மக்கள் தொகை அதிகரித்தால்

வேலையின்மை, உணவு பற்றாக்குறை, சுத்தமான குடிநீர் தட்டுப்பாடு, சுற்றுச்சூழல் சீர் கேடு, காடுகள் அழிப்பு போன்றவற்றால் ஏற்படும் வாழ்க்கைச் சீர்கேடுகள் அதிகரிக்கும். இதன் விளைவான நோய், வறுமை, எழுத்தறிவின்மை, அறிவின்மை போன்றவை மக்களை தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயே வைத்திருக்கும்.

உலக மக்கள் தொகை தினம்

1987 ஜூலை 11 ஆம் தேதி உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியது. இந்த நினைவைப் போற்றும் விதத்தில் எல்லா வருடமும் ஜூலை மாதம் 11 ஆம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கிறது ஐ.நா.சபை. 1987 ஜூலை 11 இல் குரோஷியாவில் பிறந்த மதேஜ் காஸ்பர் எனும் குழந்தையே உலக மக்கள் தொகையை 500 கோடியாக்கிய குழந்தையாக கருதப்படுகிறது. இன்றைய நிலையில் உலக மக்கள் தொகை 660 கோடியைத் தாண்டிவிட்டது.

பிறப்பு விகிதம் அதிகமுள்ள நாடுகள்:

1.நைஜர் : 50.73% 

2.மாலி : 49.82% 

3.உகாண்டா : 47.35% 

4.ஆப்கானிஸ்தான் : 46.60%.

பிறப்பு விகிதம் குறைந்த நாடுகள்:

ஐரோப்பா, வட அமெரிக்கா, முன்னாள் சோவியத் குடியரசு, ஒஷ்யானியா.

இறப்பு விகிதம் அதிகமுள்ள நாடுகள்:

சாம்பியா, பேட்ஸ்வானா, லெஸோதோ, அங்கோலா, லைபீரியா.

(நன்றி : மனோரமா இயர்புக் 2008)

 

Pin It