அன்றங்கே ஒரு நாடிருந்ததே
அந்நாட்டில் ஆறிருந்ததே
ஆறு நிறைய மீனிருந்ததே
மீனும் முழுகிடக் குளிரிருந்ததே
அன்னமிட வயலிருந்ததே
வயல் முழுவதும் கதிரிருந்ததே
கதிர் கொட்டிக் கிளி வந்ததே
கிளிகள் பாடும் பாட்டிருந்ததே
அந்நாட்டில் நிழலிருந்ததே
மண்வழியில் மரம் இருந்ததே
மரத்தடியில் பேசிச் சிரித்திட
நண்பர் கூட்டத் நூறிருந்ததே
நல்ல மழை பெய்திருந்ததே
நரகத் தீ சூடில்லையே
தீவட்டிக் கொள்ளை இல்லையே
தின்றது எதுவும் நஞ்சில்லையே
ஒரு வீட்டில் அடுப்பெரிந்தால் மறு வீட்டில் பசியில்லையே
ஒருகண்ணு கலங்கி நிறைந்தால் ஓடி வரப் பலருண்டங்கே
நாடெங்கும் மதில்கள் இல்லையே
நடைவெளி இடைவெளி நூறிருந்ததே
நாலுமணிப் பூவிலிருந்ததே
நல்லோர் சொல்லுக்கு விலையிருந்ததே
அன்றும் பல மதம் இருந்ததே
அதையும் தாண்டி அன்பிருந்ததே
உன்னைப் படைத்தோன் என்னைப் படைத்தோன்
என்றதொரு சண்டை இல்லையே
அந் நாட்டைக் கண்டவர் உண்டோ
எங்கே போனது தெளிவுண்டோ
அந் நாடு இறந்து போனதோ
அது வெறும் கனவானதோ...
(மலையாளப்பாடகர் தோழர் ரேஷ்மி பாடிய "வாழ்வியல் பாடல்" தமிழாக்கத்தை காயல் குரலோன் கே.ஜே.ஷாஹூல் ஹமீதின் இனிய குரலில் வலையொளியில் கேளுங்கள்