சென்னை அண்ணா சாலையிலுள்ள பெரியார் சிலைக்கு ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்த நாள் விழாவின் போதும், நினைவு நாளிலும் அவருடைய உருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் வகையில் பெரியார் சிலை அலங்கரிக்கப்பட்டு (படிக்கட்டுடன்) தமிழக அரசின் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்படும்.

பார்ப்பனிய ஜெயலலிதா ஆட்சியில்கூட பெரியார் சிலைக்கு இந்த சிறப்பு மிக தெளிவாகவே செய்யப்பட்டது.

ஆனால், கலைஞரின் தி.மு.க. ஆட்சியில் பெரியார் பல வகையிலும் புறக்கணிக்கப்படுகிறார் என்பதற்கு உதாரணமாக இந்த ஆண்டு பெரியார் நினைவு நாளில் பெரியார் சிலை அலங்கரிக்கப்படவில்லை. மாலை அணிவிக்க வந்த தலைவர்கள் மாலை அணிவிக்க இயலாமல் மாலையை (பெரியார் சிலை பக்கத்தில் இருந்த நிரந்தர படிகளில் இருந்து) தூக்கி வீசியது பெரியாரை அவமதிப்பது போல் இருந்தது. கலைஞரும், தி.மு.க.வும் பெரியாரை விட்டு விலகி செல்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

 

Pin It