தேவையான பொருட்கள்:
கோழிக்கறி - 400 கிராம் (கொத்திய கறி)
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - ஒரு தேக்கரண்டி
தயிர் - முக்கால் கப்
பாசுமதி அரிசி - 2 கப்
மல்லித்தூள் - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
கிராம்பு - 3
பட்டை - சிறிது
ஏலக்காய் - 3
பிரியாணி இலை - சிறிது
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் விழுது - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோழிக்கறியுடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து குறைந்தது அரை மணி நேரம் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து ஊற விட வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பட்டைத் துண்டினைப் போட்டு வதக்க வேண்டும்.
இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய் விழுது ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். ஊற வைத்துள்ள கோழிக்கறி துண்டுகளைச் சேர்த்து சில நிமிடங்கள் நன்கு வதக்க வேண்டும். அதன் பின் மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
சிறிது கரம் மசாலா, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அதனுடன் ஊறவைத்துள்ள பாசுமதி அரிசியை சேர்த்து மூடி வைத்து வேக விட வேண்டும். வெந்தவுடன் இறக்கி, சிறிது நெய் விட்டுக் கிளற வேண்டும்.
சிக்கன் கீமா புலாவ்
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.