‘ராமன்’ பெயரைச் சொல்லி - சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கத் துடிக்கும் பார்ப்பன சக்திகள் ‘இந்து’க்களின் காவலர்களா? இல்லை. இல்லவே இல்லை.

இத்திட்டத்தில் - தொழில், வணிகம், வளரும்போது - அதனால் பயனடையக் கூடியவர்கள் பெரும்பாலும் “இந்து”க்கள் தானே! எத்தனையோ ராமசாமிகளும், ராமலிங்கங்களும், ராமரத்தினங்களும், ராமமூர்த்திகளும் பயன் பெறக்கூடிய திட்டத்தை ‘புராண ராமன்’ பெயரால் தடுப்பவர்கள், இந்துக்கள் உரிமை காப்பவர்களா? அல்லது துரோகமிழைப்பவர்களா? இதைத் தடுப்பவர்கள் இந்துக்களின் நண்பர்களாக இந்துக்களின் உரிமை காப்பவராக எப்படி இருக்க முடியும்? பார்ப்பன தர்மத்தைக் காக்கவே, இவர்கள் இந்துத்வம் பேசுகிறார்கள் என்பதை தங்களை ‘இந்து’ என்று நம்பிக் கொண்டுள்ள தோழர்களே புரிந்து கொள்ளுங்கள்!