் 16 பேர் நிலை கவலைக்கிடமாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட் டுள்ளனர். அவர்கள் நிலை ஆபத்தானக் கட்டத்தில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை கூறு கிறது.

வேத மதம் என்ற நஞ்சை மூளையில் செலுத்தி சமூகத்தில் ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’களாக ஒதுக்கி வைத்து உளவியல் ரீதியாக அடிமை யாக்கிய கூட்டம் இப்போது அன்னிய நாட்டின் மருந்துகளுக்கு சோதனைக் கருவிகளாக்கி, உயிரை யும் காவு கேட்கத் தொடங்கி விட்டது!

இப்படிப்பட்ட துணிச்சல், அந்த வெளிநாட்டு நிறுவனத்துக்கு எப்படி வந்தது? மாநில ஆட்சிகள் தங்கள் ‘கைப்பாவை’ என்ற திமிரால் வந்ததுதானே?

வேறு எந்த நாட்டிலாவது மருந்து நிறுவனங்கள் இப்படி செயல்பட முடியுமா? தேச பக்திக்கு குத்தகைக்காரர்கள் என்று உரிமை கொண்டாடும் பா.ஜ.க.ஆட்சி தான் இராஜஸ்தானில் நடக்கிறது.

அன்னிய நாட்டுக் கம்பெனி மருந்துகளை உடலுக்குள் செலுத்திய பிறகு அதற்கும் தாக்குப் பிடித்து உயிர் பிழைத்த வர்கள்தான் உண்மையான தேச பக்தர்கள். மாண்டு போனவர்கள் ‘தேசத் துரோகிகள்’ என்று இராஜஸ்தான் அரசு விளக்கம் கூறுமோ?

மனித உயிர்களுக்கு இதுதான் மரியாதையா?