தமிழகத்தில் காங்கிரஸ் போட்டி யிடும் 63 தொகுதிகளில், 11 தொகுதி களில் தங்கபாலு உட்பட, ஒன்பது புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட் டுள்ளது. இது, கட்சித் தொண்டர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதன் எதிரொலியாகவே, தங்க பாலு படத்துக்கு செருப்படி, உருவ பொம்மை எரிப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறின. இந்த எதிர்ப்பு, தேர்தல் ஓட்டுப் பதிவு நெருங்க நெருங்க மேலும் அதிகரிக் கும். காரணம், தங்க பாலு கோஷ்டிக்கு தமிழகத்தில் பலம் குறைவு என்பது தான். மேலும், தங்கபாலுவும் கட்சி யினரை அனுசரித்து செல்வது கிடையாது. இதுவே காங்கிரஸ் கோஷ்டிகளிடையே உச்சகட்ட வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கபாலு ஆதரவாளர்களான, 11 பேரையும் தோல்வியடைச் செய் வோம் என மார்த்தட்டி வருகின்றனர். இவர்களில் ஓசூர் கோபிநாத், ஸ்ரீவைகுண்டம் சுடலையாண்டி ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். ஓசூர் கோபிநாத் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது, உள்ளூர் காங்கிரஸ் கட்சியின ரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் நிர்வாகிகள் பலர், கட்சி பதவியிலிருந்து ராஜினாமா செய் துள்ளனர். மற்ற கட்சியினரையும் இவர் அனுசரித்து செல்லாததால், அவர்களும் அதிருப்தியில் உள்ளனர். தி.மு.க.வைச் சேர்ந்த நகராட்சி தலைவர் சத்யா, தன் தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொண்டு, கோபிநாத்துக்கு எதிராக சுயேச்சை யாக போட்டியிடுகிறார். இது கோபி நாத்தின் தோல்வியை உறுதி செய்துள்ளது.

தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறிக்கு, சிதம்பரம், தங்கபாலு தான் காரணம் என தி.மு.க.வினர் நினைத்து செயல்படுவதால், அவர்களும் தங்கபாலு ஆதரவாளர் களுக்கு எதிராக களம் இறங்கியுள்ளனர். இது காங்கிரஸ் கட்சிக்கு பேரிடியாக அமையும்.

வரும் தேர்தலில், தமிழகத்தில் தங்கபாலு தலைமையில் தேர்தலை சந்திக்கும் காங்கிரசுக்கு, காங்கிரஸ் கட்சியினரின் உள்ளடி வேலை காரணமாக, மரண அடி இருக்கும் என காங்கிரஸ் கட்சியினரே கூறி வருகின்றனர்.
இதற்கிடையே தங்கபாலு, லஞ்சம் வாங்கிக் கொண்டு ‘சீட்’டுகளை விற்றதாகக் காங்கிரசாரே குற்றம் சாட்டுகிறார்கள்.

“ஒரு கோடியே 50 லட்ச ரூபாய் வரை லஞ்சம் பெற்று, தனக்கு வேண்டியவர்களுக்கு தங்கபாலு ‘சீட்’ கொடுத்துள்ளார்” என ஐ.என்.டி.யு.சி. தலைவர் கே.எஸ்.கோவிந்தராஜன் குற்றம் சுமத்தினார்.
மதுரையில் அவர் கூறியதாவது:

‘இரண்டு முறைக்கு மேல் எம்.எல். ஏ.வாக அல்லது உயர் பதவியில் இருந்த வர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது’ என சோனியா, ராகுல் கூறினர். அவர்களது கொள்கைக்கு மாறாக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் செயல்பாடு உள்ளது.

தேர்தலில் போட்டியிட, 1 கோடியே 50 லட்ச ரூபாய் வரை லஞ்சம் பெற்று, தனக்கு வேண்டி யவர்களுக்கு தங்கபாலு, ‘சீட்’ வாங்கிக் கொடுத்துள்ளார். 10 லட்சம் உறுப் பினர்களை கொண்ட ஐ.என்.டி.யு. சி.யைச் சேர்ந்த உழைப்பாளிகளுக்கு ‘சீட்’ இல்லை.

உழைக்கும் வர்க்கத்தினர் சோர் வடையும் சூழல் உருவாகியுள்ளது. ஆவடி தொகுதிக்கு தாமோதரன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர், ஐ.என்.டி.யு.சி.யைச் சேர்ந்தவர் அல்ல. தங்கபாலு நீடித்தால், ஆண்டவனே நினைத்தாலும் காங்கிரசை காப்பாற்ற முடியாது.

இவ்வாறு கே.எஸ். கோவிந்த ராஜன் கூறினார். - பார்ப்பன நாளேடான ‘தினமலர்’ மார்ச் 28, இப்படி செய்தி வெளியிட் டுள்ளது.

Pin It