தேவையான பொருட்கள்:
ரவை - 250 கிராம்
இறால் – 250 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 மேசைகரண்டி
கேரட் - 1
கொத்தமல்லி இலை - கொஞ்சம்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணை - 6 தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
இறாலை நன்கு சுத்தப்படுத்த வேண்டும். பின்பு கழுவி மஞ்சள்தூள் போட்டு சுருட்ட வேண்டும். ரவையை கருகாமல் வறுத்து ஆறவைக்க வேண்டும். சட்டியை காய வைத்து பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு வெடித்ததும் வெங்காயத்தையும் கேரட்டையும் வட்டவடிவமாக அரிந்து அதையும் சேர்த்து வதக்க வேண்டும்.
அதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்பு தக்காளி, கொத்துமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் மிளகாய் தூள், உப்பு சேர்த்து வேகவிட வேண்டும். வெந்தததும் இறாலை சேர்த்து இலேசான சூட்டில் ஐந்து நிமிடம் விட வேண்டும்.
ஒரு கப் ரவைக்கு ஒன்றரை பங்கு வீதம் தண்ணீர் ஊற்றி கொதிவந்ததும் ரவையைக் கொட்டி தீயைக் குறைத்து நெய் சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- திராவிடர் கழகப் பெயர் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்ததா?
- கீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் அமைதி காத்தாரா?
- பகுத்தறிவுச் சுடர் எஸ். ஆர். இராதா
- தேனி தேசத்தில்... இலக்கிய சாரல்
- கம்யூனிஸ்ட் ஜீ. ஓ.!
- பூரண வெற்றி
- மனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது?
- அமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்
- 'மாவோ' என்றழைக்கப்படும் மாசேதுங்
- திதி
- விவரங்கள்
- ஜலீலா
- பிரிவு: மீன்
இறால் உப்புமா
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.