தேவையான பொருட்கள்:

ஈரல்: 100 கிராம்
தக்காளி விழுது: 1 மேசைக்கரண்டி
வெண்ணெய்: 1 தேக்கரண்டி
மிளகுத்தூள்: 1 தேக்கரண்டி
கோஸ்: 40 கிராம்
இஞ்சி பூண்டு விழுது: 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய்: 1
சீரகம்: சிறிதளவு
உப்பு: தேவையான அளவு

செய்முறை:

ஈரலை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அதனுடன் கோஸ்ஸைப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

மேலும் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி விழுது, மிளகுத் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து கலக்கி வேக வைக்க வேண்டும். பின்பு தாளிக்கும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெயில் பச்சை மிளகாய், சீரகம் போட்டு வறுக்கவும். இதை ஈரல் சூப்பில் கொட்டி கலக்கி மூடி வைக்கவும்.

Pin It