periyar kundrakudi adikalar veeramaniஉபாத்தியாயர்:- பெட்டியை தச்சன் செய்தான், வீட்டை கொத்தன் கட்டினான், சாப்பாட்டை சமையற்காரன் சமைத்தான், உலகத்தைக் கடவுள் உண்டாக்கினார். தெரியுமா?

மாணாக்கன்: - தெரிந்தது சார். ஆனால், ஒரு சந்தேகம் சார்.

உபாத்தியாயர்: - என்ன சொல்?

மாணாக்கன்:- அப்படியானால், கடவுளை யார் உண்டாக்கினார் சார்?

உபாத்தியாயர்:- முட்டாள்! இந்தக் கேள்வியை உனக்கு யார் சொல்லிக் கொடுத்தது? அவர் தானாகவே உண்டானார். இனிமேல் இப்படி யெல்லாம் கேட்காதே.

மாணாக்கன்:- ஏன் சார்? கேட்டால் என்ன சார்?

உபாத்தியாயர்:- அது! நிரம்பவும் பாவம்.

மாணாக்கன்:- பாவம் என்றால் என்ன சார்?

உபாத்தியாயர்:- சீ! வாயை மூடு. நீ அயோக்கியன், “குடிஅரசு” படிக்கிறாயோ? ஏறு பெஞ்சி மேல்.

(குடி அரசு - உரையாடல் - 13.09.1931)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.