ஜார்ஜ் வாஷிங்டனின் பல் மருத்துவர் ஜான் கிரீன்வுட் (John Greenwood) என்பவரால் பற்களில் துளையிடும் இயக்கு விசைக்கருவி முதன் முதலில் செய்யப்பட்டது. அவருடைய கருவியைச் சுழலச்செய்ய அவருடைய தாயின் நூற்கும் சக்கரமும் மிதிப் பொறியும் கொண்ட இயந்திரத்தை மாற்றி அதற்குத் தக அமைத்துக் கொண்டார்.

முந்தைய பல் மருத்துவர்கள் வில்நாண்களால் துளையிடு கருவியை இயக்கினர். அதற்கு உடல்தெம்பு, மனஉறுதி, நுட்பத்திறன் வாய்ந்த மருத்துவராய் இருப்பதுடன் நோயாளியின் மிகு மன உரமும் வேண்டும். அதன்பின் பக்கவாட்டிலுள்ள கைப்பிடியைத் திருப்புவதன் மூலம் துளையிடு கருவியை இயங்கச் செய்தனர்.

திறத்தை மிகுதிப்படுத்துவதற்காக 1829இல் ஆவிச்சுத்தியைக் (Steam hammer) கண்டுபிடித்த ஸ்காட் நாட்டினர் ஜேம்ஸ் நாஸ்மித் (James Nasmyth) என்பவர் சுழல்முறைப் பொறிக்கான சக்தியைப் பயன்படுத்தினார். 1958இல் நெகிழ்வுடைய கம்பி கொண்ட வடத்தைக் கொண்ட கையால் இயக்கப்படும் தனிக்காப்புரிமை பெற்ற துளைக் கருவியைச் சார்லஸ் மெர்ரி (Charless Merry) என்ற அமெரிக்கப் பல்மருத்துவர் கண்டுபிடித்தார். 1964இல் ஆங்கிலேயர் ஜார்ஜ் ஹோரிங்டன் (George Harrington) என்பவர் தானாகவே ஒழுங்குபட இயங்குகின்ற விசைப்பொறி (Clockwork motor)யால் பல்துளையிடும் கருவியை முதலாவதாக உருவமைத்தார்.

Pin It