தேவையான பொருட்கள்:
கறி - 500 கிராம்
பச்சைமிளகாய் - இரண்டு
தனியாதூள்- ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு - ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணை - இரண்டு தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
கரம் மசால தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கறியை நன்றாகக் கழுவி அதில் உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகு தூள், தனியாதூள் சேர்க்க வேண்டும். பச்சை மிளகாயை கால் கப் தண்ணீர் சேர்த்து அரைத்து ஊற்ற வேண்டும். இவை அனைத்தையும் மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக விட்டு தண்ணீரை வற்றவிட வேண்டும்.
ஒரு நான் ஸ்டிக் தோசை தவ்வாவில் எண்ணை ஊற்றி கரம் மசாலா தூள் தூவி கருவேப்பிலை சிறிது சேர்த்து அதில் கறியைப் போட்டு நன்கு சிவக்க வறுத்தெடுத்து பரிமாற வேண்டும்.
மட்டன் சாப்ஸ்
- விவரங்கள்
- ஜலீலா
- பிரிவு: மிலிட்டரி ஹோட்டல்
More articles by ஜலீலா
- ஆம்பூர் மட்டன் பிரியாணி (03 ஜூன் 2010)
- மிளகு கறி (25 ஜன 2010)
- மட்டன் கறி கூட்டு (25 ஜன 2010)
- கறி வடை (25 ஜன 2010)
- இறால் உப்புமா (25 ஜன 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.