நமது கவனம் ஒன்றின் மீது இருக்கும்போது நமது மூளை அதற்குக் கொடுக்கப்பட்ட வேலையில் மும்முரமாக ஈடுபடுகிறது.அதே நேரத்தில் வெளியிலிருந்து அதன் கவனத்தை ஈர்க்க சப்தங்களும் காட்சிகளும் போட்டி போடுகின்றன. மூளை இரண்டுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு தத்தளிக்கிறது. எது ஜெயிக்கும் என்பது ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது.

சிலர் மிக சுலபமாக கவனத்தை சிதறவிட்டு விடுகிறார்கள். சிலர் எத்தனை குறுக்கீடுகள் இருந்தாலும் அதை கருத்தில் கொள்ளாது வேலையிலேயே கவனமாக இருக்கிறார்கள். ஓரிகான் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஓகல் என்பவர் 84 மாணவர்களை வைத்து சோதனை மேற்கொண்டார். மூளையின் பிரிஃப்ரான்ட்டல் கார்ட்டெக்ஸ் பகுதியில் கூர்மையான கவனத்தின்போது செயல்படுவதை கவனிக்கிறார். சிலரிடம் அதன் செயல் போதிய அளவு இல்லாதிருப்பதையும், அவர்களால் அதிக நேரம் கவனம் வைக்க திண்டாடுவதையும் பார்க்கிறார்.

கவனத்தை அளக்க கம்ப்யூட்டர் திரையில் படம் போட்டுக் காட்டுகிறார். அரைகுறையாக உள்ள படத்தை கவனமாகப் பார்த்தால்தான் அடையாளம் தெரிந்துகொள்ள முடியும். இடையே திரையில் கவனத்தைச் சிதைக்கும் வேறு படங்களை வைக்கும்போது சிலரால் சரியாக அடையாளம் காணமுடியவில்லை.

நம் மூளையில் கம்ப்யூட்டரின் ரேம் நினைவு போல செயல்படும் பகுதியிருக்கிறது. அதன் நினைவு அளவு அதிகம் உள்ளவர்களால் கவனம் சிதறாமல் இருக்க முடிகிறது என்பது அவரது விளக்கம்.

-முனைவர் க.மணி(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It