திருக்குறள் பேரவையம் தொடக்க மாநாடு! திண்டுக்கல்லில்..

திபி 2025 சுறவம் 13, காரிக்கிழமை அன்று.. ( 27-1 - 2024 அன்று..)

தொடர்புக்கு: 9444440449, 9941492701, 9952055085, 8608068002

வானுயர்ந்து நிற்கும் வள்ளுவரைச் சாதி, சமயங்களுக்கு ஆட்படுத்தாமல் உயர்த்திக் காட்டிட..

குடிசெயல்வகைவழி அடுத்தூன்றும் தலைமுறைக்கு வழிகாட்டிட..

அறிவையும் கல்வியையும் அனைவருக்கும் உரியவையாய்ப் பொதுமையாக்க வலியுறுத்தும் குறளைத் தமிழ்நாட்டின் தேசிய நூல் என உயர்த்தி நிறுத்திட...

உயிர்களெல்லாம் ஒன்றென உலகெலாம் பரப்பிட..

தமிழ்கூறும் நிலமெல்லாம்.. குறளறத்தை நிலைநிறுத்திட..

அறநெறி பரப்பும் குறள்நெறி விழா..

இந்தியப் பார்ப்பனியச் சனாதனத்திற்கு மட்டுமின்றிச் சாதி, சமயங்களுக்கே நேர் எதிரான திருக்குறளைத் தமிழ்நாட்டின் தேசிய ஒளிவிளக்காய் ஏற்றிடுவோம்!... அதன் ஒளிப்பாய்ச்சலில்... சாதிய அழுக்குகள் அழியட்டும்!

திருவள்ளுவ அற உணர்வில், தமிழ்த்தேசிய நெறி உணர்வில் திருவள்ளுவரை ஏந்துவோம்...! திருக்குறளைப் பரப்புவோம்..!

தமிழிய உணர்வாளர்கள்.. பொதுமை உணர்வாளர்கள்.. அனைவரும் அணி திரள்வோம்! அணியமாகுங்கள்..

- அழைக்கிறது திருக்குறள் பேரவையம்

முனைவர் மா. பூங்குன்றன் முதன்மை ஒருங்கிணைப்பாளர் (9444440449)

மாநாட்டு அமைப்புக் குழுத் தலைவர்: திரு. கழராம்பன் (9840202911)

மாநாட்டுப் பொருளாளர் : திரு. ச. சிவகுமார் (99423 04622)

Pin It