தேவையானவை:

chicken_gingili_kabab_450 சிக்கன்.........1 /4 கிலோ
 இஞ்சிபூண்டு கலவை...1 தேக்கரண்டி
 மிளகாய் பொடி....1 /2 தேக்கரண்டி
 மல்லி பொடி.. 1 /4 தேக்கரண்டி
 சீரகப் பொடி.. 1 /4 தேக்கரண்டி
 மஞ்சள் பொடி...சிறிது.
 சோயா சாஸ் .. 1 தேக்கரண்டி
 தயிர்................... 1 தேக்கரண்டி
 எலுமிச்சை....... 1 /2 தேக்கரண்டி
 சோள மாவு...... 5 தேக்கரண்டி
 அஜினமோட்டோ ..கொஞ்சம்
 பொரிக்க எண்ணெய்...100 மில்லி
 கசகசா................... 1 தேக்கரண்டி
 எள்........................... 1 தேக்கரண்டி
 சோம்பு................. 1 /4 தேக்கரண்டி
 உப்பு....................தேவையான அளவு 

செய்முறை:

சிக்கனை சின்ன சின்னத் துண்டுகளாக வெட்டி, நன்கு கழுவி, நீரின்றி பிழிந்து வைக்கவும்.  அதில், இஞ்சிபூண்டு கலவை, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடி, சீரகப் பொடி, தயிர், சோயா சாஸ், எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி சோள மாவு, அஜினமோட்டா + உப்பு இவற்றைப் போட்டு பிசைந்த பின், குளிர் பதனப்பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும். 

 ஒரு தட்டில் மீதமுள்ள மாவு, கசகசா, எள், சோம்பு போட்டு கலக்கவும். இந்த மாவில் சிக்கன் துண்டுகளைப் போட்டு பிரட்டி வைக்கவும்.

 அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் மாவில் பிரட்டிய சிக்கன் துண்டுகளைப் போடவும்.  தீயைக் குறைக்கவும். கொஞ்ச நேரத்தில் பிரட்டி விடவும். எண்ணெயில் 5 -7 நிமிடம் வெந்ததும், அதனை ஒரு குச்சியால் குத்திப் பார்த்தால், சிக்கன் வெந்திருந்தால், குச்சி சிக்கன் துண்டில் உள்ளே சர்ரென்று இறங்கும்.

பின் சிக்கன் ஜிஞ்சிலி கபாபை எண்ணெயிலிருந்து எடுத்துவிடவும்.

சூடாக இதனை எண்ணெயிலிருந்து எடுத்த உடன், அதன் மேல் இரண்டு கரண்டி தேன் ஊற்றி சாப்பிட்டுப் பாருங்கள்.. சுவை உங்களை எங்கேயே தூக்கிச் சென்றுவிடும்.

Pin It