அன்டிரியஸ் வெசலியஸ் (Andreas Vesalius) (1514-64) என்பவர் தாம் தற்கால உடலுறுப்பியல் (Modern anatomy) பற்றி அடிக்கல் இட்டு ஆய்வு தொடங்கியவர். மருத்துவக் குடும்பத்தில் பிரஸ்ஸலில் (Brussels) பிறந்தவரானார். ஐரோப்பாவிலுள்ள மிகப் பெரிய மருத்துவ மையங்களுள் ஒன்றான இத்தாலியில் (Italy) உள்ள பதுஆ (Padua) வில் தன் 23 ஆம் வயதில் உடலுறுப்பியல் பேராசிரியரானார்.

vesalius_andreasஅன்டிரியஸ் வெசலியஸ் தன் பணித் தொடக்கத்தில் பழைய கிரேக்க மருந்தியல் மருத்துவர் கேலன் (Galen) எழுத்துக்களின் செல்வாக்குக்குட்பட்டார். கேலனுடைய கற்பிப்பியலின் வழியே உடலுறுப்பியல் கலைச் சொற்களின் வடிவத்தையும் பொருளையும் தரப்படுத்தி 1538-ஆம் ஆண்டில் அவர் ஆறு உடலுறுப்பியல் பட்டியல்களை வெளியிட்டார். அதன் பிறகு கேலன் (Galen) கொள்கைகளில் சிலவற்றின் மீது ஐயப்பாடு தோன்றிற்று.

1543-ஆம் ஆண்டில் வெசலியஸ் மனித உடலின் அமைப்புப் பற்றிய மிக முக்கியமான நூலான டி யுமானி கார்போரிஸ் வெப்ரிகா (De Humani Corporis Fabrica) என்பதனை வெளியிட்டார். உயிரியல் ஓர் அறிவியலாக வளர்வதற்கான முன்னறிவிப்பைத் தெரிவித்த இந்த நூல், தசைகளின் பிரிவுகளுக்கான டைட்டியனின் (titian) மாணவர் ஜோன் ஸ்டீபன் வேன்கால்கார் (Jan Stephen van calcar) என்பவரால் வரையப்பட்ட வரைபடங்களைக் கொண்டுள்ளது. இந்த நூல், நேரே அறுக்கப்பட்டுக் கூர்ந்து நேரே பார்க்கப்பட்டு அறிந்தவற்றையே, அடிப்படையாக வைத்துக் கொண்டது. பெரும்பாலான செய்திகளில் பல நூற்றாண்டுகளாக பரம்பரையாகச் சொல்லப்பட்டு வந்த நோக்குகளுக்கு முரணாக இவர் விளக்கங்கள் இருந்தன.

வெசலியஸ் ஸ்பெயின் நாட்டு மாமன்னர் ஐந்தாம் சார்லஸுக்கும் (Emperor Charles v) அவர் மகன் அரசர் இரண்டாம் பிலிப்புக்கும் (King Philip II) அரண்மனை மருந்தியல் நிபுணராக இருந்தார். மனித உடலைக் கூறு கூறாக்கிப் பகுத்தாய்வதற்காக (dissections) உடல்களை வலிந்து பற்றிக் கேள்விமுறைத் தேர்வு ஆய்வு செய்ததால் அவருடைய புகழ். அவருடைய உயிரைக் காப்பாற்ற முடியாமல் பழிக்கப்பட்டுக் கொல்லுமாறு ஆணைக்குட்படுத்தியது. ஆயினும் அந்த ஆணை விலக்கப்பட்டு அவர் ஜெருசலத்திற்கு யாத்திரை போக வேண்டும் என மாற்றாணை பிறப்பிக்கப்பட்டது. அங்கிருந்து திரும்பும் வழியில் அவர் இறந்துவிட்டார்.

Pin It