தேவையான பொருட்கள்:

இறால் - 500 கிராம்
முட்டை - 1
மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
மைதா - 1 மேசைக்கரண்டி 

செய்முறை:

இறாலை தலை, தோல், குடல் நீக்கி சுத்தமாகக் கழுவவும். அதை தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் மிளகுத்தூள், முட்டை, மைதா, இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் ஊற வைத்த இறாலை போட்டு ஒன்றுடன் ஒன்று ஒட்டாதவாறு பொன்னிறத்தில் வறுத்து எடுக்கவும்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.