தேவையானவை:

இறால்..................1 /2 கிலோ
சின்ன வெங்காயம்.. கைப்பிடி/15
இஞ்சி......................சிறு துண்டு
பூண்டு.....................6
மிளகு.....................1 /4 தேக்கரண்டி
சீரகம்.......................1 /4 தேக்கரண்டி
சோம்பு+கசகசா........1 /4 தேக்கரண்டி
மிளகாய் பொடி...1 /4 தேக்கரண்டி
மல்லிப் பொடி.......1 /4 தேக்கரண்டி
மஞ்சள் பொடி........கொஞ்சம்
உப்பு........................ தேவையான அளவு
எண்ணெய்.............3  தேக்கரண்டி
கறிவேப்பிலை........கொஞ்சம்

செய்முறை:

iraal_masala_370இறாலை தோல் நீக்கி நன்றாக சுத்தம் செய்யவும். வெங்காயத்தை உரித்து அதில், 8 வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கவும். கழுவிய இறாலுடன், மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, மஞ்சள் பொடி + உப்பு போட்டு பிசறி 10-30 நிமிடம் வைக்கவும். மிளகு, சீரகம், சோம்பு, கசகசா, பூண்டு, இஞ்சி + 7 வெங்காயத்தை அரைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து பிசறிய இறாலைப் போட்டு, மெலிதான தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும். எண்ணெய் வேண்டாம். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு அது பொன்னிறம் வரும் வரை வதக்கவும். பின்னர் அதில் அரைத்த மசாலாவை போட்டு வதங்கிய பின், அதில் பாதிவெந்த இறாலையும் போட்டு சிறு தீயில் வதக்கவும்.

10 நிமிடம் கழிந்தபின் இறக்கி கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து போட்டு இறக்கவும். இந்த இறால் மசால் சூப்பராக இருக்கும். இதனை எதனுடனும் துணையாக இணைத்து சாப்பிடலாம்.

Pin It