பெரியாரின் ‘குடிஅரசை’ வெளியிடுவதன் மூலம், சுயமரியாதை பிரச்சார நிறுவனத்துக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்திவிட்டதால், பெரியார் திராவிடர் கழகம், ரூ.15 லட்சம் இழப்பீடு தரவேண்டும் என்று, ‘ஆயுள் செயலாளர் கி.வீரமணி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

• அன்று 1933 இல் இதே ‘குடிஅரசில்’ இன்றைய ஆட்சி முறை ஏன் ஒழிய வேண்டும் என்ற கட்டுரை எழுதியமைக்காக பெரியாருக்கு 9 மாத சிறையும், 300 ரூபாய் அபராதமும் விதித்தது, அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி.

• குடிஅரசு அடக்குமுறைக்கு உள்ளானபோது ‘புரட்சி’ வார ஏட்டை பெரியார் தொடங்கினார். அப்போதும், இடையில் மூன்று முறை பத்திரிகை நிறுத்தப்பட்டு, 2 தடவை ஜாமீன் பணம் கட்டுமாறு அன்றைய பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டது. இதனால் 5000 ரூபாய் வரை தனக்கு இழப்பு ஏற்பட்டது என்று எழுதினார் பெரியார்.

• அதே ‘குடிஅரசு’, ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’ ஏடுகளில் பெரியார் எழுதியதை மக்களிடையே கொண்டு செல்வதற்கு, இப்போது 15 லட்சம் இழப்பீடு கேட்கிறார், ‘ஆயுட்கால செயலாளர்’ கி.வீரமணி. அன்று - பிரிட்டிஷ் அடக்குமுறையை குடிஅரசு சந்தித்தது. இன்று - ‘ஆயுள் செயலாளர்’ கி.விரமணியின் அடக்குமுறை - ‘குடிஅரசு’ தொகுப்புகள் மீது பாய்கிறது!

இவர்கள் தான் தமிழர் தலைவர்களா?
இவர்கள் தான் பெரியாரின் வாரிசுகளா?
பெரியார் கொள்கைகளுக்காக இன்னும் வீரமணியை நம்பிக் கொண்டிருக்கும் திராவிடர் கழகத் தோழர்களே!
இதுதான் பெரியாரைப் பரப்பும் பணியா? - மனசாட்சியை அடகு வைக்காமல் சிந்தித்துப் பாருங்கள்!

Pin It