கேள்வி : உங்களுடைய அரசியல் வாரிசு யார்?
பதில் : எனக்கு அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது; என்னுடைய கொள்கைகளும், கருத்துகளும் தான் வாரிசு; வாரிசு என்பது தானாகவே ஏற்படவேண்டும்.

-பெரியார், ‘மாலைமுரசு’ 16.9.1973

இது பிரச்சார இயக்கம். எங்களுக்குக் கட்சி கிடையாது; நாங்கள் எந்தக் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல. எங்கள் இயக்கம் பிரச்சார இயக்கம். மக்களுக்கு பகுத்தறிவு ஊட்ட வேண்டும். மக்களிடம் இருக்கும் முட்டாள்தனம், மூட நம்பிக்கையான கருத்துகளை மாற்ற வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருபவர்களேயாவோம்.

- பெரியார் ‘விடுதலை’ 11.1.1968

Pin It