தொடர்புடைய படைப்புகள்

periyar karunanidhi veeramaniஆப்பிரிக்காவில் 41 (கோடி)

ஜாவா போர்னியோ, மலேயா ஆகிய நாடுகளில் 10

இந்தியாவில் 9

சைனாவில் 3

ரஷ்யா கிழக்கு ஐரோப்பாவில் 2

மத்திய கிழக்கு ஆசியாவில் 3

ஆக 68 (கோடி)

இந்திய ஆதிதிராவிடர்களும் முஸ்லீம்கள் ஆகிவிட்டால் 75 கோடி ஆகி விடும்.

இந்துக்கள் வகுப்புக்குள் வகுப்பு உற்பத்தி செய்து "அவன் பார்ப்பானுக்கும் சூத்திரச்சிக்கும் பிறந்தவன்" இவன் சூத்திரனுக்கும் பார்ப்பாத்திக்கும் பிறந்தவன்.

இவன் நாடாராய் இருந்து அய்யங்கார் ஆனவன்.

அவன் அம்பட்டனாய் இருந்து அய்யங்கார் ஆனவன்.

இவன் வைசியச்சிக்கும் சூத்திரனுக்கும் பிறந்தவன்.

அவன் சூத்திரனுக்கும் க்ஷத்திரியச்சிக்கும் பிறந்தவன்.

அவனோடு போனால் இவ்வளவு பாவம். இவனோடு போனால் அவ்வளவு பாவம். பார்ப்பனத்தியுடன் சூத்திரன் போனால் அவன் ஆண் குறியை அறுத்து வாயில் வைக்க வேண்டும்.

சூத்திரச்சியுடன் பார்ப்பான் போனால் அவன் ஆண் குறிக்கு தங்கத்தில் உறைபோட வேண்டும்.

என்றெல்லாம் சாஸ்திரம் எழுதி கூடுமானவரை அமுலில் கொண்டு வருவதும் அதற்காகவே காந்தி வாழ்வதும்,

அதற்காகவே காந்தி மூச்சுவிடவும் வேண்டும்.

அதற்காகவே சுயராஜ்ஜியம் பெறவேண்டு மென்பதும்.

ஆகியவையை எல்லாம் இந்து மகாத்மாக்களும் தேசபக்தர்களும் தேசியத் தலைவர்களும் பேசிக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.

காரியத்தில் என்னமோ முஸ்லீம்களே இரட்டைப் பங்கு அனுபவிக்க வேண்டியது தான். ஒரு சில பார்ப்பனர்கள் அனுபவிக்கும் கொள்ளை போக போக்கியத்தோடு இந்திய தேசியம் வெற்றி பெற வேண்டியதுதான். ஆகவே தீண்டப்படாத மக்களே! தாழ்த்தப்பட்ட மக்களே! நீங்கள் உங்கள் தீண்டாமை ஒழிவதற்கு என்று இல்லாவிட்டாலும், இந்திய மக்கள் அரசியல் சமூக சுயமரியாதைக்கு என்றாவது உடனே எல்லோரும் முஸ்லீம் ஆகுங்கள். இந்தியாவின் 16 கோடி முஸ்லீம்கள் இந்தியாவின் 48 கோடி இந்துக்களுக்குச் சமமானவர்கள், 16 கோடி முஸ்லீம்கள் ஆகிவிட்டால் இந்தியாவில் 8 நாளில் சமதர்ம ஆட்சியை ஏற்படுத்தி விடக்கூடும்.

('ஒரு உண்மை சுதந்திரவாதி', குடி அரசு கட்டுரை 12.01.1936)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.