தேவையானவை:

prawn_gravyஇறால்.......................1 /2 கிலோ
சின்ன வெங்காயம்.....கைப்பிடி/ 100 கிராம்
பூண்டு.........................10 பல்
இஞ்சி.............................சிறு துண்டு
முருங்கைகாய்............1
பீர்க்கங்காய்..................1
தக்காளி..........................2
மிளகாய்ப் பொடி...........2 தேக்கரண்டி
மல்லிப் பொடி...............2  தேக்கரண்டி
மஞ்சள் பொடி..................கொஞ்சம்
புளி....................................எலுமிச்சை அளவு
தேங்காய் (தேவையானால்).... 2  தேக்கரண்டி
சீரகம்...................................1 /2  தேக்கரண்டி
சோம்பு +கடுகு......................1 /2  தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய்.........50 மில்லி
கறிவேப்பிலை.......................ஒரு கொத்து
உப்பு ..............தேவையான அளவு

செய்முறை:

இறாலை தோல் நீக்கி நன்கு சுத்தம் செய்யவும். வெங்காயத்தை உரித்து நறுக்கவும். பூண்டு இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும். 5 வெங்காயம், தேங்காய், + கால் தேக்கரண்டி சீரகம் வைத்து நைசாக அரைக்கவும். முருங்கை , பீர்க்கு + தக்காளியை நறுக்கி வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, சீரகம், சோம்பு போடவும். கடுகு வெடித்ததும் அதில் நறுக்கிய வெங்காயம்,பூண்டு ,இஞ்சி + கொஞ்சம் உப்பு போட்டு நன்கு வதக்கவும். பிறகு அதில் முருங்கைக்காய், பீர்க்கங்காய் + தக்காளி போட்டு ௨ நிமிடம் வதக்கவும். அதிலேயே இறாலைப் போட்டு வதக்கிய பின், அதில் மிளாகாய் பொடி, மல்லி பொடி + மஞ்சள் பொடி போட்டு வதக்கவும்.பின் புளியைக் கரைத்து ஊற்றி, வேண்டிய அளவு நீர் ஊற்றி + உப்பு போட்டு கொதிக்கவிடவும்.அடுப்பை சீராக எரிய விடவும்.

காய் வெந்தபின் கறிவேப்பிலையை எண்ணெயில் பொறித்துப் போட்டு இறக்கவும். புளி வேண்டாதவர்கள் தக்காளியை கொஞ்சம் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள வீட்டில் புளிக்குழம்புப் பொடி இருந்தால், அதனையே பயன்படுத்தலாம்.

இந்த இறால் முருங்கைக்காய் குழம்பு கன ஜோராய் இருக்கும். சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம். இட்லிக்கும் இது நன்றாக‌ இருக்கும்.

Pin It