அண்ணா! வணக்கம். தமிழ்நாட்டில் முகாம்களுக்கு வெளியில் காவல்துறைப் பதிவில் வாழும் ஈழ அகதிகள் கொரோனா நேரத்தில் படும் துயரங்கள் பற்றி எழுதுகிறேன். .

ஈழ அகதிகள் முகாம்களை தவிர பல ஊர்களில் காவல் துறையில் பதிவு செய்துவிட்டு வாழ்ந்துவருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் சொந்த தொழில் செய்து வாழ்பவர்கள். இவர்களுக்கு முகாம்களில் பதிவு இருப்பதில்லை அதே நேரத்தில் இவர்களுக்கு ரேசன் பதிவுகளும் இல்லை. இப்போது இந்த ஊரடங்கு உத்தரவால் எல்லாரையும் போல வேலையிழந்து வருமானம் இன்றி வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களுக்கு அரசு கொடுக்கும் எந்த உதவியில் நிவாரணமோ எப்போதுமே சென்றடைவதில்லை காரணம் இவர்கள் முகாம்களிலும் இல்லை வெளியிலும் ரேசன் பதிவிகளில் இல்லை. அது இந்த கொடுமையான சூழலில் அவர்களுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்திருக்கிறது. வாடகை உணவு உட்பட அனைத்திற்கும் அவர்கள் பெரும் சிரமப்படுகிறார்கள். இவர்களுக்கு அந்தந்த காவல் நிலையங்கள் மூலமாகவோ இல்லை வேறு ஏதேனும் மூலமாகவோ உதவிகள் கிடைக்கச் செய்தால் பெரும் உதவியாக இருக்கும்.

குறிப்பு: இவர்களில் சிலர் வெளிநாடுகளில் இருக்கும் உறவுகள் அனுப்பும் சிறு பண உதவிகள் மூலம் வாழ்ந்து வந்தார்கள் இப்போது அவர்களுக்கு பணம் அனுப்பும் உறவுகளும் வெளிநாடுகளில் முடங்கியுள்ளதால் பெரும் சிரமப்படுகிறார்கள்.

அண்ணன் இவர்களைப்பற்றி யாருமே பேசவில்லை. நிறையபேர் சிரமப்படுகிறார்கள். முடிந்தால் ஏதேனும் தளத்தில் இதைப் பேசுங்கள். நன்றி!

அகதி

Pin It