தேவையானவை:

சிக்கன் ....... 1 /4 கிலோ
பெல்லாரி.....3
தக்காளி.........3
பூண்டு.............10 பல்
இஞ்சிபூண்டு பேஸ்ட் .. 1 தேக்கரண்டி.
மிளமாய்த் தூள் .............. 1 தேக்கரண்டி.
மல்லி தூள்........................... 1 தேக்கரண்டி.
சீரகத் தூள்............................. 1 /2 தேக்கரண்டி.
மஞ்சள் தூள் ........................... கொஞ்சம்
புதினா.......................................கைப்பிடி
எண்ணெய்...................................50 மில்லி
முந்திரி........................................10
எலுமிச்ச சாறு .................... 1 தேக்கரண்டி.
பால்.......................................100 மில்லி
பட்டை.........................................சிறு துண்டு
உப்பு .........................................தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை நன்றாக கழுவவும். பெல்லாரியை நீள வாக்கில் நைசாக நறுக்கவும். தக்காளியையும், எட்டு துண்டாக வெட்டவும். பூண்டை லேசாக தட்டி வைக்கவும். முந்திரியை வறுத்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்ததும், பட்டையைப் போடவும். பட்டை சிவந்ததும் அதில் வெங்காயம் + உப்பு போட்டு நன்கு வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கி சிவந்த பழுப்பு நிறம் வந்ததும், அதில் சிக்கன் , இஞ்சிபூண்டு பேஸ்ட், தட்டிய பூண்டு, எலுமிச்சை  சாறு விட்டு நன்கு வதக்கவும். மஞ்சள் பொடி+ சீரகப்போடி போட்டு வதக்கவும். புதினாவையும் போட்டு வதக்கவும். தேவையான அளவு உப்பு போடவும். பின்னர் அதிலேயே பால் ஊற்றவும். நன்கு கிளறி விடவும். ஒரு 5 நிமிடம் மூடி வைக்கவும்.

பத்து நிமிடத்திற்குள் அனைத்தும் நடந்து விடும். இறக்கி முந்திரி தூவி பரிமாறவும். சுவை சும்மா பட்டையை கிளப்பும்.

Pin It