தேவையான பொருட்கள்:
கோழிக்கறி - அரைக்கிலோ
பச்சைமிளகாய் - 5
தக்காளி - 5
பெரிய வெங்காயம் - 2
மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா ஒரு தேக்கரண்டி
பூண்டு - 8
இஞ்சி சிறிய துண்டு
நெய் - 4 மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
கொத்தமல்லித்தழை ஒரு கைப்பிடி
செய்முறை:
இஞ்சி, பூண்டினை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாணலியில் நெய் விட்டு முதலில் இஞ்சி, பூண்டு நறுக்கியவற்றைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் கொத்திய கோழிக்கறியினை சேர்த்து, கரம் மசாலாத் தூள், மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றையும் சேர்த்துப் புரட்டி மிதமான தீயில் நன்கு வேகவிட வேண்டும்.
கறி முக்கால் பாகம் வெந்த நிலையில் நறுக்கின தக்காளியைச் சேர்த்து, தீயை சற்று அதிகமாக்கி நெய் பிரியும் வரை வதக்க வேண்டும். அதன்பின் பொடியாய் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கறி நன்கு வேகும் வரை வைத்திருந்து வெந்தவுடன் இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
மொஹல் சிக்கன் கறி
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.