IV

பிரதமர் தெரிவித்த யோசனைக்கு இணங்க, ஒரு தீர்வு காணு வது குறுத்துப் பரிசீலிப்பதற்கு சிறுபான்மை சமூகப் பிரதிநிதிகள் கூடி முயற்சி எடுத்து ஒரு தீர்வு கண்டனர்; சிறுபான்மைக் குழுவின் அடுத்த கூட்டம் 1931 நவம்பர் 13 ஆம் தேதி கூடியதற்கு முதல் நாள் மாலை இத்தீர்வை அவர்கள் பிரதமரிடம் சமர்ப்பித்தனர். பிரதமர் தமது துவக்க உரையில் கூறியதாவது:

ambedkar 400 copy“எனவே, இந்தக் குழுவின் பணி ஆரம்பம் முதலே  மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அப்படியிருந்தும் ஓர் இணக்கமான திட்டத்தை நீங்கள் முன்  வைக்கத் தவறியமைக்காக வருந்துகிறேன்.

“எனினும் நேற்று இரவு முகமதியர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், இந்தியக் கிறித்தவர்களில் ஒரு பகுதியினர், ஆங்கிலோ-இந்தியர்கள், பிரிட்டிஷ் சமூகத்தினர் ஆகியோரின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு தூதுக் குழுவினர் என்னைச் சந்தித்தனர். இது ஒரு முழுமையான அணி  என்று கருதுகிறேன். அவர்கள் காமன்ஸ் சபையிலுள்ள  எனது அறையில் என்னை வந்து சந்தித்தனர்; தமக்குள்  செய்துகொண்ட ஓர் உடன்பாட்டை என்னிடம் சமர்ப்பித்தனர். பிரிட்டிஷ் இந்தியாவின் மக்கட் தொகையில்  சுமார் 46 சத வீதத்தினர் சம்பந்தப்பட்டது இந்த உடன்பாடு  என்று அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

”இந்த உடன்பாட்டைப் பரிசீலிக்க எங்களுக்கு நேர  மில்லையாதலால் இதனை இக்குழுவின் முக்கிய ஆவ  ணங்களில் ஒன்றாகச் சமர்ப்பிக்கும்படி மேதகு ஆகா  கான் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்”.

பிறகு மேதகு ஆகா கான் எழுந்து பின்வருமாறு பேசினார்:

”திரு. பிரதமர் அவர்களே, பொதுவாக வட்டமேசை  மாநாடும், குறிப்பாக சிறுபான்மைக் குழுவும் பரிசீலித்து வரும் வகுப்புப் பிரச்சினை சம்பந்தமாக முகமதியர்  களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினரும், ஆங்கிலோ – இந்தியர்களும், ஐரோப்பியர்களும், இந்தியக் கிறித்தவர்களில்  ஒரு கணிசமானப் பகுதியினரும் தங்களுக்குள் செய்து  கொண்டிருக்கும் ஓர் உடன்பாடு அடங்கிய ஆவணத்தை  அவர்கள் சார்பில் இங்கு சமர்ப்பிக்கிறேன், இந்தக் கடினமான, சிக்கலான பிரச்சினையை மிகக் கவனமாகவும்,  அக்கறையுடனும் பரிசீலித்த பிறகு எய்தப் பெற்றுள்ள  இந்த ஒப்பந்தத்தை ஒட்டுமொத்தமாகக் கருத்திற் கொள்ள  வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உடன்பாட்டின் அனைத்துப் பகுதிகளும் பரஸ்பரம் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டவையாகும்; எனவே, ஒன்று ஒப்பந்தம்  முழுவதையும் ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொள்ள வேண்  டும் அல்லது அதனை நிராகரிக்க வேண்டும்.”

இந்த ஆவணம் சிறுபான்மையினர் ஒப்பந்தம் என அழைக்கப் படுகிறது (அது பின்இணைப்பு 3ல் தரப்பட்டிருக்கிறது) . இதனைத் தொடர்ந்து நடைபெற்று பொது விவாதத்தின்போது திரு. காந்தி நிகழ்த்திய சொற்பொழிவு மிகப் பெருமளவில் கவ னத்தைக் கவர்ந்தது என்பதில் ஐயமில்லை. திரு. காந்தி மிகுந்த சீற்றம் கொண்டிருந்தார். சிறுபான்மையினர் உடன்பாட்டைத் தயா ரிப்பதில் பங்கு கொண்ட அனைவரையும் அவர் வன்மையாகக் கண்டித்தார். அதிலும் குறிப்பாக தீண்டப்படாதவர்கள் ஒரு தனி அர சியல் பிரிவாக உடன்பாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது அவரை மிகுந்த சினம் கொள்ளச் செய்தது. இதுகுறித்து திரு. காந்தி பேசியதாவது:

“இந்துக்களுக்கும், முகமதியர்களுக்கும், சீக்கியர்களுக்  கும் ஏற்புடைய எந்த ஒரு தீர்வையும் காங்கிரஸ் எப்போதுமே ஏற்றுக்கொள்ளும், ஆனால் எந்த ஒரு சமூகத்  துக்கும், குறிப்பாக தாழ்த்தப்பட்டோர் எனப்படுவர்  களுக்கு தனி வாக்காளர் தொகுதிகள் வழங்கும் ஏற்பாட்டை அது ஏற்காது என்று நான் ஏற்கெனவெ கூறியதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். ஏனைய  சிறுபான்மையினர் முன்வைக்கும் கோரிக்கைகளை என்  னால் புரிந்துகொள்ள முடியும்; ஆனால் தீண்டப்படாத  வர்கள் சார்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் மிகவும்  ஈவு இரக்கமற்றவையாகும். இவை தீண்டாமை எனும்  கொடுமையை நிரந்தரமாக்குகின்றன. இந்தியாவுக்கு  சுதந்திரம் பெறும் பொருட்டுக் கூட தீண்டப்படாதவர்களின்  ஜீவாதார உரிமைகளைப் பலி கொடுக்க மாட்டேன்; விற்க மாட்டேன்.

தீண்டப்படாதோரின் மிகப் பரந்த பகுதியினரை தனிப்பட்ட முறையில் நான் பிரதிநிதித்துவப்  படுத்துவதாக உரிமை கொண்டாடுகிறேன். இங்கு நான்  காங்கிரஸ் சார்பில் மட்டுமே பேசவில்லை; என் சொந்த  சார்பிலும் பேசுகிறேன்; தீண்டப்படாதவர்களிடையே  ஒது பொது வாக்கெடுப்பு நடத்தப்படுமானால் மிக அதிக  மான வாக்குகள் பெற்று நான் முன்னணியில் இருப்பேன்.  தனி வாக்காளர் தொகுதியும், தனி இட ஒதுக்கீடும் வைதிக  இந்து தர்மத்துக்கே வெட்கக்கேடான, மானக்கேடான,  அவக்கேடான தீண்டாமை என்னும் இக்கோரக் கொடு  மையை ஒழித்துக் கட்டுவதற்கு எவ்வகையிலும் உதவிகரமாக இருக்காது என்று நான் இந்தியாவின் மூலை  முடுக்கெல்லாம் சென்று தீண்டப்படாதோருக்கு எடுத்  துரைப்பேன்; அதற்காக அல்லும் பகலும் உழைப்பேன்.

“தீண்டாமை எனும் இந்த இழுக்கை, அழுக்கை,  சாபக்கேட்டை ஒழித்துக் கட்டுவதற்கு உறுதிபூண்டுள்ள  ஏராளமான இந்து சீர்திருத்தவாசிகள் இன்று தோன்றியுள்ளனர் என்பதை இந்தக் குழுவும், முழு உலகமும்  அறிந்து கொள்ளட்டும், எங்கள் பதிவேடுகளில், மக்கள்  தொகைக் கணக்கெடுப்பில் தீண்டப்படாதவர்கள் ஒரு  தனி சமூகத்தினராகக் குறிக்கப்படுவதை நாங்கள் விரும்ப  வில்லை. சீக்கியர்கள் நிரந்தரமாக ஒரு தனி இனமாக  இருக்க முடியும்; முகமதியர்களும். ஐரோப்பியர்களும்  அவ்வாறே இருக்க முடியும்.

தீண்டப்படாதவர்கள் என்றென்றும், எக்காலத்தும் தீண்டப்படாதவர்களாகவே  இருக்க முடியுமா? தீண்டாமை நீடிப்பதைக் காட்டி லும் இந்து சமயம் மாண்ட்டு மடிவதைக் கூட நான் வர  வேற்பேன். டாக்டர் அம்பேத்கரிடம் நான் மிகுந்த மதிப்  பும் மரியாதையும் வைத்திருக்கிறேன்; தீண்டப்படாத  வர்கள் உய்வும் உயர்வும் பெறவேண்டும் என்பதில்  அவர் கொண்டுள்ள ஆர்வத்தைப் பாராட்டுகிறேன்; இவ்  வகையில் அவர் திறமையாகப் பணியாற்றி வருவதைப்  போற்றுகிறேன்; எனினும் தீண்டாமையின் கோரப்பிடிப்  பில் சிக்குண்டு அவர் எதிர்கொண்ட இன்னல் இடுக்கண்கள், துன்ப துயரங்கள், அவர் அனுபவிக்க நேரிட்ட கசப்பான அனுபவங்கள் இந்தப் பிரச்சினையில் அவரது கண்  ணோட்டத்தையே திசைமாற்றி விட்டன என்று பணி  வோடு கூறுக்கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு கூறுவது  எனக்கு மனக் கஷ்டமாகத்தான் இருக்கிறது; ஆனால்  இதைக் கூறவில்லை என்றால் என்னுடைய ஜீவனோடு  ஜீவனாக உள்ள தீண்டப்படாதவர்களுக்குத் துரோகம்  இழைத்தவனாவேன்.

இந்த உலகம் முழுவதையுமே  எனக்குத் தருவதாயினும் அவர்களது நலன்களைப்  பேரம்பேச மாட்டேன்; அவற்றைப் பணயம் வைக்க  மாட்டேன். மிகுந்த பொறுப்பு உணர்வோடுதான் பேசு  கிறேன்; இந்தியாவிலுள்ள தீண்டப்படாதவர்கள் அனை  வர் சார்பிலும் தாம் பேசுவதாக டாக்டர் அம்பேத்கர்  உரிமை கொண்டாடுவது முறையல்ல. இது இந்து சமயத்தில் ஒரு பிளவை உண்டுபண்ணும். அதை நான் விரும்பவில்லை. தீண்டப்படாதவர்கள் விரும்பினால் இஸ்லாம்  சமயத்துக்கோ அல்லது கிறித்தவ சமயத்துக்கோ மதம் மாறலாம். அதனை நான் சகித்துக் கொள்வேன். ஆனால் கிராமங்களில் இந்து சமயம் இரண்டாகப் பிளவுபட்  டிருப்பதை நான் சகித்துக் கொள்ள மாட்டேன். தீண்டப்படாதவர்களின் அரசியல் உரிமைப் பற்றி பேசுபவர்கள்  தங்களுடைய இந்தியாவை அறிய மாட்டார்கள். இன்று  இந்திய சமுதாயம் எவ்வாறு நிர்மாணிக்கப்பட்டிருக்  கிறது என்பதை அறிய மாட்டார்கள்; ஆதலால் இதனை எதிர்ப்பதற்கு நான் ஒருவன் மட்டுமே இருக்கிறேன்  என்றால், என் உயிரைக் கொடுத்தும் அதனை எதிர்ப்பேன்  என்று வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.”

சிறுபான்மைக் குழு கூட்டத்தை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதற்கு முன்னர் ஓர் இணக்கமான உடன்பாடு, ஓர் ஒன்றுபட்ட தீர்வு காணுவது சாத்தியமில்லை என்பதைத் தெரிந்து கொண்ட கூட்டத் தலைவர் பிரதிநிதிகளுக்கு ஒரு யோசனை கூறி னார். அவர் பின்வருமாறு தெரிவித்தார்:

“வகுப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு  என்னைக் கேட்டுக் கொள்ளும் ஒரு வேண்டுகோளில் இக்  குழுவைச் சேர்ந்த நீங்கள் ஒவ்வொருவரும் கையெழுத்  திடுவதற்கு, என் முடிவை ஏற்பதாக உறுதி கூறுவதற்  கும் நீங்கள் சம்மதிப்பீர்களா? இது ஒரு நியாயமான  கோரிக்கை என்று நம்புகிறேன்... நான் எல்லாப் பிரிவினரை  யும் அல்லது தனி மனிதர்களையும் மனத்தில் வைத்தே  இதைக் கூறுகிறேன். வகுப்புப் பிரச்சினை சம்பந்தமாக  தாற்காலிகமாகவாவது ஒரு தீர்வைத் தெரிவிக்கும்படி  என்னைக் கேட்டுக்கொள்ளும் ஒரு பிரகடனத்தில் குழு  உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, நாங்கள் இந்தத் தீர்வை  ஏற்கிறோம் என்று கூறுவீர்களா? இப்போதே இதைச்  செய்ய வேண்டும் என்று நான் கேட்கவில்லை.

இந்தப்  பிரகடனத்தில் கையெழுத்திட்டு, நான் கூறும் முடிவை ஏற்போம் என்றும், புதிய அரசியலமைப்பை உருவாக்க  நடவடிக்கைகள் எடுக்கப்படும் காலத்தில் அந்த முடிவை  செயல்படுத்த எங்கள் சக்திக்கு உட்பட்ட அனைத்தை  யும் செய்வோம் என்றும் நீங்கள் உறுதி அளிப்பீர்களா?  இதையே பல பகுதியினரிடம் – குறைந்தபட்சம் தனி நபர்களிடம் – அவ்வப்போது கேட்டு வந்திருக்கிறேன்; ஆனால்  என்றும் அந்த உறுதிமொழியை நான் பெற்றதில்லை.  இதிலிருந்து நிலைமையை நிச்சயமாகப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இது ஒருபுறமிருக்க, தான் அளித்துள்ள  வாக்குறுதிகளை நிறைவேற்றுவதையும், ஓர் அரசிய  லமைப்புச் சட்டத்தைத் தயாரித்தளிப்பதையும் வகுப்பு  வேறுபாடுகள் தடுப்பதற்கு அரசாங்கம் இடமளிக்காது  என்று இந்தக் கூட்டத்தின் ஆரம்பத்தில் நான் குறிப்  பிட்டதை அன்புகூர்ந்து மறந்துவிடாதீர்கள். எனவே, அளிக்காதீர்கள்.”

V

வகுப்புப் பிரச்சினைக்குத் தீர்வு காணுவதற்கு சிறு பான்மைக் குழு மேற்கொண்ட முயற்சிகள் இவ்விதம் முடிவடைந்தன. சிறு பான்மைக் குழுவில் நடைபெற்ற விவாதம் தீண்டப்படாதவர்கள் பால் திரு. காந்தி கொண்டுள்ள மனப்போக்கைத் துலாம்பரமாகப் படம்பிடித்துக் காட்டிற்று. திரு. காந்தி தீண்டப்படாதவர்களின் கடைந் தெடுத்த பரமவைரி என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டனர். தீண்டப்படாதோர் பிரச்சினையில் திரு. காந்தி இதுவரை கடைப் பிடித்து வந்திருக்கும் போக்கைக் கொண்டு பார்க்கும்போது, தீண்டப் படாதோரின் கோரிக்கைகளை எதிர்க்கும் பிரதான நோக்கத்தோடேயே அவர் இந்த வட்டமேசை மாநாட்டுக்கு வந்திருக்கிறார் என்று கூறுவது எவ்வகையிலும் தவறாகாது என்றே சொல்லலாம்.

தீண்டப்படாதோர் விஷயத்தில் திரு. காந்தி கடைப்பிடித்து வரும் போக்கை அவருடைய நண்பர்களாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை. முஸ்லீம்களுக்கும் சீக்கியர்களுக்கும் அங்கீகாரம் அளிக்கும்போது அதனை தீண்டப்படாதோருக்கு மறுப்பது அவர் களுக்கு மிகவும் வியப்பாகவும் புதிராகவும் இருக்கிறது. இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்கும் போதெல்லாம் அவர்கள் மீது அவர் எரிந்து விழுகிறார். கோபக் கனலை கக்குகிறார். தீண்டப்படா தோரின் கோரிக்கைகளை எதிர்ப்பதற்கு எத்தகைய தருக்க ரீதியான, முரண்பாடற்ற சமாதானத்தை, நியாயமான காரணத்தை அவரால் அளிக்க முடியவில்லை. தீண்டப்படாதவர்களின் நல்வாழ்வுக்காக, முன்னேற் றத்திற்காக இந்துக்கள் தீவிரமாக பாடுபட்டு வருகிறார்கள், எனவே, அவர்களுக்கு அரசியல் ரீதியான பாதுகாப்புகள் எவை யும் அவசியமில்லை என்னும் நிலையை வட்டமேசை மாநாட் டிற்குள் அவர் மேற்கொள்கிறார். ஆனால் மாநாட்டுக்கு வெளி யேயோ அவர் முற்றுலும் வேறுபட்ட காரணங்களை முன்வைக் கிறார். தமது நிலைக்கு ஆதரவாக திரு. காந்தி கூறியதாவது:

“முஸ்லீம்களும், சீக்கியர்களும் நன்கு ஒன்றுபட்டுள்  ளனர். ஆனால் தீண்டப்படாதோர் அப்படியில்லை. அவர்  களிடம் அரசியல் உணர்வு மிகமிகக் குறைவாகவே காணப்  படுகிறது; அவர்கள் மிகவும் மோசமான முறையில் நடத்தப்  படுகின்றனர்; அவர்களைப் பாதுகாக்க நான் விரும்பு  கிறேன். அவர்களுக்குத் தனி வாக்காளர் தொகுதிகள் ஏற்  படுத்தப்படுமானால், வைதீக இந்துக்களின் கொத்தளங்களாக, கோட்டைகளாக அமைந்துள்ள கிராமங்களில் அவர்களது வாழ்க்கை துயர்மிக்கதாக, அவப்பேறான  தாக, இரங்கத்தக்கதாகவே இருக்கம்.

‘தீண்டப்படாத வர்களை’ காலம் காலமாக, வழிவழியாகப் புறக்கணித்து  வந்தமைக்காக சாதி இந்துக்கள்தான் பிராயச்சித்தம் தேட  வேண்டும். தீவிர சமூக சீர்திருத்தத்தின் மூலமும், அவர்  களுக்குத் தனி வாக்காளர் தொகுதிகளைக் கோராமல்,  சேவையின் வாயிலாக ‘தீண்டப்படாதவர்களின்’ வாழ்க்  கையை மேம்படுத்துவதன் மூலமும் இந்தப் பிராயச்  சித்தத்தைச் செய்ய முடியும். இவ்வாறில்லாமல் அவர்  களுக்குத் தனி வாக்காளர் தொகுதிகளை வழங்குவது  ‘தீண்டப்படாதவர்களுக்கும்’ வைதீக இந்துக்களுக்கும்  இடையே பூசலையும், பிணக்கையும், பகைமையையும்  தான் அதிகப்படுத்தும். முசல்மான்களுக்கும், சீக்கியர்  களுக்கும் விசேடப் பிரதிநிதித்துவம் அளிக்கும் யோச  னையை ஒரு தவிர்க்க முடியாத தீமை என்ற முறையி  லேயே நான் சகித்துக் கொள்கிறேன் என்பதை நீங்கள்  புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால் இத்தகைய சலுகையை ‘தீண்டப்படாதவர்களுக்கு’ வழங்குவது நிச்சயமாக அவர்களுக்குத் தீங்கையே விளைவிக்கும். ‘தீண்டப்படாதவர்களுக்கு’ தனி வாக்காளர் தொகுதிகள் என்னும்  யோசனை அரசிடமிருந்து உதித்த ஒரு புதிய துருப்புச்  சீட்டாகும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை.உண்மையில் இப்போது அவர்களுக்குச் செய்ய வேண்டிய  ஒரு விஷயம் அவர்களை வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெறச் செய்து அரசியலமைப்புச் சட்டத்தில் அவர்  களுக்கு அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தருவதேயாகும். அவர்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்படுவார்களேயானால். திட்டமிட்ட முறையில் அவர்களது பிரதிநிதி விலக்கப்படுவாரேயானால் அப்போது விசேட  தேர்தல் நீதிமன்றத்துக்குச் செல்ல அவர்களுக்கு உரிமை  உண்டு; அந்த நீதிமன்றம் அவர்களுக்கு முழுப்பாதுகாப்பு அளிக்கும். தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படும்  ஒரு வேட்பாளரின் தேர்தலை ரத்து செய்து, நியாயமற்ற  முறையில் விலக்கப்பட்டவர்களை முறைப்படி தேர்ந்  தெடுப்பதற்கு இந்த விசேட நீதிமன்றங்கள் உரிமை  பெற்றிருக்கும்.

“தீண்டப்படாதவர்களுக்கு’ தனிவாக்காளர்கள் தொகுதி  என்பது அவர்களது அடிமைத்தனத்தை நிரந்தரப்படுத்  தவே, சாடுவதமாக்கவே செய்யும். தனிவாக்காளர் தொகுதி  களைப் பெறுவதன் மூலம் முசல்மான்கள் ஒருபோதும்  முசல்மான்கள் அல்லாதவர்களாகிவிட மாட்டார்கள். அவ்வாறிருக்கும்போது, ‘தீண்டப்படாதவர்கள்’ என்றென்  றும் ‘தீண்டப்படாதவர்களாக’ இருக்க வேண்டும் என்று  நீங்கள் விரும்புகிறீர்களா? உண்மையில், தனிவாக்காளர்  தொகுதிகள் என்பவை தீண்டாமை என்னும் கறையை,  வடுவை நீட்டித்து நிலைத்திருக்கவே செய்யும். எனவே, தீண்டாமையை வேரோடு வேரடி மண்ணோடு ஒழித்துக்  கட்டுவதே இன்றைய தேவை; இதை நீங்கள் செய்து  விட்டால், அகம்பாவமிக்க ‘மேல்தட்டு’ வகுப்பினர் ‘கீழ்த்  தட்டு’ வகுப்பினர் மீது திணித்துள்ள இந்த முறைகேடு,  ஒழுக்கக் கேடு அழிக்கப்பட்டுவிடும். இவ்வாறு இந்த  அவக்கேட்டை நீங்கள் நிர்மூலமாக்கி விட்ட பிறகு,  யாருக்கு தனி வாக்காளர் தொகுதிகளை வழங்குவீர்கள்?  ஐரோப்பிய வரலாற்று ஏடுகளைச் சற்றுப் புரட்டிப் பாருங்கள். அங்கு தொழிலாளி வர்க்கங்களுக்கோ அல்லது  பெண்களுக்கோ தனிவாக்காளர் தொகுதிகள் அளிக்கப்  பட்டிருக்கின்றனவா? வயது வந்தோர் அனைவருக்கும்  வாக்குரிமையை உத்தரவாதம் செய்துவிடும்போது, அதன்  மூலம் ‘தீண்டப்படாதவர்களுக்கு’ முழுப் பந்தோபஸ்தை, பாதுகாப்பை அளிக்கின்றீர்கள். கடைந்தெடுத்த வைதீகர்  கள் கூட வாக்குகளுக்காக அவர்களது தயவை நாட  வேண்டியதேற்படும்.

”தீண்டப்படாதவர்களுக்கு’ தனி வாக்காளர் தொகுதி  கள் அளிக்கப்பட வேண்டுமா என்று அவர்களுடைய பிரதி  நிதியான டாக்டர் அம்பேத்கரைக் கேளுங்கள். டாக்டர்  அம்பேத்கரிடம் எனக்கு பெருமதிப்பு உண்டு. அவர் கசப்பு  உணர்ச்சி கொண்டிருப்பதில் நியாயம் இருக்கிறது. அவர்  நமது மண்டைகளை உடைக்கவில்லை என்றால், அது  அவரது தன்னடக்கத்தையே காட்டுகிறது. இன்று அவர்  சந்தேக உணர்வில் ஆழ்ந்து தோய்ந்து போயிருக்கிறார்;  இதனால் எதையுமே ஐயக் கண்கொண்டே நோக்கு  கிறார். ஒவ்வொரு இந்துவையும், ‘தீண்டப்படாதவர்  களின்’ ஜென்ம பகைவனாகப் பார்க்கிறார்; இது முற்றி  லும் இயல்பே. தென் ஆப்பிரிக்காவில் எனது ஆரம்ப  நாட்களில், சென்றவிடமெல்லாம் ஐரோப்பியர்கள்  வேட்டை நாய்களைப்போல் துரத்திக் கொண்டு வந்து,  எனக்கு சொல்லொண்ணா துன்ப துயங்களை, கொடுமை  களை இழைத்தபோது, இதே உணர்வுதான் எனக்கும்  ஏற்பட்டது. எனவே டாக்டர் அம்பேத்கர் தமது சீற்றத்தை,  வெறுப்பை வெளியிடுவது முற்றிலும் நியாயமே. ஆனால்  அவர் நாடிவிரும்பும் தனி வாக்காளர் தொகுதிகள் அவ  ருக்கு சமூக சீர்திருத்தத்தை வாரி வழங்கிவிடாது. அவர்  வேண்டுமானால் உயர் பதவியையும் அந்தஸ்தையும்  பெறலாம். இதனால் ‘தீண்டப்படாதவர்களுக்கு’ எந்த  நன்மையும் விளைந்துவிடாது. இத்தனை ஆண்டுகளாக  ‘தீண்டப்படாதவர்களுடன்’ உண்டு, உறங்கி, வாழ்ந்து,  அவர்களது எல்லா இன்ப துன்பங்களிலும் பங்கெடுத்துக்  கொண்டவன் என்ற முறையில் இதனை என்னால்  உரிமையோடு கூறமுடியும்.”

வட்டமேசை மாநாட்டின் பிரசாரம் செய்வதோடு திரு.காந்தி நிற்கவில்லை; தாம் எதிர்பார்த்தபடி தமது பிரசாரம் வெற்றி பெற வில்லை எனக் கண்டதும் அவர் சூழ்ச்சி செய்வதில் இறங்கினார். பிரதமரின் பரிந்துரையின் பேரில் சிறுபான்மையினர் ஓர் உடன் பாட்டிற்கு வர இருக்கின்றனர் என்பதையும், அந்த உடன்பாட் டுக்கு ஏனைய சிறுபான்மையினரின், குறிப்பாக முஸ்லீம்களின் ஆதரவு கிட்டும் என்பதையும் திரு. காந்தி கேள்விப்பட்டபோது பெருமளவுக்கு கலக்கமடைந்தார். தீண்டப்படாதவர்களைத் தனிமைப்படுத்த அவர் ஒரு திட்டம் தீட்டினார். இதன் பொருட்டு, முசல்மான்களைத் தம் பக்கம் ஈர்க்க முற்பட்டார்; ஏற்கெனவே தாம் ஏற்க மறுத்த முசல்மான்களின் பதினான்கு அம்சக் கோரிக்கை களை இப்போது ஏற்பதற்கு முன்வந்தார். தீண்டப்படாதவர்களுக்கு முசல்மான்கள் ஆதரவு அளிக்கிறார்கள் என்பதைக் கண்டபோது, தீண்டப்படாதவர்களுக்கு அளிக்கும் ஆதரவை திரும்பப் பெற்றுக் கொள்ளும் பட்சத்தில், அவர்களது பதினான்கு அம்சக் கோரிக்கை களைத் தாம் ஏற்கத் தயாராக இருப்பதாக திரு. காந்தி அறிவித்தார். இதன்பேரில் உண்மையில் ஓர் ஓப்பந்தம் கூடத் தயாரிக்கப்பட்டு விட்டது. அதன் வாசகம் கீழே தரப்பட்டிருக்கிறது:

காந்தி - மூஸ்லீம் நகல் ஒப்பந்தம்

வட்டமேசை மாநாட்டில் முஸ்லீம் பிரதிநிதிகள் (இந்த ஆவணம் எனது “பாகிஸ்தான் குறித்த சிந்தனைகள் (1939) என்ற நூலின் பிற்சேர்க்கையாக அச்சிடப்பட்டுள்ளது. அப்போதுதான் அது முதன் முறையாக அச்சில் வந்தது. அதன் மெய்ம்மை ஒருபோதும் ஐயறவுக்காளானதில்லை. முஸ்லீம் பிரதிநிதிகளிடமிருந்து இந்துப் பிரதிநிதி ஒருவர் இரகசியமாகப் பெற்ற இவ் ஆவணத்தின் நகல் ஒன்றை அவரிடமிருந்து பெற்றேன்).

அரசியார் இல்லம்

57, தூயஜேம்ஸ் வளாகம்,

 பக்கிங்காம் வாயில்,

 இலண்டன் தெ.மெ. 1

 அக்டோபர் 6, 1931

தொலைபேசி: விக்டோரியா 2360

தந்தி: “கோர்ட்லைக்இலண்டன்

பின்கண்ட முன்மொழிவுகள் நேற்று இரவு 10 மணிக்கு திரு. காந்தியாலும் முஸ்லீம் பிரதிநிதிகள் குழுவாலும் விவாதிக்கப் பட்டன. இவற்றைக் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் முஸ்லீம் பிரதிநிதிகளின் முன்மொழிவுகள், காங்கிரஸ் கட்சிக் கொள்கைகளின் அடிப்படையில் காந்தியார் எடுத்துரைத்த முன் மொழிவுகள் என இருவகையாய்ப் பிரிக்கலாம். அவை காந்தி யாரின் ஒப்புதல் பெற்று முஸ்லீம் பிரதிநிதிகளின் கருத்தறிதலுக்கு அனுப்பப் பெற்றன. அவ்வரைவு வருமாறு:

(முஸ்லிம் லீக் பிரதிநிதிகள் அலுவலகத் தாளில் இவ் ஆவணம் தட்டச்சு செய்யப்பட்டிருந்ததென்பதை இது காட்டுகிறது.)

  முஸ்லீம் முன்மொழிவுகள் காந்தியார் முன்மொழிவுகள்
1) பஞ்சாபிலும் வங்காளத்திலும்முஸ்லீம்கள் மொத்த மக்கட் தொகையில் 1 சதவீதமே கூடுதலாகப் பெற்ற் பெரும்பான்மயினராக உள்ளனர். இந்நிலைமையில் அவையில் அவர்களுக்கு 51 சதவிகித இடங்கள் ஒதுக்கப்பட்டு அவற்றிற்கான தேர்தல்கள் கூட்டு வாக்காளர் தொகுதிகள் மூலம் நடைபெற வேண்டுமா என்பதைப் புதிய அரசியலமைப்புத் திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே முஸ்லீம் வாக்காளரிடையே வாக்கெடுப்பின் விடப்பட்டு, வாக்கெப்பின் முடிவுகள் அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். வயது வந்தோர் வாக்குரி மையின் அடிப்படையில்தான் வாக்கெடுப்பு நடைபெற வேண்டும்
2)

முஸ்லீம்கள் சிறுபான்மை யினராய் வாழும் பிற மாகாணங்களில் தற்போது நிலவி வரும் விகிதங்களிலேயே இடஒதுக்கீடு தொடர்ந்து அளிக்கப் பட வேண்டும். ஒதுக்கீடு கூட்டுத் தொகுதி முறையிலா, தனித்தொகுதி முறையிலா என்பது புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், மூஸ்லீம் வாக்காளர்களின் கருத்துக் கணிப்புக்கு விடப்பட்டு அதில் கிடைக்கும் முடிவு ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும்.

சீக்கிய, முஸ்லீம் இனத்தவர் அன்றிப் பிறிதெந்தச் சிறுபான்மையினர்க்கும் தனி ஒதுக்கீடு கூடாது.

காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைகளாவன: அ) முழுமையான விடுதலை

ஆ) நாட்டுப் பாதுகாப்பின் மீது உடனடியான கட்டுப்பாடு.

இ) வெளிநாட்டுறவு மீது முழுக் கட்டுப்பாடு.

ஈ) நிதியின் மீது முழுக் கட்டுப்பாடு.

உ) பொதுக் கடன்கள் பிற கடப்பாடுகள் குறித்து கட்டற்ற நடுவர் மன்றத்தின் ஆய்வு.

ஊ) பங்குதாரர் போன்று எத்தரப்பிற்கும் பிரிந்துபோக உரிமை.

3)

பிரிட்டிஸ் இந்திய மையச் சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் முஸ்லீம்களுக்கு 26% பிரதிநிதித்துவம் தேவை. இந்தியச் சமஸ்தானங்களின் வாயிலாக மேலும் 7%. ஆக மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்கள் இருக்க வேண்டும்.

 
4) எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும் கூட்டாட்சியமைப் பில் சேரும் மாகாணங்களுக்கே இருக்க வேண்டும்  

5)

கீழ்க்கண்ட சிக்கல்கள் குறித்தும் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்படுகிறது.
  • சிந்து (சிந்து மாநிலம் தனியாகப் பிரிக்கப்படலைக் குறிக்கிறது)
  • ii)        வடமேற்கு எல்லைப்புற மாகாணம்(வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் மாகாண சுயாட்சியும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசும்)
  • படைத்துறைப் பணிகள்(படைத்துறைப் பணிகளில் ஒதுக்கீடு கோரல்)
  • iv)        அமைச்சரவை(அமைச்சரவையில் பங்கு)
  • அடிப்படை உரிமைகளுக்கும், சமய, பண்பாட்டு உரிமைகளுக்கும் பாதுகாப்பு
  • எந்தவொரு இனத்தையும் பாதிக்கும் சட்டமியற்றுலுக் கெதிரான பாதுகாப்பு.
 

முஸ்லீம் பிரதிநிதிகளுடன் காந்தியார் செய்துகொள்ள உடன் பட்ட ஒப்பந்தம் இதுதான். இவ்வொப்பந்தத்தின் வாயிலாக, முஸ்லீம் பிரதிநிதிகள் எழுப்பிய பதினான்கு கோரிக்கைகளுக்கும் இணங்கத் தயாராக இருந்தார். இதற்கு பதிலுதவியாக தனி ஒதுக்கீடு கோட்பாட் டின் பயன் இந்துக்கள், மூஸ்லீம்கள், சீக்கியர்கள் ஆகிய மூன்று சமயத்தவருக்கும் தொடருவதை அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டு மென்று கேட்டார். இப்படியொரு உடன்பாடு செய்துகொள்வதில் என்ன தவறு எனச் சிலர் நினைக்கலாம். இம்மூன்று சமயங்களைச் சேர்ந்த மக்களைத் தவிர வேறெவர்க்கும் தனி ஒதுக்கீடு தர இணங்க மாட்டோம் என்றுதானே காங்கிரஸ் கட்சியும் கூறி வந்துள்ளது என்றும் எண்ணலாம்.

ஆனால் இக்கண்ணோட்டத்தைப் பற்றி மேலோட்டமாக்க கருதி முடிவு செய்துவிட முடியாது. காந்தியாரின் போக்கு சரியெனக் கருதுவோர் இரு வினாக்களைக் கேட்டுப் பார்க்க வேண்டும். பிற சிறுபான்மையினருக்கும், தீண்டப்படாதவர்களுக்கும் விசேடப் பிரதிநிதித்துவத்தை மறுக்கும் இந்த நகல் ஒப்பந்தத்தில் தீண்டப்படாதவர்கள் குறிப்பிடப் படவில்லை என்பது உண்மையே. ஆனால் சீக்கியர்களைத் தவிர வேறு எந்தச் சிறுபான்மையினரையும் ஆதரிக்கக் கூடாது என்று முசல்மான்கள் நிர்ப்பந்திக்கப்பட்டது எதைக் காட்டுகிறது? அவர்கள் தீண்டப்படாதவர்களை ஆதரிக்கக் கூடாது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறதல்லவா? எனினும் இந்தச் சூழ்ச்சியில் திரு. காந்தி வெற்றிபெறவில்லை; இது இயல்பே. தங்களுக்குப் பாதுகாப்புகள் வேண்டுமெனக் கோரும் முசல்மான்கள் தீண்டப்படாதவர்கள் இதேபோன்று முன்வைக்கும் கோரிக்கையை எதிர்க்க முடியாதல்லவா? தீண்டப்படாதவர்களை எப்படியும் ஒழித்துக் கட்டியே தீரவேண்டும் என்ற வெறியில், எது சரி, எது தவறு என்பதைச் சீர்தூக்கிப் பார்க்கத் தவறும் அளவுக்கு திரு. காந்தி சென்று விட்டார் என்றே கூறவேண்டும்.

தாம் சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டுமென்ற அக்கறை, ஆர்வம் திரு. காந்திக்கு இல்லை. சிறுபான்மைக் குழு கூட்டத்தில் காந்தி என்ன கூறினார்? தங்களுக்குத் தனித் தொகுதிகள் வேண்டும் என்று தீண்டப்படாதவர்கள் முன் வைக்கும் கோரிக்கையை ஏற்க சிறுபான்மைக் குழு இணங்குமானால் அவ்வாறே அது செய்யலாம் என்று அந்தக் குழுக் கூட்டத்தில் பேசும் போது திரு. காந்தி கூறினார். இதன் பொருள் என்ன? பெரும்பான்மை யிரனது முடிவுக்கு அவர் கட்டுப்படுவதாகத் தானே இதற்குப் பொருள். ஆனால் தீண்டப்படாதவர்களை ஏனைய சிறுபான்மையினரும் ஆதரிக்க இணங்கி விட்டனர் என்று தெரியவந்தபோது, அவர் முசல் மான்களை அணுகவும், காங்கிரசும், இந்து மாகசபையும், ஏன் சைமன் கமிஷனே கூட நிராகரித்துவிட்ட அவர்களது பதினான்கு அம்சக்கோரிக்கைகளை ஏற்று அவர்களைத் தீண்டப்படாதவர்களுக்கு எதிராகத் தூண்டிவிடவும் அவர் தயங்கவில்லை.

பொதுமக்களின் அபிப்பிராயத்தையும், தார்மீக நெறியையும், பொது ஒழுக்கத்தை யும் காற்றில் பறக்க விடுவதற்குக் கூட அவர் தயாராக இருந்த போதி லும், அவரது குரூர சூழ்ச்சி மண் கவ்வவே செய்தது; ஏனென்றால் இந்தக் கொடிய சதியில் தங்களை இணைத்துக் கொண்டு தங்களுக்கு அவப்பெயரைச் சம்பாதித்துக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை; எனவே, இந்த யோசனைக்கு இணங்க அவர்கள் மறுத்துவிட்டனர். வட்டமேசை மாநாட்டின் இரண்டாவது கூட்டத்தொடர் கலைக்கப் பட்டபோது, வகுப்புப் பிரச்சினை சம்பந்தமாக மத்தியஸ்தம் செய்து, தமது தீர்ப்பை அளிப்பதற்கு தமக்கு அதிகாரம் தரும் கையெழுத் திட்ட ஒரு வேண்டுகோளைச் சமர்ப்பிக்கும்படி பிரதமர் தெரிவித்த யோசனையை சிறுபான்மைக் குழுவின் பிரதிநிதிகள் ஏற்றுக் கொண் டனர். திரு. காந்தி உட்பட பல பிரதிநிதிகள் அவ்வாறே செய்தனர் (இத்தகைய வேண்டுகோள் எதையும் நான் முன்வைக்கவில்லை. தீண்டப்படாதவர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை, ஆதலால், மத்தியஸ்தம் ஏதும் தேவையில்லை என்பது என் கருத்து). இதற்குப் பிறகு பிரதிநிதிகள் இந்தியாவுக்குத் திரும்புவதையும், பிரதமரின் மத்தியஸ்த்ததை ஒப்புக்கொண்டுவிட்ட நிலையில் அவரது தீர்ப்பை மகிழ்ச்சியோடு ஏற்படுதற்கு அதற்காகக் காத்துக் கொண்டிருப்பதையும் தவிர வேறு வழியில்லை.

VI

மேற்கொண்டு செல்லுவதற்கு முன்னர், பிரதமர் எத்தகைய தீர்ப்பை வழங்கினார் என்பதைக் கூழுவதற்கு முன்னர் வாக்குரிமைக் குழுவின் உறுப்பினர் என்ற முறையில் நான் எதிர்கொண்ட ஒரு விந்தையாக நிகழ்ச்சியை இங்கு கூற வேண்டும். வட்டமேசை மாநாட் டின் இரண்டாவது கூட்டத் தொடர் முடிவுடைந்த பிறகு, புதிய அரசிய லமைப்பில் எத்தகைய வாக்குரிமை முறையைக் கைக்கொள்ள வேண்டும் என்னும் பிரச்சினையை ஒரு குழு ஆராய்வது உசிதமாக இருக்கும் என்று பிரதமர் கருதினார். இதன்படி, லோதியன் பிரபுவைத் தலைவராகக் கொண்ட ஒரு குழுவை 1931 டிசம்பரில் அவர் நிய மித்தார். எத்தகைய வாக்குரிமை முறையைக் கடைப்பிடிப்பது என் பதைப் பரிசீலித்து அதனை வகுத்தளிப்பதே அதன் பிரதான பணி யாகும். குழுவின் தலைவருக்கு பிரதமர் எழுதிய நெறி முறைகள் கடிதத்தில் பின்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்:

“பொறுப்பளிக்கப்படும் சட்டமன்றங்கள் பொதுமக்க  ளின் பிரதிநிதித்துவ அமைப்புகளாக இருக்க வேண்டும்;  சமுதாயத்தின் எந்த முக்கியமான பகுதியும் தனது தேவை  களையும் கருத்துக்களையும் வெளியிடுவதற்கு எத்தகைய  இடர்ப்பாடுகளும் இருக்கக்கூடாது”

குழு தனது பணியை 1932 ஜனவரி ஆரம்பத்தில் தொடங் கியது. குழு தனது பணியைத் திறம்பட ஆற்றுவதற்கு மாகாண அர சாங்கங்கள் மற்றும் மாகாண வாக்குரிமைக் குழுக்கள் ஆகியவற்றின் உதவியை நாடிப் பெற்றது. வாக்குரிமைப் பிரச்சினையை ஆராயும் பொருட்டு அதிகாரிகள் அல்லாதவர்களைக் கொண்டு ஒவ்வொரு மாகாணத்திலும் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டவையாகும் இந்தக் குழுக்கள். லோதியன் குழு பல வினாத்தாள்களை வெளியிட்டது. இவற்றுக்கு மாகாண அரசாங்கங்களும், மாகாண வாக்குரிமைக் குழுக்களும், தனி நபர்களும் பதிலளித்தனர். ஒவ்வொரு மாகாண வாக்குரிமைக் குழுவுடன் சேர்ந்து லோதியன் குழு பல சாட்சிகளை விசாரித்தது. மாகாண அரசாங்கங்களும் மாகாண வாக்குரிமைக் குழுக்களும் தமது அறிக்கைகளைத் தனித்தனியே சமர்ப்பித்தன. லோதியன் குழு இந்த அறிக்கைகளைப் பற்றித் தனது சொந்த முடிவுக்கு வருவதற்கு முன்னர், இவற்றைக் குறித்து ஒவ்வொரு மாகாண அரசாங்கத்துடனும் மாகாணழ் வாக்குரிமைக் குழுவுடனும் விவா தித்தது. லோதியன் குழுவிடம் சில பொதுவான பணிகளுடன் ஒரு விசேடப் பணியையும் பிரதமர் ஒப்படைத்திருந்தார். இது தீண்டப் படாதவர்களின் அரசியல் கோரிக்கைகள் சம்பந்தப்பட்டதாகும். குழுவின் தலைவருக்கு பிரதமர் எழுதியிருந்த நெறிமுறைகள் கடிதத் தில் இவ்விசேடப் பணியைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

“தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவத்துக்கு  புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் போதிய வழிவகை  ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பதும், நியமனத்தின்  மூலம் இத்தகைய பிரதிநிதித்துவத்துக்கு வகை செய்யும்  முறை இனியும் உகந்ததல்ல, உசிதமானதல்ல என்பதும்  மாநாட்டில் பல்வேறு விஷயங்கள் குறித்து நடைபெற்ற  விவாதத்தின்போது தெள்ளத்தெளிவாயிற்று. தனி வாக்  காளர் தொகுதி முறையை தாழ்த்தப்பட்ட வகுப்பினர்  விஷயத்தில் கடைப்பிடிப்பது குறித்து கருத்து வேறுபாடு நிலவுவது தங்களுக்குத் தெரியும். எனவே, உங்கள் குழுவின் ஆய்வுகள் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணுவதற்கு உதவும் வகையில் இருக்க வேண்டும்; மேலும்  உங்கள் பரிந்துரையின்படியான பொதுவாக்குரிமை விஸ்தரிப்பு மூலம் சாதாரண வாக்காளர் தொகுதிகளில்  தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வாக்களிக்கும் உரிமையை  எந்த அளவுக்குப் பெறுவார்கள் என்பதையும் உங்கள்  ஆய்வுகள் சுட்டிக்காட்டுவதாக இருக்க வேண்டும்.

அதே  சமயம் பொதுவாக எல்லா இடங்களிலுமோ அல்லது  மக்கட் தொகையில் நன்கு வரையறுக்கப்பட்ட, தனித்த,  வேறுபட்ட ஒரு சக்தியாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர்  உள்ள மாகாணங்களிலோ அவர்களுக்குத் தனி வாக்  காளர் தொகுதிகள் அமைப்பது என இறுதியாக முடிவு செய்யும்பட்சத்தில், அப்போது வாக்குரிமையை விஸ்த  ரிக்கும் பிரச்சினை பற்றி ஆராய்ந்து வரும் உங்கள் குழு  தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தனிப் பிரதிநிதித்துவம்  வழங்கும் முறையை வகுப்பதற்கு உதவக் கூடிய தகவல்  களைத் தயாரித்தளிக்க வேண்டும்”.

இந்த ஆணைகளைத் தொடர்ந்து, பிரிட்டிஸ் இந்தியாவில் உள்ள தீண்டப்படாதவர்களின் மக்கட் தொகை என்ன என்பது குறித்து ஒரு முடிவுக்கு வரும் பணி லோதியன் குழுவுக்கு ஏற்பட்டது.

தீண்டப்படாதவர்களின் எண்ணிக்கை என்ன என்ற கேள்விக்கு அளிக்கப்பட்ட விதம் விதமான, வேறுவேறான, முரண்பட்ட பதில் கள் எவரையும் மலைக்க வைக்கவே செய்யும், தடுமாற்றம் கொள்ளவே செய்யும். சில பிரகிருதிகள் லோதியன் குழுவின் முன் சாட் சியம் அளிக்கும்போது, தங்கள் மாகாணத்தின் தீண்டப்படாதவர்களின் எண்ணிக்கை மிக மிகச் சொற்பம் என்று சாதித்தனர். வேறுசில புண்ணியவான்களோ இன்னும் ஒருபடி மேலே சென்று தங்கள் மாகா ணத்தில் தீண்டப்படாதவர்களே இல்லை என்று முழுப் பூசணிக் காயையும் சோற்றில் மறைக்கப் பார்த்தனர்! அதிலும் சில இந்துக்கள் லோதியன் குழுவின் முன் தோன்றி தீண்டப்படாதவர்கள் என்பவர் களே இல்லை என்று பொய்ச் சாட்சியம் அளித்தது மிகவும் அசா தாரணமாக காட்சியாக இருந்தது; வேறு சிலர் தீண்டப்படாதவர் களின் எண்ணிக்கையை மிக மிகக் குறைத்துக் கூறினர்.

மாகாண வாக்குரிமைக் குழுவின் உறுப்பினர்களும் இந்தச் சூழ்ச்சித் திட்டத் திற்கு உடந்தையாக இருந்தனர். அதிலும் லோதியன் குழுவிலுள்ள சில இந்து உறுப்பினர்கள் இந்த சூதாட்டத்தில் பங்குதாரர்களாக இருந்தது இன்னும் வியப்பிலும் வியப்பானதாகும். தீண்டப்படாத வர்கள் என்பவர்களே இல்லை என்று மறுக்கும் அல்லது அவர் களது எண்ணிக்கையை மிக மிக அற்பமாகக் கணிக்கும் இந்த விபரீதப் போக்கு சில மாகாணங்களில் பெரிதும் தலைதூக்கியிருந்தது.

உண்மையை எந்த அளவுக்கு அடியோடு மூடிமறைக்க இந்துக்கள் தயாராக இருந்தனர் என்பதைப் பின்கண்ட புள்ளிவிவரங்களிலிருந்து தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம் ஐக்கிய மாகாணங்களில் 1931ல் தீண்டப்படாதவர்களில் மொத்த எண்ணிக்கை 1 கோடி 26 லட்சம் என்று குடிமதிப்புப் புள்ளிவிவர ஆணையர் மதிப்பிட்டிருந்தார்; மாகாண அரசாங்கம் இந்த எண்ணிக்கை 68 லட்சம் என்று மதிப் பிட்டிருந்தது; ஆனால் மாகாண வாக்குரிமைக் குழுவோ வெறும் 6 லட்சம்தான் என்று முயலுக்கு மூன்றே கால் என்று ஒரேயடியாக சாதித்தது! வங்காளத்தில் தீண்டப்படாதவர்கள் எண்ணிக்கை 1 கோடி 3 லட்சம் என்று சென்சஸ் கூறிற்று; மாகாண அரசாங்கம் இதனை 1 கோடி 12 லட்சம் என்று நிர்ணயித்தது; ஆனால் மாகாண வாக்குரிமை குழுவோ வெறும் 70 ஆயிரம்தான் என்று உடும்புப் பிடியாக சாதித்தது!

வட்டமேசை மாநாடு நடைபெறுவதற்கு முன்னர் தீண்டப் படாதவர்களின் துல்லியமான எண்ணிக்கை குறித்து எந்த இந்துவும் கவலைப்படவில்லை; தீண்டப்படாதவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 7 கோடி முதல் 8 கோடி இருக்கும் என்று சென்சஸ் ஆணையர் வெளியிட்டிருந்த மதிப்பீட்டை அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்யைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டபோது, இந்துக்கள் தீடீ ரென்று இந்த மதிப்பீட்டை ஏன் எதிர்க்க வேண்டும்? இதற்காக பதில் மிகத் தெளிவானது. லோதியன் குழு அமைக்கப்படுவதற்கு முன்னர் தீண்டப்படாதவர்களின் எண்ணிக்கை குறித்த விஷயம் அத்தனை முக்கியத்துவமற்றதாக இருந்ததது; மதிப்பில்லாததாக இருந்தது. ஆனால் வட்டமேசை மாநாட்டிற்குப் பிறகுதான் அவர்களுக்கு உண்மை தெரியவந்தது; தீண்டப்படாதவர்கள் தங்களுக்குத் தனிப் பிரதிநிதித்துவம் கோருகிறார்கள் என்பதையும், இதுவரை தாங்கள் அனுபவித்து வந்த பங்கிலிருந்துதான் இது தரப்பட வேண்டியிருக்கும் என்பதையும், அவர்கள் கோரும் பங்கின் அளவு தீண்டப்படாதவர் களின் எண்ணிக்கையையே பொறுத்திருக்கும் என்பதையும் அவர்கள் தெரிந்து கொண்டார்கள். இத்தகைய நிலைமையில். தீண்டப்படாத வர்கள் என்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்வது

தங்களது நலன்களுக்கு ஊறு விளைவிக்கும் என்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். இச்சூழ்நிலையில், உண்மையையும் தகைமையையும் பண்பையும் பலியிட அவர்கள் சற்றும் தயங்க வில்லை; இந்தியாவில் தீண்டப்படாதவர்கள் என்பவர்கள் யாருமே இல்லை என்ற மிகவும் பாதுகாப்பான வழிமுறையைப் பின்பற்றத் தீர்மானித்தார்கள்; இதன் மூலம் தீண்டப்படாதவர்களது அரசியல் கோரிக்கைகளின் அடித்தளத்தையே தகர்த்துவிடலாம் என்றும், எத தகைய வாதப் பிரதிநிதித்துக்கும் இடமில்லாமல் செய்துவிடலாம் என்றும் கருதினார்கள். முற்றிலும் சுயநல நோக்கங்களுக்காக தீண்டப் படாதவர்களுக்கு எதிராக இந்துக்கள் எவ்விதம் பச்சையாக, பட்ட வர்த்தனமாக, திட்டமிட்ட முறையில் சதித்திட்டம் தீட்டுகிறார்கள் என்பதையும், நேரடியாக செய்ய முடியாததை மறைமுகமாக செய்ய அவர்கள் எத்தகைய கீழ்த்தரமான செயலில் இறங்குகிறார்கள் என் பதையும் இதிலிருந்து தெள்ளத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

VII

போகட்டும், இனி விட்ட இடத்திலிருந்து தொடர்கிறேன். வட்டமேசை மாநாட்டில் திரு. காந்தியைக் குறைகூறி விமர்சித்த வர்களே அதிகம் பேர். பக்தர்கள் எவரும் அவருக்கு அங்கு இல்லை. இவ்வாறாக இந்த மாநாடு பற்றிப் பலவிதத்திலும் வெறுப்பும் அதிருப்தியும் அடைந்த திரு. காந்திதான் இந்தியாவுக்குத் திரும்பிய முதல் நபராவார். இந்தியாவுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த போது, ரோமாபுரியில் ஒரு பத்திரிகை நிருபருக்கு ஒரு பேட்டி அளித் தார். சட்ட மறுப்பு இயக்கத்தை மீண்டும் தொடங்கப் போதவதாக அந்தப் பேட்டியில் மிரட்டியிருந்தார். எனவே, இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்ததும் அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப் பட்டார். சிறையில் அவரது மனம் சுயராஜ்யத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை; தீண்டப்படாதவர்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தது; தீண்டப்படாதவர்களுக்கு தனிப் பிரதிநிதித்துவ உரிமை அளிக்கப்படுமாயின் ‘என் உயிரைக் கொடுத்தேனும் அதனை எதிர்ப்பேன்’ என்று அச்சுறுத்தியிருந்த போதி லும், வட்டமேசை மாநாட்டில் தீண்டப் படாதவர்கள் சார்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை பிரதமர் மத்தியஸ்தர் என்ற முறையில் எங்கே ஏற்றுக் கொண்டு விடுவாரோ என்று திரு. காந்தி அஞ்சினார். ஆகவே, பிரதமர் எந்த முடிவையும் அறிவிப்பதற்கு முன்னர், அப்போது இந்தியா மந்திரியாக இருந்த சர் சாமுவேல் ஹோருக்கு 1932 மார்ச் 11 ஆம் தேதி சிறையிலிருந்தபடியே ஒரு கடிதம் எழுதினார். தீண்டப்படாதவர்களின் கோரிக்கையை தாம் வன்மையாக எதிர்ப்பதாக அதில் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடி தத்தின் வாசகம் வருமாறு:

அன்புள்ள சர். சாமுவல் அவர்களுக்கு.

“இரண்டாவாது வட்டமேசை மாநாட்டில் சிறுபான்மையினரின் கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது நான்  நிகழ்த்திய உரையின் இறுதியில், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குத் தனித்தொகுதி உரிமை அளிக்கப்படுமானால்  என் உயிரைக் கொடுத்தேனும் அதனை எதிர்ப்பேன்  என்று நான் கூறியது உங்களுக்கு நினைவிருக்கலாம். இது  மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் ஏதோ உணர்ச்சிவசப்  பட்டுக் கூறியதல்ல. மாறாக, இது ஆழ்ந்த அர்த்தபாவ  மிக்க கூற்றாகும், கருத்தாகும். இந்தியாவுக்குத் திரும்பியதும் இந்தக் கருத்தை அனுசரித்து, அடியொட்டி, தனித்  தொகுதி யோசனைக்கு, அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குத் தனித்தொகுதி உரிமை அளிக்கும்  திட்டத்திற்கு எதிராக பொதுமக்களின் கருத்தைத் திரட்ட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் நான்  இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்ததும் சிறை  வைக்கப்பட்டதால் இந்த எண்ணம் நிறைவேறவில்லை.

“நான் சிறையில் படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருக்  கும் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கும் செய்திகளிலிருந்து  மன்னர் பிரான் அரசாங்கம் எந்தக் கணத்திலும் தனது  முடிவை அறிவிக்கலாம் என்பதைத் தெரிந்து கொண்  டேன். தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குத் தனித் தொகுதி  களைத் தோற்றுவிப்பது இந்த முடிவின் நோக்கம் என்றால்,  எனது சூளுரையைக் செயல்படுத்துவதற்குத் தேவையான  நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று  தான் முதலில் நினைத்தேன். ஆனால் பிரிட்டிஷ் அரசுக்கு  இதுபற்றி முன்கூட்டியே தெரிவிக்காமல் நடவடிக்கை  எடுப்பது நியாயமல்ல, உசிதமல்ல என்று கருதுகிறேன்.  என் கருத்துக்கு நான் அளிக்கும் முக்கியத்துவத்தை அவர்  கள் அளிக்க மாட்டார்கள் என்பது இயல்பே.”

“தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தனித் தொகுதிகள்  உருவாக்கப்படுவதற்கு நான் காட்டிவந்த கடுமையான  எதிர்ப்பையும், தெரிவித்து வந்த எல்லா ஆட்சேபங்களையும் இங்கு மீண்டும் உறுதிப்படுத்த வேண்டிய அவசிய  மில்லை. என்னை அவர்களில் ஒருவனாக நான் கருது  கிறேன். அவர்கள் விஷயம் மற்றவர்களின் விஷயத்தி  லிருந்து முற்றிலும் மாறுபட்டது. சட்டமன்றங்களில் அவர்  கள் பிரதிநிதித்துவம் பெறுவதை நான் எதிர்க்கவில்லை.  மாறாக, பிறர் விஷயத்தில் தேர்தல் விதிகள் கடுமையாக  இருந்தாலும், கல்வித்தகுதி, சொத்துரிமை முதலிய எந்தப் பாகுபாடுமின்றி, இவர்களில் வயதுவந்த ஆண், பெண் அனைவரும் வாக்காளர்களாகப் பதிவுசெய்து கொள்ளப்  படுவதை நான் உறுதியாக ஆதரிக்கிறேன், அவாவுகிறேன்.  ஆனால் எந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தாலும்,  முற்றிலும் அரசியல் நோக்கிலிருந்து பார்த்தாலும் தனித்  தொகுதி முறை அவர்களுக்கும், இந்து சமயத்திற்கும் தீங்கு  விளைவிக்கக் கூடியது, கேடு பயப்பது என்று கருதுகிறேன்.  தனித் தொகுதிகளினால் அவர்களுக்கும், இந்து சமயத்திற்கும் தீங்கு  இன்னல் இடுக்கண்களை, துன்ப துயரங்களைப் புரிந்து  கொள்வதற்கு, மதிப்பிடுவதற்கு சாதி இந்துக்கள் எனப்படுவோரிடையே அவர்கள் எவ்வாறு பரவியிருக்கிறார்  கள், எவ்விதம் அவர்கள் சார்ந்திருக்கிறார்கள் என்  பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இது இப்படியென்  றால் இந்து சமயத்தைப் பொறுத்த வரையில் தனித் தொகுதி  முறை அதனை உடைத்துத் தகர்த்துக் கூறு போட்டுவிடும்.  ”எனக்கு இந்த வகுப்பானரின் பிரச்சினை பிரதானமாக  தார்மிக சார்புடையது, சமயத் தொடர்புடையது. இதன்  அரசியல் முக்கியத்துவம் முக்கியமானதே என்றாலும்  தார்மிக, சமயப் பிரச்சினையுடன் ஒப்பிடும் போது அந்த  முக்கியத்துவம் ஒடுங்கி, சுருங்கி குன்றிவிடுகிறது.

“இந்த விஷயத்தில் என் உணர்வுகளை நீங்கள் மதிப்  பிட வேண்டும்; சிறு வயது முதலே இந்த வகுப்பாரின்  நலனின் நான் எவ்வாறு ஆழ்ந்த அக்கறை காட்டி வந்திருக்  கிறேன், எனக்குள்ள அனைத்தையும் எவ்விதம் பணயம்  வைத்து வந்துள்ளேன் என்பதை நீங்கள் மனத்தில் கொள்ள வேண்டும். எவ்வகையிலும் என்னைப் பெருமைப்படுத்திக் கொள்ள இதைச் சொல்லவில்லை. திட்டமிட்டு நூற்  றாண்டுகள் காலமாகத் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு  இழைக்கப்பட்டு வந்த கொடுமைகளுக்கு, இழிவுகளுக்கு,  அவமதிப்புகளுக்கு இந்துக்கள் என்னதான் பிராயச்சித்தம் செய்தாலும், கழுவாய் தேடினாலும் அதனை ஈடுகட்ட  முடியாது என்பதை உணர்கிறேன்.

“ஆனால் இம்மக்கள் கசக்கிப் பிழியப்பட்டு, அடக்கப்  பட்டு, ஒடுக்கப்பட்டு, அல்லல்பட்டு ஆற்றாதுவிடும்  கண்ணீருக்குத் தனித் தொகுதிமுறை ஒரு பரிகாரமாகவோ,  நோய் தீர்க்கும் மருந்தாகவோ இருக்க முடியும் என்பதை  அறிவேன். எனவே, தாழ்த்தப்பட்ட இனத்தாருக்குத் தனித்  தொகுதிகள் அமைப்பதென அரசு முடிவு செய்யும் பட்சத்  தில் அதனை எதிர்த்து நான் சாகும்வரை உண்ணாவிரதம்  இருப்பேன் என்பதை மன்னர் பிரான் அரசாங்கத்துக்குப்  பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

“நான் சிறைக் கைதியாக இருக்கும்போது இத்தகைய  ஒரு நடவடிக்கையை மேற்கொள்வது மன்னர் பிரான்  அரசாங்கத்துக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதை வேதனையோடு உணர்கிறேன்; அது மட்டுமல்ல,  மிக மோசமானவை என்று இல்லாவிட்டாலும், பெரிதும் உணர்ச்சிவயப்பட்டவை என்று அநேகரால் கருதப்படக்  கூடிய முறைகளை என் போன்ற நிலையில் உள்ளவன்  இவ்வாறு அரசியல் துறையில் அறிமுகம் செய்வது முற்றி  லும் நேர்மையற்ற செயல் என்று பலர் எண்ணக்கூடும்  என்பதையும் நான் மனத்துயரோடு அறிந்தே இருக்  கிறேன். இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு நான் அளிக்கக் கூடியபதிலெல்லாம், எனது நிலைக்கு ஆதரவாக நான்  கூற விரும்புவதெல்லாம் இதுதான்: என்னைப் பொறுத்த  வரையில் உத்தேசிக்கப்பட்டுள்ள நடவடிக்கை, ஒரு முறைமை அல்ல, மாறாக அது என்னுள் ஒரு பகுதி யாகும். உயிருக்கு உயிராகும், மூச்சில் மூச்சாகும். மனச்  சான்றின் அறைகூவலை, கட்டளையை என்னால் புறக்  கணிக்க முடியாது, உதறித்தள்ள முடியாது; நேர்மையானவன் என்று நான் பெற்றுள்ள புகழுக்குப் பங்கம்  ஏற்படுவதாக இருந்தாலும் மனச்சான்றை என்னால் அலட் சியம் செய்ய இயலாது. இப்போதுள்ள நிலைமையில், நான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டாலும், உண்ணாவிரதம் இருக்கும் என் கடமையின் முக்கியத்  துவத்தை அது எவ்வகையிலும் குறைத்துவிடாது; உண்ணா  விரதத்தைத் தவிர்க்கக் கூடியதாக ஆக்கிவிடாது. எனினும்  எனது இந்த அச்சங்கள் எல்லாம் முற்றிலும் ஆதாரமற்றறவை என்றும், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தனித்  தொகுதிகளை உருவாக்கும் உத்தேசம் ஏதும் பிரிட்டிஷ்  அரசாங்கத்துக்கு இல்லை என்றும் நம்பவே விரும்பு கிறேன்.”

இந்தியா மந்திரி பின்கண்ட பதிலை திரு. காந்திக்கு  அனுப்பினார்:

இந்தியா அலுவலகம், ஒயிட்ஹால்

 ஏப்ரல் 13, 1932

அன்புள்ள திரு. காந்தி அவர்களுக்கு.

”மார்ச் 11 ஆம் தேதியிட்ட உங்களின் கடிதத்துக்குப் பதி  லளிக்கும் வகையில் இதனை எழுதுகிறேன். தாழ்த்தப்  பட்ட வகுப்பினருக்குத் தனித்தொகுதிகள் ஏற்படுத்தும்  பிரச்சினையில் உங்கள் உணர்வுகளை நான் முற்றிலு  மாகப் புரிந்துகொண்டேன். எந்த ஒரு விஷயமாயினும் முற்றிலும் அதன் தகுதிகளின் அடிப்படையில் மட்டுமே  எத்தகைய முடிவும் மேற்கொள்ள நாங்கள் உத்தேசித்  திருக்கிறோம் என்பதைச் சொல்லிக் கொள்ளா விரும்பு  கிறேன். லோதியன் பிரவுவின் தலைமையின் அமைக்கப்  பட்டிருக்கும் குழு இன்னமும் தனது சுற்றுப்பயணத்தைப்  பூர்த்தி செய்யவில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.  அது எடுக்கும் முடிவுகள் எங்களிடம் வந்து சேருவதற்கு  மேலும் சில வாரங்கள் ஆகும். குழுவின் அறிக்கை எங்க  ளுக்கு வந்து சேர்ந்ததும் அதன் பரிந்துரைகளை நாங்கள்  மிகக் கவனமாகப் பரிசீலிப்போம்; குழு தெரிவிக்கும்  கருத்துகளையும், அத்தோடு நீங்களும் உங்களைப் போன்  றோரும் ஆழமாகவும் மனத்திற் பதியும்படியாகவும்  கூறியிருக்கும் அபிப்பிராயங்களையும் கணக்கிலெடுத்துக்  கொள்ளாமல் எந்த முடிவையும் எடுக்க மாட்டோம்.  நீங்கள் எங்கள் நிலையில் இருந்தால் நாங்கள் எடுக்க நினைக்கும் அதே நடவடிக்கையைத்தான் நீங்களும்  எடுப்பீர்கள் என்பதில் எனக்கு எத்தகைய ஐயப்பாடும்  இல்லை. குழுவின் அறிக்கை வரட்டும். அதனை நீங்கள் கருத்தூன்றி, ஆழமாக, முற்றிலுமாகப் பரிசீலனை செய்  யுங்கள். இது சம்பந்தமாக நீங்கள் ஓர் இறுதி முடிவுக்கு வருவதற்கு முன்னர், இந்த சர்ச்சைக்குரிய பிரச்சினை  குறித்து இரு தரப்புகளும் தெரிவித்திருக்கும் கருத்துக்  களை நீங்கள் கணக்கிலெடுத்துக் கொள்வது அவசியம்.  இதற்கு மேல் நான் எதுவும் சொல்லுவதற்கில்லை. மேலும்  அதிகமாக கூற வேண்டுமென்று நீங்கள் எதிர்ப்பார்ப்பீர்கள்  என்று நானும் நினைக்கவில்லை.”

திரு. காந்தி இந்த எச்சரிக்கையை விடுத்த பிறகு விஷ  யத்தைச் சற்று ஆறப்போட்டார்; சாகும்வரை உண்ணா  விரதம் இருக்கப் போவதாக மீண்டும் தாம் அச்சுறுத்தி  இருப்பது பிரிட்டிஷ் அரசாங்கத்தை நிலைகுலையச்  செய்வதுவிடும் என்றும், தீண்டாதார்களுக்குத் தனிப்பிரதி  நிதித்துவம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை  அவர்கள் ஏற்றுக்கொள்ளாதபடி தடுத்து விடும் என்றும்  அவர் எண்ணினார். அதற்கு மாறாக, 1932 ஆகஸ்டு 17  ஆம் தேதி வகுப்புத் தீர்ப்பின் விவரங்கள் அறிவிக்கப்  பட்டன. அந்தத் தீர்ப்பில் தீண்டப்படாதவர்கள் சம்பந்தப்  பட்ட பகுதி கீழே தரப்படுகிறது.

 மாட்சிமை தங்கிய மன்னர்பிரான் அரசாங்கம் வழங்கிய வகுப்புத் தீர்ப்பு 1932

வட்டமேசை மாநாட்டின் இரண்டாவது கூட்டத்  தொடரின் இறுதியில் மாட்சிமை தங்கிய மன்னர்பிரான்  அரசின் சார்பில் கடந்த டிசம்பர் முதல் தேதியன்று பிரதமர்  அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கை உட  னடியாக நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. வகுப்புப் பிரச்சினைகள் குறித்து  அனைத்துக் கட்சிகளுக்கும் ஏற்புடையதான ஓர் உடன்  பாட்டைக் காண மாநாடு தவறிவிட்டது; இதன் காரண  மாக இந்தியாவின் அரசியல் சட்ட முன்னேற்றம் எவ்வகையிலும் தடைப்படக்கூடாது என்பதிலும் பிரச்சினையை  நுணுகி ஆராய்ந்து, ஓர் இடைக்காலத் திட்டத்தை வகுத்து, இத்தடையை அகற்ற வேண்டும் என்பதிலும் மாட்சிமை  தங்கிய மன்னர்பிரான் அரசாங்கம் உறுதி கொண்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

2. இந்தியாவின் பல்வேறு சமூகத்தினர் இப்பிரச்  சினையில் ஓர் உடன்பாடுக்கு வர தொடர்ந்து தவறி  வருவதால், ஒரு புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் திட்டங்களின் முன்னேற்றம் பெரிதும் தடை  படுகிறது என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மிகவும்  சிக்கலான, கடினமான, பெரும் சர்ச்சைக்குரிய இப்பிரச்  சினையைத் தாங்கள் மீண்டும் மிகக் கவனமாகப் பரிசீ  லித்து ஆராய்ந்து வருவதாக கடந்த மார்ச் 13 ஆம் தேதி  அன்று மன்னர் பிரான் அரசாங்கம் அறிவித்தது. புதிய  அரசியலைப்புச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையினரின்  நிலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் குறைந்தபட்சம்  சில அம்சங்களைப் பற்றியாவது ஒரு முடிவுக்கு வர  வில்லை என்றால் அரசியலமைப்புச் சட்டத்தை வகுக்  கும் பணியில் மேற்கொண்டு முன்னேற முடியாது என்பதை  அரசாங்கம் இப்போது நன்கு உணர்ந்துள்ளது.

3.இதன்படி, கீழே தெரிவிக்கப்பட்டிருக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான வழிவகை ஏற்பாடுகளை  இந்திய அரசியலமைப்புச் சட்டம் சம்பந்தமாக விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் பிரே  ரணைகளில் சேர்ப்பது என மன்னர் பிரான் அரசாங்கம்  முடிவு செய்துள்ளது. அரசியலமைப்புச் சட்டம் வகுக்கப்  படும் காலத்தில் சிறுபான்மையினருக்கு மிகுந்த முக்கியத்  துவம் வாய்ந்த இதர ஏராளமான பிரச்சினைகள் குறித்து  முடிவெடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்பதை  அரசு உணரத் தவறவில்லை என்பதனையே இத்திட்டத்தை வரையறைக்குட்படுத்தும் முடிவு குறிக்கிறது.  மேலும், பிரதிநிதித்துவத்தின் வழிமுறை, விகிதாசாரங்கள் போன்றவற்றை அறிவித்துவிட்டால், இன்னமும்  பரிசீலிக்கப்படாத இதர வகுப்புப் பிரச்சினைகளுக்குச் சம்பந்தப்பட்ட சமூகத்தினரே ஒரு சமரச முடிவு காண்பது  சாத்தியமாகும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே  இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

4.மன்னர்பிரான் அரசு பின்கண்டவற்றை மிகவும்  தெளிவுபடுத்த விரும்புகிறது; தான் எடுத்த முடிவைத்  திருத்தும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் எந்தப் பேச்சுவார்த்தைகளிலும் அது தானாகவே முன்வந்து  கலந்து கொள்ளாது; சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பி  னரின் ஆதரவைப் பெறாமல் இந்த முடிவை மாற்றுவதற்கு  வைக்கப்படும் எந்த கோரிக்கையையும் அது பரிசீலிக்  காது. ஆனால் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும்  ஓர் உடன்பாட்டை அது மகிழ்ச்சியோடு வரவேற்கும்;  இத்தகைய முயற்சிக்கு அது எவ்வகையிலும் தனது கதவு  களை மூடாது; எனவே, ஒரு புதிய இந்திய அரசாங்க  மசோதா சட்டமாக்கப்படுவதற்கு முன்னர், கவர்னர்  களது ஆளுகையின் கீழ் உள்ள ஒன்று அல்லது அதற்கு  மேற்பட்ட மாகாணங்கள் குறித்தோ, அல்லது பிரிட்டிஷ்  இந்தியா முழுவதும் குறித்தோ, நடைமுறை சாத்தியமான  ஒரு மாற்றுத் திட்டத்தை சம்பந்தப்பட்ட சமூகத்தினர்  ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று மன்னர் பிரான் அரசு மன  நிறைவு அடையும் பட்சத்தில், தற்போது அறிவிக்கப்  பட்டிருக்கும் திட்டத்திற்குப் பதிலாக இந்த மாற்றுத்  திட்டத்தை ஏற்குபடி நாடாளுமன்றத்திற்குப் பரிந்துரை  செய்ய அது தயாராக உள்ளது.

 5 * * * * *

 6 * * * * *

 7 * * * * *

 8 * * * * *

9. வாக்களிக்கத் தகுதிபெற்ற “தாழ்த்தப்பட்ட வகுப்  பினர்” ஒரு பொதுத் தொகுதியில் வாக்களிப்பர். இந்த  வகுப்பினர் இந்த முறையால் மட்டும் சட்டமன்றத்தில்  பிரதிநிதித்துவம் பெறுவது சாத்தியமில்லை என்பதால்,  அட்டவணையில் காட்டியுள்ளபடி அநேகத் தனி இடங்  கள் அவர்களுக்கு ஒதுக்கப்படும். தேர்தல் விதிமுறைப்  படி ‘தாழ்த்தப்பட்ட வகுப்பினர்’ மட்டுமே வாக்களிக்கும்  தனித் தொகுதிகளில் நடைபெறும் தேர்தல்கள் மூலம் இந்த இடங்கள் நிரப்பப்படும். மேலே குறிப்பிட்டுள்ள  வாறு, இத்தகைய ஒரு தனித் தொகுதியில் வாக்களிக்கும் ஒருவர் பொதுத் தொகுதியில் வாக்களிக்கவும் உரிமை  பெற்றிருக்கிறார். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மிகப்பெரும்  எண்ணிக்கையில் இருக்கும் குறிப்பிட்ட பகுதிகளில் இத்தொகுதிகள் அமைக்கப்படும்; ஆனால் சென்னையைத்  தவிர அவை மாகாணம் முழுமையும் உள்ளடகியவையாக இருக்க மாட்டா.

வங்காளத்தைப் பொறுத்தவரையில் சில பொதுத்  தொகுதியில் பெரும்பான்மையான வாக்காளர்கள்  தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் எனத் தோன்றுகிறது. எனவே, மேற்கொண்டு  ஆராய்ந்து முடிவு செய்யும்வரை அந்த மாகாணத்தில்  தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான தனித் தொகுதிகளி  லிருந்து எத்தனை பேர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்  என்பது இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. வங்காள சட்டமன்றத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 10க்கும்  குறையாமல் இடங்கள் பெறவேண்டும் என்று உத்தேசிக் கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாகாணத்திலும் தாழ்த்தப்பட்ட வகுப்  பினருக்கான தனித்தொகுதிகளில் வாக்களிக்க உரிமை  பெற்றவர்கள் யார் என்பது இன்னமும் திட்டவட்டமாக,  இறுதியாக முடிவு செய்யப்படவில்லை. வாக்குரிமைக்  குழு அறிக்கையில் பரிந்துறைக்கப்பட்டுள்ள பொதுக்  கோட்பாடுகளின் அடிப்படையில் இது பொதுவாகத் தீர்  மானிக்கப்படும். ஆனால் வட இந்தியாவில் சில மாகா  ணங்களில் தீண்டாமை குறித்த பொதுவிதியைப் பயன்படுத்துவது அங்குள்ள விசேட நிலைமைகளுக்கு பொருந்தாத வகையில் சில சந்தர்ப்பங்களில் பொருள் கொள்  வதில் போய் முடியக்கூடும்; எனவே இத்தகைய மாகாணத்தில் இது விஷயத்தில் மாற்றம் காண்பது அவசியமாக இருக்கக்கூடும்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இந்தத் தனித்  தொகுதிகள் குறிப்பிட்ட காலத்திற்கும் அதிகமாகத்  தேவைப்படும் என்று மன்னர் பிரான் அரசு கருதவில்லை.6 ஆவது பத்தியில் குறிப்பிடப்படிருக்கும் தேர்தல் திருத்தப் பொது அதிகாரங்களின்படி இந்தத் தொகுதிகள்  ஏற்கெனவே ஒழிக்கப்படாத பட்சத்தில், இவற்றை 20 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்குக் கொண்டு வருவதற்கு  அரசியல் அமைப்புச் சட்டத்தில் வகை செய்ய அரசு உத்தேசித்துள்ளது.

 ("தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன?" - தொகுதி 16, இயல் 3)

Pin It