பன்னாட்டு இனவழிப்பு நாள்:

இனப் படுகொலைத் தடுப்பும் இனப் படுகொலைக் குற்றத்தால் பாதிக்கப்பட்டோரின் மாண்பை நினைவுகூர்வதுமான உலக இனவழிப்பு நாள் (திசம்பர் 9) தொடர்ந்தும் பாரியளவில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஈழத் தமிழருக்கு முக்கியமான ஒரு நாளாகும்.

சீறிலங்கா ஆளும் வர்க்கம் தமிழின அழிப்பில் உயிர் வாழ்கிறது. ஆதாயத்திற்கும் அதிகாரத்திற்கும் இன அழிப்பு ஓர் ஆயுதமாக இருக்கிறது. வாழ்வுரிமையைப் பறிக்கும் முறைதான் இன அழிப்பு. தமது உரிமை கேட்டுப் போராடிய ஈழத் தமிழர்கள் இன அழிப்பு போர் மூலம் படுகொலை செய்யப்பட்டதுடன் அதற்கான நீதி கோரிய போராட்டங்களும் மூடிமறைகப்படுகின்றன. இத்தகைய சூழலில் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் என்ன?

இந்த வினாவிற்கு விடைதேடும் வித்ததில் ’தமிழர் இயக்கம்’

உலக அளவில் சூம் செயலியின் ஊடாக 2020 திசம்பர் 13 இரவு இந்திய நேரம் 9 மணி தொடக்கம் ஒருங்கிணைத்து நடத்திய 'தமிழர் உரிமைச் செயலரங்கம்' எனும் இணையக் கருத்தரங்கில் தமிழீழத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் திரு மகாதேவா நிலாந்தனும், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகுவும் கலந்து கொண்டு உரையாற்றியதோடு, பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளித்தனர். 

இந்நிகழ்வில் தோழர் தியாகு ஆற்றிய உரை கேட்க:

- தியாகு

 

Pin It